அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, July 13, 2011

காரைக்குடி - திருவாரூர் வழித்தடம்: அகல ரயில் பாதையாக மாற்றாவிட்டால் ரயில் மறியல்! மக்கள் ஆவேசம்!!

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரயில் நிலைய ஆய்வுக்கு வருகை தந்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக்கிஷனிடம் காரைக்குடி - திருவாரூர் ரயில் வழித் தடத்தை அகல ரயில் பாதையாக மாற்றவேண்டும் இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என நேற்று(12ஜூலை செவ்வாய்க்கிழமை) மக்கள் ஆவேசமாக கூறினர். 

திருவாரூர் - காரைக்குடி வழித்தடம் மிகப் பழைமையான வழித்தடமாகும். ராமேசுவரத்திலிருந்து நாகூர், வேளாங்கண்ணி வரை அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களையும் இந்த வழித்தடம் இணைக்கக் கூடியது. இந்த வழித்தடத்தை அகல ரயில் பாதையாக மாற்றக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் தென்னக ரயில்வே இதற்கான நிதியை ஒதுக்காமல் புறக்கணித்து வருகிறது.

தமிழகத்திலுள்ள குறுகிய ரயில் பாதைகள் அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்ட நிலையில், காரைக்குடி - திருவாரூர் வழித்தடம் மட்டும் இன்னும் மாற்றப்படாமல் உள்ளது.
 இந்நிலையில், தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக்கிஷன், கோட்ட மேலாளர் வைத்திலிங்கம் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தனி ரயிலில் காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பேராவூரணி ரயில் நிலையத்தில் அனைத்து கட்சிப் பிரமுகர்கள், வர்த்தக சங்கத்தினர், ரோட்டரி, அரிமா சங்கத்தினர், பொது நல அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கூடினர். கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் எடுத்தும் நிறைவேற்றப்படாமல் உள்ள காரைக்குடி - திருவாரூர் ரயில் பாதையை உடனடியாக அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டும். நாங்கள் பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. இந்த கோரிக்கை நிறைவேற தவறினால் ரயில் மறியல் செய்வோம் என பொது மேலாளரிடம் ஆவேசமாக தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொது மேலாளர் தீபக்கிஷன் உறுதி அளித்தார்.


இந்த கோரிக்கையை வலியுறித்தி அதிராம்பட்டினம் முக்கிய பிரமுகர்கள் நீண்ட நெடிய போராட்டத்தை நடத்திவருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. அவர்களின் முந்தைய கோரிக்கை: உங்களின் பார்வைக்கு,



கடந்த பல வருடங்களாக முயற்சித்து வந்த திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதை சம்பந்தமாக பல முயற்சிகளை மேற்கொண்டோம். அப்போதைய ரயில்வே அமைச்சர் திரு வேலு  அதன் பின் வந்த E அஹமது மற்றும் ரயில்வே Genarail Managaer போன்றவர்களை சந்தித்து நமது கோரிக்கையை சமர்பித்தோம். ஏன் முத்துபேட்டை சேர்த்த அப்துல் ரஹ்மான் M.P அவர்களிடமும் பல முறை M.S. தாஜுதீன் அவர்கள் பேசி வந்தார்கள்.   என்ன பயன் ?    ஏமாற்றமே !
நாம் ஓன்றுபட்டு தீவிரமாக முற்சி செய்தால் மட்டுமே அகல ரயில் பாதை திட்டம் நம் வட்டார மக்களுக்கு கிடைக்கும். புதிதாக அமைந்து இருக்கும் மாநில அரசின் ஒத்துழைப்போடு முயற்சிகள் மேற்கொண்டால் வரும் ஆண்டின் ரயில்வே RAILWAY BUDGET சேர்க்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி வெளி நாடு அதிரை வாசிகள் INDIAN EMBASSY மூலமாக தொடர்ந்து PRIME MINISTER  OF INDIA  மற்றும் RAILWAY MINISTER & CHEIF MINISTER OF TAMILNADU இவர்களுக்கு கோரிக்கை அனுப்பிவைக்க கேட்டுகொள்கிறோம்.

காரைக்குடி - திருவாரூர் வழித்தடம் அகல ரயில் பாதை சம்மந்தமாக முயற்சி செய்ய விரும்பும் அனைவரும் ஏற்கனவே தீவிர முயற்சியில் இருக்கும் அதிரை பிரமுகர்களை தொடர்பு கொண்டால் கூடுதல் பயன் தரும்; வெற்றியை நோக்கி நகர இலகுவாக அமையும்!

1 பின்னூட்டங்கள்:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இவனுங்களுக்களுக்கு கூடி கூக்குரல் போட்டவெல்லாம் கண்டுக்க மாட்டானுங்க !

இப்போதைய பலம் வாய்ந்த மிரட்டும் காரனியாக மீடியா... நாம் அனைத்து மீடியாக்களின் கவனத்தை நம் பக்கம் இழுக்க வேண்டும் அவர்களின் பார்வை நம் கோரிக்கை மீது விழ வேண்டும் !

அதற்கான ஆயத்தங்களைதான் இன்றைய காலத்தில் சாத்தியமாகும்...

தொலைகாட்சிகளாகட்டும் ! பத்திரிக்கைகளாகட்டும் ! இணையமாகட்டும் ! அனைத்து தகவல் தொடர்பு செய்தியாளர்களின் காதுகளுக்கு எட்ட வேண்டும்.

என்ன வழி !?

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.