அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, September 28, 2011

உள்ளாட்சித் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனித்துப் போட்டி

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிட்டது. வலுவான கூட்டணி உருவாவதிலும், ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதிலும் மனிதநேய மக்கள் கட்சி தீவிரமாக முனைப்பு காட்டியது.

அதன்விளைவாக, கூட்டணிக் கட்சியினரின் ஆதரவோடு அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதே கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் நீடிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி விரும்பியது. ம.ம.க. சார்பில் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீது ஆகியோர் அதிமுக குழுவினருடன் பல சுற்று பேச்சுவார்த்தை களை நடத்தினர்.

போதிய கால அவகாசம் இல்லாத நிலையிலும், கூட்டணி தொடர வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடும், சிறுபான்மை சமூக மக்கள் அதிக அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெற வேண்டும் என்ற உயர்ந்த பார்வையிலும் ம.ம.க., அதிமுக குழுவினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால், கூட்டணி ஜனநாயகம், அரசியல் நியாயம் என எதைப் பற்றியும் கவலைப் படாமல், உறுதியான முடிவுகளையும் கூறாமல், வேண்டுமென்றே தாமதிக்கும் தந்திரத்தை அதிமுக கடைப்பிடித்தது.

எனவே காலதாமதத்தை கருத்தில் கொண்டும், தொண்டர்களின் உணர்வுகளை கவனத்தில் கொண்டும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து களம் காண்பது என்று உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


நன்றி: http://www.tmmk.in

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.