அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Saturday, September 10, 2011

அதிரையில் நல்லிணக்கத்திற்கான நற்சேவை - 11-09-2011 அன்று நேரலையாக நமது அதிரை பிபிசியில்..



அதிரையில் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் நடத்தும் சமுக நல்லிணக்க பொதுக் கூட்டம் மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா இன்ஷாஅல்லாஹ் நாளைய தினம் (11-09-2011) மாலை 05:00  நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை நமது அதிரை பிபிசி நேரலை செய்யும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.



  "படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பமாகும்" எனும் நபிமொழிக்கிணங்க. சாதி, மதம், இனம், குலம் போன்ற பாகுபாடுகள் பார்க்காமல், பாதிப்பிற்குள்ளானவர் யாராயிருந்தாலும், அவசர உதவி தேவைப்படுவோர் எவராயிருந்தாலும், அவர்களுக்கு அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவி கிடைக்க வேண்டும் என்பது சமூக நலம் விரும்புவோரின் எதிர்பார்ப்பாகும்; நம் இந்திய அரசுச் சாசனமும் அதைத்தான் கூறுகின்றது. எனவே, ஜனநாயக அடிப்படையிலும் இச்சேவையானது பாராட்டத் தக்கதும் வரவேற்கத் தக்கதுமாகும்.

அதிரையின் மக்கள் தொகை, வசதி வாய்ப்புகள், தேவைகள் ஆகியவற்றைக் கருத்துள் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன் நம் சமுதாய அமைப்புகளுள் ஒன்றான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அதிரைக் கிளை நமதூருக்கு ஓர் மருத்துவம் மற்றும் துயர்துடைப்பு அவசர வாகனத்தின் தேவையை உணர்ந்து, அதற்கான நன்முயற்சிகளில் முனைந்து பாடுபட்டு வந்தது.

இவ்வாகனத்தின் தேவை உணரப்பட்டபோது, இதன் விலை ஆறு லட்சமாக இருந்தது. ஆனால், அது கைக்கு வந்து கிடைத்து வாங்கியபோது, சுமார் ஒன்பது லட்சமாக உயர்ந்துவிட்டது. எனினும், நம் சமூக ஆர்வம் மிக்க (குறிப்பாக வெளிநாடுவாழ்) சகோதரர்களின் ஒத்துழைப்பினால், அத்தொகையைக் கொடுத்து இவ்வாகனம் கையகப் படுத்தப்பட்டுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்!

அதன் சமுதாய அர்ப்பணிப்பு விழா, எதிர்வரும் 11 – 09 – 2011 ஞாயிற்றுக் கிழமை மாலை ஐந்து மணியளவில் நமதூர் பேருந்து நிலையத்தின் அருகில் நடைபெற இருக்கின்றது. அவ்வமயம், த. மு. மு. க. மற்றும் ம.ம.க. மாநிலத் தலைவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைகளும் பாராட்டுரைகளும் சமூக விழிப்புணர்வு உரைகளும் நிகழ்த்துவார்கள்.

கலந்துகொள்வோர்:

பேராசிரியர் டாக்டர் M.H. ஜவாஹிருல்லாஹ், MBA, MLA
S. ஹைதர் அலி (த.மு.மு.க. பொதுச் செயலாளர்)
M. தமீமுன் அன்சாரி M.A. (ம.ம.க. துணைப் பொதுச் செயலாளர்)
பேராசிரியர் J. ஹாஜா கனி M.A. (த.மு.மு.க. மாநிலச் செயலாளர்)

அதிரை த.மு.மு.க. அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது.

- அதிரை அஹ்மது
குறிப்பு : இன்ஷாஅல்லாஹ் இந்நிகழ்ச்சி அதிரைபிபிசி மற்றும் தமுமுக இணையதளத்தில்
நேரலை செய்யப்படும்.





2 பின்னூட்டங்கள்:

முஹம்மது அப்துல்லாஹ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

அல்ஹம்துலில்லாஹ்! நன்றாக முடிந்தது அவசர ஊர்தி(ENCALUBMA) அர்ப்பணிப்பு விழா. இந்தப் பொதுகூட்டத்தில் சிறப்புரையாற்றிய அனைவரின் பேச்சுக்களும் மக்களை நன்றாக கவர்ந்தது!! மேலும் அணைத்து சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த அவசர ஊர்திக்கு அதிரை தமுமுக-விற்கும், மற்றும் உதவிச் செய்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் அவனுடைய கிருபை செய்வானாக!!! ஆமின். தொடரட்டும் சமுக பணி!!! மனித நேயம் பற்றிக்கொள்ளட்டும்!!!

Muhammad abubacker ( LMS ) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜாதி,மதம் வேறுபாடில்லாமல் சமய நல்லிணக்கத்தோடு அனைவரும் பயன் படுத்தும் விதத்தில் இணையத்தில் தமிழை வார்த்து தந்த இணையத்தள அறிஞர்.காலம் சென்ற அதிரை ஹாஜி உ(த்த)மர் தம்பி அவர்களின்.சாதனைகளை பற்றி.
த.மு.மு.க நடத்திய சமய நல்லிணக்கம்.ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழாவில் யாரும் சொல்லிக்காட்டாமல் பத்தாவது நபர்களோடு பதினோராவது நபராக வெறும் நினைவு பரிசோடு நிறுத்தி கொண்டதுதான் வேதனைக்குரியது .

தான் பிறந்த மண்ணிலேயே இந்த இருட்டடிப்பு என்றால் பிற மண்ணை என்னவென்று சொல்லுவது.?

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.