நேற்று (23/9/2011) அதிரையில் நடந்த INTJ பொதுக்கூட்டத்தில் தஞ்சை INTJ வின் செயலர் சாஜித் பாட்சா தலைமை வகித்தார் . ஜாபர் அவர்கள் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். சிறப்புரை ஆற்றிய சகோ.யூசுஃப் மிஸ்பாஹி அழைப்பு பனியின் அவசியம் குறித்து சிறப்பாக உரைநிகழ்த்தினார்.
பின்னர் பேசிய மாநில INTJ வின் செயலாளர் செங்கிஸ்கான் அவர்கள் இந்திய தண்டனை சட்டமும் இஸ்லாமிய தண்டனை சட்டமும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட சாந்தன், பேரறிவாளன்,முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனைக்கு இஸ்லாம் என்ன கருத்துச் சொல்கிறது என்று ஆணித்தரமாக இஸ்லாத்தின் கருத்தை முன்வைத்து உரை நிகழ்த்தினார்.
இறுதியாக உரை நிகழ்த்தி பேசிய INTJ வின் மாநில தலைவர் பாக்கர் அவர்கள் "இஸ்லாமிய பார்வையில் உண்ணாவிரத நாடகமும் ஊடக பயங்கரவாதமும்" என்ற தலைப்பில் உணர்ச்சிப்பூர்வமான உரை நிகழ்த்தினார். 10 வருடங்களுக்கு முன் குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்கு இன்னும் நிதி கிடைக்கவில்லை அதைப்பற்றி எந்த பத்திரிகையும் கண்டுகொள்ளவில்லை ஆனால் மோடியின் உண்ணாவிரத நாடகத்தை பத்திரிக்கை உலகம் எப்படி கையாண்டது என்பது பற்றி உரையாற்றினார்.
கூட்டத்தின் முடிவில் காரைக்குடி அகல ரயில்பாதை, முஸ்லிம்களுக்கு இட ஓதிக்கிட்டை அதிகரிக்கவேண்டும், இரண்டு நாட்களுக்கு முன் புதுப்பட்டினத்தில் நடந்த பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு நிதி கிடைக்க காவல்த்துறை நேர்மையாக நடக்கவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
0 பின்னூட்டங்கள்:
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment