அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, August 30, 2011

துபையில் பெருநாள் சந்திப்பு நிகழ்வு இனிய முறையில் நடந்தது


எல்லாம்வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாம் எதிர் பார்த்ததைவிடநமதூர் சகோதரர்களின் பெருநாள் சந்திப்பு நிகழ்வு இனிய முறையில்மனநிறைவான வகையில் நடந்து முடிந்துள்ளது.அல்ஹம்துலில்லாஹ்!

இச்சந்திப்புநிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் அனைவரும் மனமகழ்சியை தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்வினால் 30 வருடங்களுக்குமுன்பு சந்தித்த சகோதரர்கள் மீண்டும் சந்திக்க வைத்துள்ளது என்பதும், ஒருசேர ஒரு இடத்திலநமதூர் அனைத்து முஹல்லா சகோதரர்கள்சந்தித்துக் கொண்டதும் அமீரக வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதும்குறிப்பிடதக்கது. இப்பெருநாள் சந்திப்பில் கலந்துக் கொண்டவர்களில் பெரும்பான்மையினர், இதோடு இந்த நிகழ்வுநின்றுவிடாமல் இன்ஷாஅல்லாஹ் மெம்மேலும் இதுபோன்ற சந்திப்புகளை ஏற்படுத்த வேண்டுகோள் வைத்தனர்.

இந்தஇனிய சந்திப்பிற்கு அழைத்த எங்களின் அழைப்பைஏற்று ஒருமனதாக தங்கள் வருகையை பதிவுசெய்த அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியினை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த இனிய நிகழ்ச்சி இவ்வளவு சிறப்புடன் நடைபெற பெரிதும் உதவிய அனைத்து நமதூர் இணையதளத்தார்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

…… இன்னும்எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்; நன்றியுடையோருக்குஅதி சீக்கரமாக நற்கூலி கொடுக்கிறோம். (3:145)

குறிப்பு:இப்பெருநாள் சந்திப்பு நிகழ்வு பற்றி தங்களுடையகருத்துக்களையும், இதில் கலந்துக் கொள்ளாததங்களுக்கு தெரிந்த சகோதரர்களின் பெயர்,மொபையில் நம்பர், மின்னஞ்சல் முகவரிமற்றும் முஹல்லா விபரங்ககளையும் adiraiallmuhallah@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குஅனுப்பி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


என்றும்அன்புடன்,

பெருநாள்சந்திப்பு ஏற்பாட்டாளர்கள்.
adiraiallmuhallah@gmail.com













நன்றி
புகைப்படம்: இபுராஹிம்.F
காணொளிகள்: அதிரை நிருபர்; இப்ராகிம்.F

5 பின்னூட்டங்கள்:

Ashraf SMS said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல முயற்சி.என்னை போன்ற வெளிநாடு வாழ் அதிரை சகோதரர்களின் நீண்ட நாள் ஏக்கத்திற்கு இந்நிகழ்வு ஒரு வடிகாலாக அமைந்தது. இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடத்தப்படவேண்டும். அதன்மூலம் ஊருக்கு நன்மைகள் ஏற்பட வேண்டும். இனிவரும் காலங்களில் இன்னும் சிறப்பாக பெரிய அளவில் நடத்த இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

--அஷ்ரஃப் S.M.S
(Fly Link Travel, Umm Al Quwain)

Abdul Wahab said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Salam,

Alhamdurilla to see all adirai people to see in dubai thnaks to allah.

Regard's
Abdul Wahab

Riyas, Dubai. said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும். அரிதான ஆனால் மிகவும் அவசியமான ஒன்றுகூடல். ஊரில் பெருநாள் கொண்டாடும் உணர்வு இருந்தது (ஊரில் கூட பள்ளிவாசலில் சிலரைத் தான் பார்க்க முடியும். இங்கு நமதூர் சகோதரர்கள் நூற்றுக்கணக்கானோரை ஒரே இடத்தில் சந்தித்ததில் மிக மிக மகிழ்ச்சி. ஏற்பாட்டாளர்களுக்கு நன்றியுடன் கூடிய பாராட்டுக்கள்.

ரியாஸ், துபை.

zubair said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

லெ.மு.செ ஜூபைர்

அருமையான இந்த ஏற்பாடு மிக்க மகிழ்ச்சி இது போன்று வரும் ஆண்டுகளில் மற்ற நாடுகளிலும் நம்மூரை சார்ந்த மக்கள் மனகசப்புகளை நீக்கி ஒற்றுபட துஆ செய்வோம். இவற்றின் தாக்கம் இறைவன் நாடினால் நம்மூரிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

KALAM SHAICK ABDUL KADER said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மண்ணின் மைந்தர் கூடியே

மகிழ்வா லாரத் தழுவியே

எண்ணம் குளிரப் பேசியே

எல்லாம் மறந்துச் சிரிக்கவே

எண்ணி லடங்கா நினைவிலே

ஈகைத் திருநாள் கழிந்ததே

கண்ணை இமைதான் காத்திடும்

கடமை யுணர்வு கண்டுதான்

விண்ணி லிருந்து இறைவனும்

விரைந்து வாழ்த்தி யருளுவான்

யாப்பிலக்கண: மா+மா+விளம் (அரையடிக்கு)என்னும் வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்

கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கினால்

http://youtu.be/acA6CjzRTto

http://youtu.be/nX5hkCQUPzA

http://youtu.be/acA6CjzRTto

மேற்காணும் கவிதையின் விளக்கம் காணொளியின் காணலாம்

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)

அபுதபி(இருப்பிடம்)



எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com/



மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com

shaickkalam@yahoo.com

kalaamkathir7@gmail.com





அலை பேசி: 00971-50-8351499

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.