நேர்வழியின் சத்திய மார்க்கம் நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் என்பது பலரும் அறிந்த உண்மை. அறிந்தும் சிலர் ஏற்க மறுக்கிறார்கள். அறியாமலிலே பலரும் இருக்கிறார்கள் அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழியை வழங்குவானாகவும்!
நமது சுற்றுப்புறங்களிலே தவ்ஹீத் கொள்கைகளைப்பற்றி விளக்கத்துடன் அவ்வப்பொழுது ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டுருக்கிறது. அவர்களின் வாழ்க்கைக்கும் அவர்கள் எடுத்துரைக்கும் உண்மையான செயலுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவான்.
தவ்ஹீத் கொள்கையை எடுத்துரைக்கும் நாம் பொறுமையாகவும், புரியாதவர்களுக்கு புரியக்கூடிய வகையிலும் தன்னுடைய இறைவனுக்கு பயந்தும் எடுத்துரைப்பவர்களாக இருக்க வேண்டும். ஒரு சில ஹதீஸ்களை தெரிந்துக்கொண்டும், யூகத்தின் அடிப்படையிலும் இஸ்லாத்தில் இல்லாத கருத்துகளையும் குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்கள் கூறாத கருத்துக்களையும் தன் மனம் விரும்பிய போக்கில் சொல்லவும் வேண்டாம். இஸ்லாம் என்றுமே உண்மையானது. இதை யாருமே மறுக்கமுடியாது. ஆனால் இஸ்லாமிய (முஸ்லிம்) மனிதர்கள் பலரின் போக்குகள் உலக வாழ்க்கைகாக இன்றைய காலத்தில் சற்தே மாறுபட்டிருக்கிறது. இதன் போக்கிலே தவ்ஹீத் கொள்கைகளை கொண்டு செல்லாமல் அல்லாஹ்க்கு அஞ்சி அவனுடைய நேரான (தவ்ஹீத்) வழிகளை மக்களிடையே எத்திவைக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். மேலும்
இன்றைய அமைப்புகளில் தவ்ஹீத் கொள்கைகள் எப்படி பிரச்சாரம் செய்யப்படுகிறது சற்று சிந்தித்து பாருங்கள்.
சில மாற்றுமத சமுதாயத்தவர்களிடம் இஸ்லாமிய கொள்கைகளை எத்தியவைக்க அமைக்கப்பட்ட கூட்டத்தில் நடந்தவற்றை பெருமையாய் கூறுகிறார்கள்.
* கிருத்துவர்களிடம் கேள்வி கேட்டு மூச்சுத்திணவைத்த இஸ்லாமிய அமைப்பு
* எங்களின் கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கும் மாற்றுமதத்தவர்கள் என்று உலகெங்கும் பெருமையாய் செல்லும்
மின் அஞ்சல்கள். இது போன்று வார்த்தைகள் அவர்களுக்கு கோபத்தைதான்
தூண்டுமே தவிர சிந்திக்க தூண்டாது.
ஏன் நம்முடைய நிலைபாடுகள் அழகான முறையில் தர்க்கம் செய்யுங்கள் என்ற இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமாய் சென்று கொண்டிருக்கிறது?
* அடாவடித்தனமான வார்த்தைகள், காவல்நிலைய நடவடிக்கைகள் இது போன்ற செயல்பாடுகள் மக்களுக்கு அதிகபடியான தவறுகள் செய்ய தூண்டுகோலாயிருக்கிறது.
* தேவையில்லாத யூகங்களை தோன்ற வைப்பது. தேவையில்லாத உலக நடவடிக்கைகளை இஸ்லாத்துடன் ஒப்பிட்டு பார்ப்பது.
* தன்னுடைய அவசர கோலத்தல் இஸ்லாமிய கொள்கைக்கு சம்மந்தமில்லாத வார்த்தைகளை கூறி அதை தன் பேச்சுத்திறமையால் மறைக்க நினைப்பது.(அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்)
* தற்பெருமைகளுக்காக எதனையும் செய்ய முயற்சிக்காதீர்கள, பெருமைக்கும், புகழுக்கும் உரியவன் அல்லாஹ் மட்டுமே.
* அரசிவாதிகளுக்காக அவரிடம் பணத்தை பெற்றுகொண்டு வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு ஓட்டுகேட்க வாருங்கள் என்று அழைத்து செல்வது.
அல்லாஹ் அஞ்சி அவனுடைய நேர்வழியை எத்திவைக்க நினைக்கும் நம்முடைய நிலைபாடுகளை யோசித்து பார்ப்போம். தவறான வழிமுறைகளை உணர்ந்துக்கொண்டும் பெருமைக்கும், புகழுக்கும் உரியவன் அல்லாஹ் மட்டுமே என்று அல்லாஹ் அஞ்சி இன்ஷா அல்லாஹ் நம்முடைய கொள்கையை அழகாகவும், தவறை உணர்த்துக்கூடிய வகையிலும் இருக்க முயற்சிப்போம். நேர்வழியில் அனைவரையும் அழைப்போம். அனைத்திற்கும் அல்லாஹ் போதுமானவன்.
ஒரு முஸ்லிமான மனிதனின் மேன்மை, அவனுக்கு தேவையில்லாத காரியங்களை விட்டு ஒதுங்கியிருப்பதிலே அடங்கியிருக்கிறது என ரஸூலுல்லாஹி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹஜரத் அபூஹூரைரா(ரலி), நூல் :திர்மிதி, இப்னுமாஜா).
DIGITECH. sena muna
2 பின்னூட்டங்கள்:
உன்மையான செய்திகள்
தவ்ஹீத் என்ற பெயரில் இயங்கும் இன்றைய இயக்கத்தினர்..... பிறர் உரிமைகளில் தலையிடுவதும்..... மற்றவர்களை மான்பங்கபடுத்துவதும் தான் அவர்களின் பிரதான நோக்கமாக இருக்கிறது.... திருந்தினால் கால் சிறக்கும் இல்லையேல் அல்லாஹ் விட்ட வழி.....
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment