இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொற்கிழி கவிஞர் மு. சண்முகம்.
சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் குறித்து கவிதைகள், கட்டுரைகள் எழுதியும், பேசியும் வருபவர். இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் தவறாமல் பங்கேற்று படைப்புகளை வழங்கி வருபவர்.
’வஹியாய் வந்த வசந்தம்’ என்ற நூலுக்கு சீதக்காதி அறக்கட்டளையின் ஷேக் சதக்கத்துல்லாஹ் அப்பா பரிசினைப் பெற்றவர். இந்நூல் 1990 ல் கீழக்கரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் வெளியிடப்பட்டு தற்பொழுது முதுவை காஹிலா பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
இளையான்குடியில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்வின் போது நேற்று 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்
தனது பெயரை ஹிதாயத்துல்லா என மாற்றிக் கொண்டார்.
இத்தகவலை சிங்கப்பூர் ஆடிட்டர் பெரோஸ்கான் 18.07.2011 திங்கட்கிழமை காலை அலைபேசியில் இளையான்குடியில் இருந்து தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
தகவல் இளைஞான்குடி யூசுப், பென்சில்வேனியா, அமெரிக்கா
3 பின்னூட்டங்கள்:
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ் - நற்செய்தியே பதிந்தீர் !
பிரபலமானவர்கள் இஸ்லாத்தை தழுவுகிறார்கள் என்பதுதான் செய்தியாக நமக்கு எத்தி வைக்கப் படுகிறதே தவிர, நம் அன்றாட வாழ்வுதனை கண்டு நம்மோடு உழலும் மாற்று மதச் சகோதரகளை எந்த அளவுக்கு நம் செயல்களால், நன்மைகளால் அவர்களின் மனங்களை வென்றெடுத்து அவர்களிடம் இஸ்லாத்தை எத்தி வைத்திருக்கிறோம் !?
மாஷா அல்லாஹ் !
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment