الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي أما بعد
இஸ்லாத்தை எங்களுக்கு மார்க்கமாக அங்கிகரித்து இன்னும் அதனை எங்களுக்கு நிஹ்மத்தாக ஆக்கியிருப்பதாக அல்லாஹ் சுபஹானஹுத்தாலா சொல்கிறான். எனவே, இந்த நிஹ்மத் அருளப்பட்ட நிஹ்மத்களில் மிகவுமே சிறப்பானது என்பது உறுதியானதாகும்.
இந்த சிறப்பான நிஹ்மத்தை எந்த ஒரு காரணத்திற்காக வேண்டியும் யாருக்கும் வேண்டியும் விட்டுக் கொடுக்க முடியாது. அந்த அடிப்படையில் , இந்த நிஹ்மத்திற்கு மாற்றமானது தான் ஏனைய மதங்களும் அதன் வழிப்பாடுகளும் கொண்டாட்டங்களும் ஆகும் என்பது யாவரும் அறிந்ததே.
இந்த அடிப்படையில், கிறித்தவ மார்க்கம் என்பது இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாற்றமான ஒரு மதம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இந்த கிறித்தவ மார்கத்தின் வழிபாடுகளில் ஒன்று தான் கிறித்துமஸ் பண்டிகையும் அதனை தொடர்ந்து வரக் கூடிய
கிறித்தவ புது வருட கொண்டாட்டங்களும் ஆகும்.
இந்த கிறித்தவ மார்க்க அனுஷ்டானங்களில் உள்ளது தான் அதனை முன்நோக்கி அவர்களது பண்டிகை கால அலங்காரங்களும், அதனை வாழ்த்தி , பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சியை தெரிவிப்பதும், விசேட உணவு வகைகளை பரிமாறிக் கொள்வதும், புத்தாடை அணிவதும், சுப நேர கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதும் ஆகும்.
இந்த நடவடிக்கைளுக்கு ஒத்துழைப்பாக வியாபாரிகளும் பொது மக்களும் இந்த கொண்டாட்டத்திற்கு வேண்டிய பொருட்களையும் சேவைகளையும் விசேடமாக வழங்குபவர்.
இப்படியான இந்த கிறித்தவர்களின் விசேடத்திற்கு எம்முடைய முஸ்லிம்களும் விசேட ஏற்பாடுகளை செய்து கொடுத்து , அல்லாஹ் அருளிய நிஹ்மத்தை விற்று விளையாடுகின்றனர். முஸ்லிம்களும் தனது வியாபார ஸ்தாபனங்களை அலங்கரிக்க வேண்டுமா ? விசேட கழிவு விலையில் விற்பனை செய்ய வேண்டுமா ? நத்தார் க்கு என்ற குறிப்பிட்ட அலங்கார பொருட்களை முன்கூட்டியே இறக்குமதி செய்து விநியோகிக்க வேண்டுமா ? நத்தார் மற்றும் புது வருட விசேட வாழ்த்து அட்டை அச்சிட்டு விற்பனை தான் செய்ய வேண்டுமா ? வங்கிகளில்
சுபவேளை கொடுக்கல் வாங்கல்களில் தனது பங்களிப்பை தவறாமல் செலுத்தத்தான் வேண்டுமா ?
சுபவேளை கொடுக்கல் வாங்கல்களில் தனது பங்களிப்பை தவறாமல் செலுத்தத்தான் வேண்டுமா ?
இவைகள் அனைத்தையும் செய்வதற்கு உலமாக்கள் என்ற மௌலவிகளின் பத்வாக்களும் , மார்க்க உபன்னியாசங்களும் தான் பஞ்சமா ?
இப்படி அல்லாஹ் அருளிய நிஹ்மத்தான தீன் இஸ்லாம் என்பதை கூட மறந்து, அல்லாஹ்வின் உரிமைக்கே முஸ்லிம் முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை கூட மறந்து , யூத நசாரக்களின் கொண்டாட்டங்களுக்கு தனது ஒத்துழைப்பை வழங்கு வதில் எமது முஸ்லிம்கள் பின்வாங்குவதில்லை !
கேட்டால், மத நல்லிணக்கம் என்பான், வாடிக்கையாளர் சேவை என்பான் , மாற்று மதத்தாருடன் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்பான். ஆனால், அல்லாஹ்வுடன் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்பதை
மறந்து விடுகிறான், இன்னும், அல்லாஹ்வின் நல்லிணகத்தை பெற தவறி விடுகிறான். இத்தனையையும் செய்து மாற்று மதத்தவர் உள்ளத்தை வெற்றிக் கொள்ள முனைகிறான், அல்லாஹ்வின் திருப்தியை குழி தோண்டி புதைக்கிறான்.
மறந்து விடுகிறான், இன்னும், அல்லாஹ்வின் நல்லிணகத்தை பெற தவறி விடுகிறான். இத்தனையையும் செய்து மாற்று மதத்தவர் உள்ளத்தை வெற்றிக் கொள்ள முனைகிறான், அல்லாஹ்வின் திருப்தியை குழி தோண்டி புதைக்கிறான்.
இல்லாவிட்டால், அவர்கள் எமக்கு வாழ்த்து சொன்னால் பதில் சொல்ல மார்க்க ஆதாரம் தேடுகிறான். அவர்கள் உணவு தந்தாள் அதனை எடுப்பதற்கு ஆதாரம் தேடுகிறான். பல்லின மக்கள் மத்தியில் வியாபாரம் செய்யும் போது இவைகள் தவிர்க்க முடியாது என்கிறான்.
ஆனால், இந்த பல்லின மக்கள் மத்தியில் அருமை நபியும் அருமை சஹாபாக்களும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை மறந்து விட்டான். அந்த அருமை நபியை விட, அந்த அருமை சஹாபாக்களை விட
இஸ்லாத்தை பரப்ப நவீன யுக்திகளை பாவிக்க முனைந்து , அந்த உத்தமர்களை விடவும் முந்தி , புதிய யுக்திகளை கையாள்வது ஹராம் என்பதை மறந்தும் விட்டான். அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.
இஸ்லாத்தை பரப்ப நவீன யுக்திகளை பாவிக்க முனைந்து , அந்த உத்தமர்களை விடவும் முந்தி , புதிய யுக்திகளை கையாள்வது ஹராம் என்பதை மறந்தும் விட்டான். அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.
அல்லாஹ்விடம் அங்கிகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் ஆகும். எனவே, ஏனைய எந்த மார்க்கமும் அங்கிகரிக்கவும் பட மாட்டாது அத்தோடு அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பது பாவம் என்பதனையும் நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் அருளிய மிகப் பெரிய நிஹ்மத்தான எங்கள் இஸ்லாத்தை ஒரு அணுவளவும் விட்டுக் கொடுக்க முடியாது. அதே போன்று இஸ்லாம் அல்லாத ஏனைய மார்கத்தின் எந்த வொரு காரியத்தையும் ஆமோதிக்கவும் அனுசரிக்கவும் கூடாது என்பதனையும் முஸ்லிம் உணர வேண்டும்.
இதனையே அல்லாஹ் மிகத் தெளிவாக லகும் தீனுக்கும் வழியத்தீன் என்று , உங்களுக்கு உங்கள் மார்க்கம், எங்களுக்கு எங்கள் மார்க்கம் என்று கூறி விட்டான்.
மேலும், இந்த குப்பார்களின் பண்டிகையை சம்பந்தப்பட்ட காரியங்களை அனுமதிப்பதும் , ஆமோதிப்பதும் அதில் ஈடுபடுவதும் உள்ளத்தில்
குப்ர் இருப்பதன் அடையாளம் என்று அஹுளுஸ் சுன்னா வல் ஜமாஅத் உலமாக்களின் ஏகோபித்த முடிவாக இருக்கிறது.
குப்ர் இருப்பதன் அடையாளம் என்று அஹுளுஸ் சுன்னா வல் ஜமாஅத் உலமாக்களின் ஏகோபித்த முடிவாக இருக்கிறது.
அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்து உள்ளான். இவ்வாறு அனைத்து வசதி வாய்ப்புகளையும் மனிதனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் அல்லாஹ் அந்த மனிதனிடம் கூறுவது ஒன்றே ஒன்று தான்.
''நீ என்னை மட்டுமே வணங்க வேண்டும் , எனக்கு எதையும் இணையாக்காதே''
என்பது தான் அது!
1 பின்னூட்டங்கள்:
எவர் ஒருவர் பிற மத கலாச்சரத்தை பின்பற்றுகிராரோ அவர் என்னை சார்ந்தவரில்லை என்பது நபி மொழி....சிந்திக்குமா சமுதாயம்..
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment