நேற்று (09-09-2011) நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட்ட முஹல்லா வாசிகளுக்கு பொது கூட்டம் அஸர்தொழுகைக்குப் பிறகு சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில்நடைபெற்றது . அதன் முக்கிய நிகழ்வாக வரும் உள்ளாட்சி தேர்தலில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட எழு வார்டுகளில் வார்டு உறுப்பினர்களை போட்டியின்றி தேர்ந்தெடுப்பது மற்றும் பேரூராட்சித் தலைவரை ஊரில் உள்ள அனைத்து முகல்லாவையும் ஒன்றிணைத்து தலைவரை தேர்ந்தேடுப்பது தொடர்பாக பேசப்பட்டது.
நிகழ்ச்சி நிரல்
கிராத்.இதிரிஸ்
"ஒற்றுமை" பயான்: மௌலவி முகம்மது மீரான்
Power point Presentation விளக்கம்: பேரா. அப்துல் காதர் அவர்கள் .
https://docs.google.com/present/view?id=dzd5sjb_0gq2t43d2&revision=_latest&start=0&theme=blank&cwj=true
பேரா. அப்துல் காதர் அவர்கள் பேசியபிறகு கருத்து கேட்கப்பட்டது போதிய அவகாசம் இல்லாத காரணத்தால் சிலர் மட்டுமே கருத்துச்சொல்ல முடிந்தது .
சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இந்த முயற்சியை அனனவரும் பாராட்டினர் . இறுதியாக சம்சுல் இஸ்லாம் சங்க துணைத் தலைவர் சகாபுதீன் அவர்கள் சங்கத்தின் இந்த முயற்ச்சியை ஆதரிப்பவர்களை கையை உயர்த்துமாறு கூறினார் 50% விழுக்காடுக்கும் அதிகமான மக்கள் கையை உயர்த்தி தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர். ஊர் ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட இந்த முயற்ச்சி எந்த அளவு வெற்றிபெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .
1 பின்னூட்டங்கள்:
சங்கத்திற்கு ஆதரவான கருத்து மட்டும் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது , எதிர் கருத்தையும் சற்று பரிசிலிக்க வேண்டியது அவசியம் , அதிரையின் எத்தனையோ பேரூர் ஆட்சி தேர்தல் நடந்துள்ளது ஆனால் இந்த தேர்தலுக்கு மட்டும் இந்த பரபரப்பு ஏன்?
இரண்டு காரணம் பொதுவாக சொல்லபடுகிறது
1).எம் எம் எஸ் அவர்களின் மறைவு
2).தமிழக முதல்வரின் தேர்தல் சீர்திருத்த அறிவுப்பு ( அதாவது தலைவரை மக்களே தேர்ந்து எடுப்பது )
இந்த இரு காரணங்களால் அதிரையின் பழைய பணக்காரர்கள் மற்றும் திடீர் பணகாரர்களுகும் பதவி ஆசை கொழுந்துவிட்டு எரிய பல கட்சிகளின் ஆதரவை கோரியுள்ளார்கள் அனைவருக்கும் அணைத்து கட்சியுளும் கல்த கொடுக்கப்பட்டுள்ளது
சூழ்ச்சி வலைகள் பின்னப்பட்டு சம்சுல் இஸ்லாமை ஒரு கருவியாக பயன்படுத்தி கல்வி,பொருளாதார நிலை, சமூக அக்கரை, மார்க்க ஈடுபாடு போன்ற தகுதிகளின்
அடிபடியில் என்று பிதற்றபட்டு
கல்வி
பஞ்சயத்து போர்டுக்க வர என்ன கல்வி தகுதி வேண்டும் என்று சொல்லப்படவில்லை
பொருளாதார நிலை
பொருளாதார நிலையில் ஸ்ட்ரோங்க இருபவர்களை முனிறுத்த பட்டுள்ளது ,
பள்ளி நிறுவகம் பொதுவாக அதிரையில் பணம் படைத்தவர்கள் கையில் இருப்பது இந்த உலகம் அரித்த உண்மை அவர்களின் ஆதரவின் அடிபடையில் தேர்ந்து எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது
சமூக அக்கரை
சமுக அக்கறை அப்படி ஒன்னு யாருக்காவது இருந்த சொல்லுங்க
மார்க்க ஈடுபாடு
மார்க்க அடிபடையில் தேர்ந்து எடுக்க வேண்டும் என்றால் முதல் உரை நடத்திய ஷைக் மௌலான மௌலவி முஹம்மது மீரான் அவர்களைத்தான் இந்த சங்கம் சேர்மனாக அறிவிக்க வேண்டும்
அக இது முழுக்க முழுக்க பணம்படைதவர்கள் பதிவிக்கு வரவேண்டும் என்ற சூழ்ச்சியே தவிர வேற எதுவும் இல்லை
டைரியின் டிஸ்கி
பணம் பத்தும் செய்யும்
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment