ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை தருவது அவன் கற்ற கல்வி மட்டுமே .அப்படிப்பட்ட மிக உயர்ந்த கல்வியை தருவது ஆசிரியர் பணி மட்டுமே .ஆசிரியர் என்பவர் ஏணி போன்றவர் எல்லோரயும் ஏற்றிவிட்டு அந்த ஆசிரியர் ஏணி மட்டும் அந்த இடத்தில இருக்கும் அப்படிப்பட்ட ஆசிரியர் தினம் இன்று "முன்னாள் குடியரசுத் தலைவருமான மறைந்த டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளில் அவர்களின் நினைவாக கொண்டாடப்படும் ஆசிரியர் தினம் அன்று நமக்கு பிடித்த அந்த ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிப்போம்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கிய ஆசிரியர் பற்றி இரத்தின சுருக்கமாக பின்னுட்டம் இடவும்.
"ஒரு சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை தருவது சிறந்த கல்வி மட்டுமே அப்படிப்பட்ட நல்ல கல்வி தரும் ஆசிரியர்களுக்கு ஒரு சல்யுட் "
4 பின்னூட்டங்கள்:
நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும், நமக்கு ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தை கற்றுக்கொடுக்கின்றனர் # ஆதலால், இதனால் சகலமானவர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்
நல்லாசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !
HAPPY TEACHER DAY!
Here's special, Thank You...For Making me What I am Today! You made a Wonderful Difference in My Life :)
ஏக இறைவனுக்கே எல்லா புகழும் உரித்தாகுக.
பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பொறியியல் படிப்பிற்கு செல்ல முடியாமலும், பொறியிலல்லாத என்ன படிப்பு படிக்கலாம் என்னும் வகை தெரியாமலும் தவித்த என்னை, நமதூர் காதிர் மொகைதீன் கல்லூரியிலேயே இளங்கலை கணிதம் படிக்கும் படி வழிகாட்டியும், என்னுடைய படிப்பைப் பற்றி என்னிடமும் என் ஆசிரியர்களிடம் விசாரித்து உரிய நேரத்தில் உரிய முறையில் ஆலோசனைகள் வழங்கி எனக்கு உந்து சக்தியாக இருந்த/இருக்கும் என் அன்பிற்குரிய பேராசிரியர் அல்ஹாஜ் M.A அப்துல் காதர் சார் M.A. Mphil CJMC அவர்களுக்கு நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
மேலும், இளங்கலை கணிதம் முடிவடையும் தருணத்தில் எனக்கும் இருந்த மூன்று எதிர்காலத் திட்டங்களையும் (1. இத்தோடு படிப்பை நிறுத்தி விட்டு வெளிநாடு சென்று விடுவது 2. அல்லது படிப்பதானால் முதுகலைத் தமிழ் படிக்க வேண்டும் 3. அல்லது எந்தக் கல்லூரியில் முதுகலைக் கணிணியறிவியல் குறைந்த செலவில் படிக்க முடியுமோ அங்கு படிப்பது) வேண்டாம் என சொல்லி தடுத்து, 'வேறு எங்கோ சென்று படிப்பதை விட, அண்ணா பல்கலைக் கழகத்தில் சென்று படி' என்று வழி அமைத்துக் கொடுத்து, கல்லூரி விடுமுறை நாட்களிலும் கூட எனக்காக அண்ணா பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி கொடுத்து என்னைத் தயார் படுத்திய என் அன்பு மிகு பேராசிரியர் திரு வீர பாண்டியன் சார் Msc. B.Ed., அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்கிக்கொள்கின்றேன்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment