அதிரையைச் சேர்ந்தவர் மீரான். அதிரையிலேயே உள்ளூர் மின்சாதன, ஹார்டுவேர் கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்து பின் சுயமாக மின்சாதன கடையை தொடங்கி நடத்தி வருகிறார்.
இவருக்கு சிறு வயதிலிருந்து ஒரு ஆசை. தனது தாய்நாட்டிற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று.
இவருக்கு சிறு வயதிலிருந்து ஒரு ஆசை. தனது தாய்நாட்டிற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று.
சிறு வயதிலேயே தென்னம்பாளையில் சிறு தோனிகளை செய்து குளத்திலும், மழைக்காலங்களில் வீதியில் ஒடும் தண்ணீரிலும் ஓட விட்டு விளையாடுவது இவரது பொழுதுபோக்குகளில் ஒன்று.
தனது தொழில் அனுபவங்கள் கைகொடுக்க இவர் உருவாக்கியிருப்பது இந்திய இராணுவக் கப்பல் மாதிரி ஒன்றை. இதற்கு INDIA SHIP ADIRAI என்று பெயரிட்டிருக்கிறார். இதற்காக இவர் செலவழித்ததோ சுமார் 20,000 ரூபாய்க்கும் மேல் என்கிறார்.
தனது மாதிரிக் கப்பல் பள்ளி மாணவர்களுக்கு நாட்டுப்பற்றையும், கண்டுபிடிப்பு அறிவையும் வளர்க்க உதவும் என்று நம்புகிறார். இதனை பள்ளிகளில் காட்சிப்படுத்த இருக்கிறார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்புகளையும், தியாகங்களையும் வரலாற்றில் மறைத்தும் திரித்தும் எழுதப்பட்டுள்ள நிலையில் இந்த அதிரை முஸ்லிம் இளைஞரின் நாட்டுப்பற்றின் விளைவாக உருவாகியுள்ள இம்முயற்சி முஸ்லிம்கள் இந்திய இறையாண்மையில், நாட்டுப்பற்றில் நம்பிக்கை வைத்து முன்னணியில் இருப்பவர்கள் என்று பறைசாற்றியுள்ளார்.
சகோ. மீரானுக்கு அதிரை பிபிசியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
9 பின்னூட்டங்கள்:
கலக்கலப்பா ! சூப்பர் கப்பல் !
வாழ்த்துக்கள் சகோதரரே !!!
மாட்சிமை மிக்கதொரு காட்சி
ARPUTHAM !PAARAATTUKKAL!!!
-Rafia
with regadrds.
சூப்பர் மீரா மொய்தீன் - உனது தேசப்பற்று,மார்க்கப்பற்று,உள்ளூர் தொழிற்பற்று.
அனைத்தும் மேலும் வளர வெற்றிபெற வாழ்த்துக்கள்!
மாஷா அல்லாஹ், மிக அருமையாக செய்திருக்கிறார். நல்ல கற்பனை வளம் நேர்த்தியான வடிவமைப்பு. செய்தவர் சொன்னது போல் ஒவ்வொரு கல்விக் கூடத்திலும் மாணவ/மாணவியருக்கு காண்பிப்பதின் மூலம் அவர்களின் கற்பனைத்திறன் அதிகரிக்கும், இது போன்ற பாதுகாப்புக் கலன்கள் நாட்டிற்காக செய்திட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்.
இதிலுள்ள நுணுக்கங்களையும், செயல்முறையையும் செய்தவர் முறையாக விவரித்தால் நன்றாக இருக்கும்.
உங்களின் ஆர்வமிக்க முயற்சிகள் மென்மேலும் தொடர வாழ்த்துகள் மீரா மொய்தீன்..
Weldon brother,may ALLAH make it MUSLIM INDIA,INSHA ALLAH.
Nice work welldone
meera ur grade
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment