அதிக இரத்த அழுத்தத்தை இரத்தக் கொதிப்பு (Hypertension) என்று கூறுகிறோம். இரத்த அழுத்தம் குறைந்தால் லோ பிரஷர் (Hypo-tension) என்று கூறுகிறோம். இரத்த அழுத்தம், இரத்த குழாய்களின் தன்மை, இரத்தத்தின் தன்மை, இருதய துடிப்பின் அளவு போன்றவற்றிற்கேற்ப மாறுபடும். சிஸ்டாலிக் பிரஷர் இரத்தக் குழாய்களின் தன்மையை காட்டுவதாகும். உடற்பயிற்சி, கடின வேலைகள், ஓடுதல், கோபம், பயம் போன்ற உணர்ச்சிகளின் போது இதயத்துடிப்பை அதிகமாக்கி தற்காலிக இரத்த குழாய்கள் இரப்பர் தன்மையுடன் விளங்கும். வயது ஆக ஆக நரை எப்படி தோன்றுகிறதோ அதுபோல குழாய்கள் கடின தன்மை பெறுகின்றன. இரத்த அழுத்தத்தை கண்டிறிய ஸ்பிக்மோ மோன மீட்டர் என்ற கருவி பயன்படுகிறது. பொதுவாக நடுத்தர வயதினர்களுக்கு 120/80 mm of Hg. இரத்த அழுத்தம் வயதிற்கேற்ப மாறுபடும் சிஸ்டோரிக் பிரஷர் 100-140 வரை இருக்கலாம். டயஸ்டோஸிக் பிரஷர் 60௯0 வரை இருக்கலாம்.
அறிகுறிகள்: - லேசான தலை சுற்றல்
- மயக்கம்
- தூக்கமின்மை
- படபடப்பு
- தலைவலி
காரணங்களும், நிவர்த்திக்கும் முறைகளும்:
1. கொலஸ்ட்ரால்:-
நாம் உண்ணும் உணவில் நடுத்தர வயதிற்கு பின் கொழுப்பு சத்து மிகுந்த உணவு பொருள்களை தவிர்த்தல் நன்று. உணவில் மாமிச வகைகள், மீன், முட்டை முதலியவைகளை நீக்கி சைவ உணவு சாப்பிடலாம், மூட்டை வெள்ளை கரு சாப்பிடலாம். எண்ணெய் பதார்த்தங்களை குறைக்கவும். அதிக கொழுப்பு சத்து உடம்பின் பல்வேறு பாகங்களில் சேமிக்கப்படுகிறது. இரத்த குழாய்களின் உடற்பகுதிகளிலும் கொலஸ்ட்ரால் படிந்து இரத்தக் குழாயின் துவாரத்தை குறைத்துவிடுகின்றன. எனவே இரத்த அழுத்தம் அதிகமாக ஆரம்பிக்கின்றது. பெரும் பான்மையான இரத்த கொதிப்பு நோயாளிகள் இந்த வகையை சார்ந்தவர்கள்தான். இரத்தத்தில கொலஸ்ட்ரால் 250/100-க்கு அதிகமானால் ஆபத்து.
2. புகை பிடித்தல்:-
சிகரெட், பீடி, சுருட்டு, புகையிலை, பொடிபோடுதல் இவையாவும் இரத்த குழயை பாதிக்கும். இரத்த குழாயின் சுருங்கி விரியும் தன்மையை இழக்க செய்து கடினமாக மாற்றிவிடும். பெரும்பான்மையான நோயாளிகள் புகை பழக்கத்தை விட்டவுடன் பிரஷர் நார்மலுக்கு வந்துவிடும்.
3. சர்க்கரை வியாதி:-
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சரியான சிகிச்சை இல்லாமல் இருந்தால் இரத்தக் குழாய்களை பாதிக்கிறது. ஆரம்ப காலங்களில் சீராக தோன்றும் இரத்த அழுத்தம் படிப்படியாக அதிகமாகும். நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை சிகிச்சையின் போது 180 மி.கி. குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.
4. உடல்பருத்தலும், உடற்பயிற்சி இன்மையும்:-
உடற்பயிற்சியின்மை உடல்பருமனை கூட்டுகின்றன. உடல் பருமனை சமாளிக்க இருதயம் அதிகமான வேலை பளுவை ஏற்று நாளடைவில் இரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி போன்ற பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும் இதயம் நாளடைவில் பலவீனமடைகிறது. மதுபழக்கம், பகலில் தூங்குதல் போன்றவைகளும் உடற்பளுவை கூட்டுகின்றன. சிறுநீரக கோளாறுகள், நாளமில்லா சுரப்பிகள் சீர்கேடுகளினாலும் இரத்த கொதிப்பு தோன்றலாம். சுரப்பிகள் சீர் கேடுகளினாலும் இரத்த கொதிப்பு தோன்றலாம். பிரசவ காலத்தில் பெண்களுக்கு தற்காலிகமாக இரத்த கொதிப்பு ஏற்படும். சில பெண்களுக்கு கடைசி மாதங்களில் முகம், கை கால்கள் வீக்கம் இருந்தால் பிரஷர் அதிகமாக இருக்கும். டாக்சீமியா எனப்படும் இந்தக் குறைக்கு தகுந்த மருத்துவம் செய்யாவிடில் பிரசவத்தின் போது ஜன்னி போன்ற ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தலாம்.
5. உணர்ச்சி வசப்படுதல்:-
அடிக்கடி கோபப்படுதல், படபடப்புடன் இருத்தல், ஒரு செயல் நடக்கம் முன்பே பல கற்பனைகளை செய்து கொண்டு அனாவசியாமாக பயப்படுதல், எப்போதும் ஒரு பதற்றத்துடன் இருத்தல் போன்றவைகளும் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தலாம். இதற்கு ஹோமியோபதி மருந்துகள் உகந்தவை தியானம், யோகா போன்ற மனநல பயிற்சிகளையும் மேற்கொண்டு இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.
பின்விளைவுகள்: 1. மாரடைப்பு:
இரத்த கொதிப்பு உள்ள நோயாளிகளின் இதய இரத்தக் குழாய்களை ரப்பர் தன்மை குறைவதும், கொலஸ்ட்ரால் போன்ற கொழுப்பு கட்டிகள் இரத்த குழாயை அடைப்பதாலும் மாரடைப்பு தோன்றுகிறது.
2. மூளையில் இரத்த குழாய்களின் பாதிப்பு:
மூளையில் உள்ள ரத்த குழாய்கள் பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட இரத்தத்திற்கு தக்கவாறு கைகள், கால்களை செயலிழக்க செய்து பக்கவாதம் போன்ற நரம்பு மண்டல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
3. சிறுநீரக கோளாறுகள்:
தொடர்ந்து இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு நாளடைவில் சிறுநீரக பழுது ( சுநயேட கயடைரசந ) ஏற்படலாம். இரத்த குழாய்கள் சுருங்கி செயலிழக்கமின்றி சிறுநீரில் அல்புமினை வெளியேற்றும் இரத்ததில் யூரியா 40 மி.கி. மேல் அதிகமாகும். நாளடைவில் கால்களில் வீக்கமும் ஏற்படலாம்.
4. இதய செயலின்மை (Ventricular failure)
அதிக நாள்பட இதயம் அதிகமாக வேலை செய்வதால் பலவீனமடைந்து இடது வென்டிரிக்கிள் வீங்க ஆரம்பிக்கும். படிப்படியாக ஹார்ட் பெய்லியர் ஏற்பட ஆரம்பிக்கிறது. இதபோல இரத்த கொதிப்பு பல்வேறு உபாதைகளுக்கு அடிகோலுகிறது.
2 பின்னூட்டங்கள்:
பயனுள்ள மருத்துவத் தகவல் !
இதனை படிக்க மக்கள் நேரம் செலவளித்துபோல் தெரியவில்லை.... பின்னூட்டங்கள் மிக குறைவாக உள்ளது
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment