நீங்கள் பார்க்கும் இந்த புகைபடங்கள் நேற்று முன்தினம் அதிரையில் மழை பெய்த நிலையில்19 வது வார்டு புதுமனை தெருவில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
அங்கு ஒரு மாதத்துக்கு முன் சிமெண்ட் சாலை போடப்பட்டு உள்ளது.அந்த சாலை திட்டத்துக்கு கடந்த திமுக ஆட்சியில் தமிழக அரசால் சுமார் ரூ 1கோடிஒதுக்கப்பட்டு உள்ளது.சாலையை முன்பு இருந்த பழைய ரோட்டை தூர்வாராமல் அதற்க்கு மேலாக சுமார் முன்று அடிக்கு உயர்த்தி போட்டு இருக்கிறர்கள். அதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெருவித்தும் அங்கு உள்ள வார்டு உறுப்பினர் (பொறுப்பு) மற்றும் அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருந்து இருக்கிறார்கள்.மேலும் இந்த சாலையை மழை தண்ணிர் செல்ல வாட்டம் இல்லாமல் கட்டி இருக்கிறார்கள் .மேலும் இந்த தெருவை முறையாக இந்த வார்டு உறுப்பினர்(பொறுப்பு) சரியாக கவனிக்கவில்லை என்று புகார்கள் வருகின்றன.இங்கு அதிரை பேருராட்சி15 நாள்களுக்கு ஒரு முறை தான் குப்பையை சுத்தம் செய்கிறார்கள்.மேலும் இங்கு உள்ள மின் விளக்குகள் சரியாக எரியவில்லை.இந்த தெருவுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால் சாலை மறியலில் இடுபடபோவதாகவும் மற்றும் வரும் உள்ளாச்சி தேர்தலில் எந்த உறுபினர்க்கும் ஓட்டு போடாமல் தேர்தலை புறகணிக்க போவதாக அந்த வார்டு மக்கள் தெருவிக்கிறார்கள்.
மழை தண்ணீர் செல்ல முடியாமல் கழிவு நீரைப்போல் காட்சி அளிகிறது சிமெண்ட் சாலைஒரு செருப்பின் அளவு உயர்த்தப்பட்ட அந்த சிமெண்ட் சாலை
நேற்று முன்தினம் மழையால் பாதித்த விடுகளை படத்தில் காணலாம்
மக்கள் நடந்து செல்லும் பொது வழியில் தேங்கி கிடக்கும் மழை தண்ணிர்விட்டின் உள்ள செல்லும் மழை தண்ணிரை வெளியேற்றும் இங்கு உள்ள வாலிபர்கள்குளம் போல் காட்சி அளிக்கும் CMPலைனுக்கு செல்லும் பொது வழி
0 பின்னூட்டங்கள்:
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment