அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) !அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக கடந்த ( 14-01-2012 ) அஸர் தொழுகைக்குப் பின் மரைக்காயர் பள்ளியில் மொளானா மொளவி அப்துல் காதர் ஆலிம், ஹைதர் அலி ஆலிம் அவர்களின் முன்னிலையில், M.M.S. சேக் நசுருதீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற அவசரக் கூட்டத்தில், நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக ( மவுத் ) குழி வெட்டுதலில் ஏற்படுகிற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) சார்பாக வெளி மாநிலத்திலிருந்து மூன்று முஸ்லீம் சகோதரர்களை வரவழைத்து இப்பணிக்காக நியமிப்பது என்றும் அவர்களுக்கு தங்குவதற்க்காக “ ஹஜரத் சித்திக் ( ரலி ) பள்ளியில் “ அனுமதிப்பது என்றும் மேலும் இவர்களைக் கொண்டு ஒவ்வொரு வாரம் ஒரு பள்ளி என்ற வீதத்தில் நமதூரில் உள்ள ஐந்து பள்ளிகளின் மைய வாடிகளையும் ( கஃப்ர்ஸ்தான் ) சுத்தம் செய்வது என்றும் தீர்மானம் செய்யப்பட்ட இக்கூட்டத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) நிர்வாகிகள் மற்றும் செயற்க்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்ஆலோசனைகளுக்குப்பின் சகோதரர்கள் முஹம்மது அன்சர், முஹம்மது அப்சர் மற்றும் முஹம்மது மக்சூத் ஆகியோர்கள் பீகார் மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்டு தற்சமயம் நமது தக்வா பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்கள்.மேலும் இவர்களை தொடர்பு கொள்ள இலகுவாக நமதூரில் உள்ள அனைத்து மஸ்ஜித்களிலும் அறிவிப்பு செய்யப்படும் ( இன்ஷா அல்லாஹ் ! )இவர்களை தொடர்புகொள்ள வேண்டிய அலைப்பேசி எண்கள் :முஹம்மது அன்சர் : 7418808648, 9750197162
இப்படிக்கு, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF )அதிராம்பட்டினம்
இப்படிக்கு, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF )அதிராம்பட்டினம்
3 பின்னூட்டங்கள்:
நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக ( மவுத் ) குழி வெட்டுதலில் ஏற்படுகிற சிரமங்களை கருத்தில் கொண்டு, கடந்த மூன்று மாதங்களாக கடும் முயற்சி செய்து இப்பிரச்சனைகளை அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் கவனத்திற்கு ( AAMF )கொண்டு வந்ததோடு அல்லாமல் இம்மூன்று சகோதரர்களையும் பிகார் மாநிலத்திலிருந்து நமதூருக்கு அழைத்து வந்த சகோ. B. உமர் தம்பி ( செயலாளர் - மஸ்ஜித் தக்வா பள்ளி )அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அல்லாஹ் அவர்களுக்கு நன்மைகள் பல வழங்குவானாக ! ஆமின் !
எது நடந்தாலும் நல்லது நடக்கட்டும் B.உமர்தம்பி காக்கா அவர்களுக்கு இந்த முழு முயற்சி எடுத்தமைக்கு வாழ்த்துக்கள். பீகார் மாநிலத்திலிருந்து நம் அதிரை நகருக்கு கொண்டு வந்து சேர்த்துயிருக்கிரார்கள் மிக சந்தோசமான விஷயம்.
அல்ஹம்துலில்லாஹ் இது ஒரு சிறந்த முயற்சி....
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment