புதுப்பள்ளியின் கட்டுமான பணிகள் நடைப்பெற்று வருவதை படத்தில் காணலாம். தொழுகைக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட இடத்திலிருந்து மாற்றி தற்பொழுது தொழுகை, கட்டுமான பணிகள் நடைப்பெற்று வரும் புதுப்பள்ளியின் உள்ளேயே நடைப்பெற்று வருகிறது.
சென்ற ஆண்டு ரமலானில் அரைகுறையாக இருந்த புதிய கட்டிடத்தில் தொழுகை நடத்தப்பட்டு வக்ப் செய்யபட்டது. பின்னர் பணி முடிக்கப்படாததால் மீண்டும் பழைய கொட்டகையிலேயே தொழுகை நடைபெற்றுவந்தது. மழைகாலம் தொடங்கியுள்ள இத்தருணத்தில் கொட்டகையில் பராமரிப்பு பணிகள் செய்யாமல் புதிய கட்டடத்தில் தொழுகை நடைபெறுகிறது. இன்ஷா அல்லாஹ் வருகிற ஹஜ்ஜுப் பெருநாளில் முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்ப்போமாக.
3 பின்னூட்டங்கள்:
பதிவு வெளிவந்ததும் பார்க்கும்போது புதுப்பள்ளியின் கட்டுமாணப் பணிபோல் பாதியாக இருந்தது இப்போ பார்க்கும்போது விபரமாக இருக்கிறது....
வெகுசீக்கிரம் கட்டுமாணப்பணி முடிந்து எதிர்பார்த்தபடி ஹஜ்பெருநாள் தொழுகை நடந்திட அல்லது அதற்கு முன்னரே சிறப்புடன் புதுப்பொழிவுடன் மின்னிட துஆ செய்வோம் இன்ஷா அல்லாஹ்...
இதற்காக உழைப்பவர்கள் அனைவரின் செயல்கள அனைத்தௌம் அலலாஹ் அங்கீகரிப்பானாக !
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரர்களே,
நான் புதுப்பள்ளி முஹல்லாவாசி இல்லை என்றாலும் அப்பள்ளியின் பாரம்பரியம், மற்றும் முஹல்லாவாசிகள் குறிப்பாக இளைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவைகள் படிக்க படிக்க ஆவலாகவும், பாராட்டக்கூடியதாகவும் இருக்கின்றது. இதுபோல் மறுமை பிரதிபலன் ஒன்றையே கருத்தாக கொண்டு செய்யப்படும் நல்ல பல சேவைகள் நம் ஊரின் மற்ற எல்லா முஹல்லாக்களிலும் பரவலாக்கப்பட வேண்டும்.
குளக்கரையில் ஒன்று கூடி அர்த்தமற்ற கருத்துக்களையும், அநாகரிக அரட்டைகளையும், பொறுப்பற்ற பேச்சுக்களையும் அள்ளி வீசிச்செல்லும் இளைஞர்கள் பலர் உள்ள இக்கால சூழ்நிலையில் மேற்கண்ட முஹல்லாவாசிகளின் பணியே ஈருலகிலும் ஏற்றம் பெற ஏற்ற பணியாகும்.
அல்லாஹ் அவர்களின் பணி மென்மேலும் சிறக்கவும் இதற்கு காரணமாக இருந்த பெரியவர்கள், மார்க்க உலமாக்கள், வாலிபர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. பரக்கத் செய்வானாக. ரஹ்மத் செய்வானாக....ஆமீன் யாரப்பல் ஆலமீன்...
மு.செ.மு.நெய்னா முஹம்மது.

தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment