இன்று அதிகாலை (22/03/2012) சென்னையில் இருந்து தொண்டி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து (3 ஸ்டார்) அதிரை வண்டிப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது பேருந்தின் பின் புறத்திலிருந்து தீ பற்ற ஆரம்பித்தது. பின் புறம் வாகனத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் பஸ்ஸை மறித்து விசயத்தை சொன்னவுடன் பேருந்து உடனே நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டது. பெரும் உயிர் சேதம் இறைவன் அருளால் தவிர்க்கப்பட்டது. பின்புறம் ஏற்றப்பட்ட எமஹா பைக்கிலிருந்து ஏற்பட்ட பெட்ரோல் கசிவே தீ விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. விபத்தை அறிந்த அதிரையை சேர்ந்த சகோதரர்கள் எறிந்த பொருட்களை சரி செய்தனர் மேலும் பயணிகளை ராஹத் பஸ் மூலம் தொண்டிக்கு அனுப்பி வைத்தனர்.
படங்கள் உதவி : அகமது முகைதின் (பொட்டியப்பா)
6 பின்னூட்டங்கள்:
போர்க்கால அடிப்படையில் உதவிய அதிரை சகோதரர்களின் சேவை பாராட்டுக்குரியது.
புக்கிங் ஏஜண்டுகள் சொற்ப காசுகளை வாங்கி கொண்டு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை (Inflammable articles) பேருந்தில் ஏற்றிவிட்டு பயணிகளின் உயிருடன் விளையாடுகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கதக்கது.
இரு சக்கர வாகனங்களை பஸ் மற்றும் ரயிலில் ஏற்றும்போது பெற்றோலை காலி செய்துவிட்டுத்தான் ஏற்றவேண்டும் என்ற சாதாரண நடைமுறை கூட பின்பற்றப்படவில்லை. நல்லவேலை இறைவன் அருளால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது
பஸ்சில் உள்ள அனைத்து உயிர்களையும் காப்பாற்றிய அதிரை சகோதரர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும்,துஆக்களும்.
பெரிய உயிர் சேதங்களையும்,விலை உயர்ந்த பஸ்சையும் காப்பாற்றிய நல்லுயுர்ந்த அதிரை சகோதரர்கள். இந்த மாதிரியான உங்கள் சமூக சேவை தொடரட்டும்.
பஸ்சில் உள்ள அனைத்து உயிர்களையும் காப்பாற்றிய அதிரை சகோதரர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும்,துஆக்களும்.
பெரிய உயிர் சேதங்களையும்,விலை உயர்ந்த பஸ்சையும் காப்பாற்றிய நல்லுயுர்ந்த அதிரை சகோதரர்கள். இந்த மாதிரியான உங்கள் சமூக சேவை தொடரட்டும்.
Yentha oru Aabathum Indri kaattha
Allahuke pugal anaithum....
பஸ்ஸில் இருந்த எல்லா உயிர்களையும் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment