நம்முடைய சகோதரர்கள் பலரையும் நல்லாயிருக்கியா இப்ப எங்கே இருக்கே என்று விசாரிக்கும் பொழுது, துபையிலே அதே கம்பெனியில்தான் இருக்கேன் அடுத்த மாசம் 200திர்கெம்ஸ் கம்பெனிலே ஏத்திறானுவோ செட் ஆகிவிடுவேன் என்று கூறிக்கொண்டேயிருக்கிறார்கள். அட நீ துபை வந்து எத்துனை வரும் ஆகுது என கேட்கும்பொழுது இந்து ஜூன் வந்தால் 13ம் என்று சாதரணமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல வருங்களை தாண்டியும் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. அப்படி என்ன அந்த வாழ்க்கையில்...
ஒருவர் 10 வருடம்வெளிநாட்டில் வாழ்கிறார் என்றார் தன் குடும்பத்தோடு அவர் வாழ்ந்த வாழ்க்கை 10 மாதங்களே.திருமணமாகி எனக்கு பத்துவருடம் ஆகிவிட்டது என்றால் அவரின் இல்லற வாழ்க்கை 10 மாதங்களே... சிந்தனை செய்யுங்கள்.இதில் நோய், பல வகையான வேலைகள், வீட்டுவிசேங்கள் உள்ளிட்ட அனைத்தும் அடங்கும்..
இலக்கு என்ன
நாம் வெளிநாடு போகும் இலக்கு என்ன?
இது பெயரளவில் ஜனநாயக நாடுதான். முஸ்லிம்களின் வேலைவாய்ப்புகள் மிக குறைவாக இருந்தபோதிலும். இந்த வேலைவாய்ப்புகளை பெரும் நோக்கில் நாம் மேற்கொண்ட முயற்சிகள் சொல்வதற்கில்லை ஏனென்றால் இந்த அரசு வேலைக்கிடைக்க நம்மில் பெரும்பாலோர் முயற்சிப்பதே இல்லை. படித்த பட்டதாரிகள் முதல் 10, 12, இதர வேலைகள் டைப் ரைட்டிங், கம்ப்யூட்டர், ஆபிஸ் வேலைபாடுகள் போன்றவற்றிற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளோமா? நம்மை நாமே கேட்டுப்பார்ப்போம். வெளிச்சம் கிடைக்கும். இதற்கு பெரும்பாலோரின் பதில் இல்லை என்றுதான் வரும். ஏன் என்று கேளுங்கள்?
நாம் அரசு வேலைவாய்ப்பின் அருமையை உணரவில்லை. பெற்றோர்களும் இன்றைய நிலைய அறிந்து நம்முடைய முயற்சியை தூண்டுவதில்லை. இன்ஜினியர் படித்தால் வெளிநாட்டில் நல்ல சம்பளம் என்ற எண்ணம்தான் நம்மில் இருக்கிறது. அப்படி வெளிநாடு சென்று போதிய சம்பளம் கிடைக்கவில்லை என்பது ஒருபக்கம். கிடைத்தவர்களெல்லாம் சம்பாதிக்கொண்டேயிருக்கிறார்கள் ஒரு முடிவுக்கு வரவில்லை. அடித்த கடல் அலையும் , சென்ற காலமும் திரும்பகிடைக்காது என்பது பழமொழி. வாழ்க்கை இன்பமாய் வாழ முயற்சிகள் புரிவோம்.
ஒருவர் 10 வருடம்வெளிநாட்டில் வாழ்கிறார் என்றார் தன் குடும்பத்தோடு அவர் வாழ்ந்த வாழ்க்கை 10 மாதங்களே.திருமணமாகி எனக்கு பத்துவருடம் ஆகிவிட்டது என்றால் அவரின் இல்லற வாழ்க்கை 10 மாதங்களே... சிந்தனை செய்யுங்கள்.இதில் நோய், பல வகையான வேலைகள், வீட்டுவிசேங்கள் உள்ளிட்ட அனைத்தும் அடங்கும்..
இலக்கு என்ன
நாம் வெளிநாடு போகும் இலக்கு என்ன?
இது பெயரளவில் ஜனநாயக நாடுதான். முஸ்லிம்களின் வேலைவாய்ப்புகள் மிக குறைவாக இருந்தபோதிலும். இந்த வேலைவாய்ப்புகளை பெரும் நோக்கில் நாம் மேற்கொண்ட முயற்சிகள் சொல்வதற்கில்லை ஏனென்றால் இந்த அரசு வேலைக்கிடைக்க நம்மில் பெரும்பாலோர் முயற்சிப்பதே இல்லை. படித்த பட்டதாரிகள் முதல் 10, 12, இதர வேலைகள் டைப் ரைட்டிங், கம்ப்யூட்டர், ஆபிஸ் வேலைபாடுகள் போன்றவற்றிற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளோமா? நம்மை நாமே கேட்டுப்பார்ப்போம். வெளிச்சம் கிடைக்கும். இதற்கு பெரும்பாலோரின் பதில் இல்லை என்றுதான் வரும். ஏன் என்று கேளுங்கள்?
நாம் அரசு வேலைவாய்ப்பின் அருமையை உணரவில்லை. பெற்றோர்களும் இன்றைய நிலைய அறிந்து நம்முடைய முயற்சியை தூண்டுவதில்லை. இன்ஜினியர் படித்தால் வெளிநாட்டில் நல்ல சம்பளம் என்ற எண்ணம்தான் நம்மில் இருக்கிறது. அப்படி வெளிநாடு சென்று போதிய சம்பளம் கிடைக்கவில்லை என்பது ஒருபக்கம். கிடைத்தவர்களெல்லாம் சம்பாதிக்கொண்டேயிருக்கிறார்கள் ஒரு முடிவுக்கு வரவில்லை. அடித்த கடல் அலையும் , சென்ற காலமும் திரும்பகிடைக்காது என்பது பழமொழி. வாழ்க்கை இன்பமாய் வாழ முயற்சிகள் புரிவோம்.
ஆசைகளை ஊட்டும் சோகஙகள்
இன்று பெரும்பாலோர் நான் இன்ஸ்ரன்ஸ் போட்டேன் வருசத்துக்கு 10,000 ரூபாய், 5 வருசத்துக்கு கட்டினால் போதுமாம் 6வது வருசத்துலே 2 லட்சமாகிடுமாம் 20வது வருத்துல இந்ததொகை இருபது லட்சமாகிடுமாம் என்று கூறி பல தரகர்கள் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு ஆசையை காட்டி எத்தனையோ நபர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி சென்றுள்ளார்கள். ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். உண்மையை மறைத்து ஆசையை மட்டும் அதிகபடுத்துவார்கள். இடையில் நிறுத்தினால் பணம் கிடைக்காது என்பதையயல்லாம் சொல்லவே மாட்டார்கள், முழு விபரத்தையும் சொல்லமாட்டார்கள். சிம்பாலிக்கா சொல்வார்கள் நீங்கள் ஒரு லட்சம் போட்டால் 20வருடம் கழித்து 10 லட்சம் என்று அடுத்த சில வருடம் சென்றவுடன் உங்களுடைய பணம் சேவைக்காக கொஞ்சம் பிடித்தம்போக மீதி ஃசேரில் குறைந்துள்ளது அதனால் உங்கள் பணம் அதிகமாகவில்லை மீதம் இவ்வளவுதான் என்று நாம் செலுத்திய தொகையிலிருந்து கணக்கு கழித்து மீத தொகையை கொடுத்துவிடுவார்கள் ஆசை மனிதனை அலக்களிக்கும் என்பதனை இந்த தரகர்கள் வரும்பொழுது மறந்துவிடுவார்கள் காரணம் பண ஆசை என்பதை விட நாளையக் கனவு....!.நம் பணம் எதிலும் முதலீடு செய்யம்முன் இதன் முழுவிபரத்தையும் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். தோண்டி தோண்டி கேள்வி கனைகளை கேட்கவேண்டும். நம்மை ஒரு தவறான சேவையில் சேர்த்து ஏமாறவைக்கும் தரகர்களுக்கு சரியான பாடங்களை புகத்தவேண்டும். நாளைக்காக நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்! ஆம் மறுமைநாளைக்காக நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துபாருங்கள்
7 பின்னூட்டங்கள்:
பொருளாதார தேவை என்பதை இறுதி மூச்சு வரை மனிதனால் நிறைவு செய்ய முடியாது என்பது மனித வரலாற்றிலிருந்து நாம் காலாகாலமாக கற்று வரும் பாடமாகும். எனவே அந்த ஒன்றைமட்டும் கூறிக்கொண்டு 15 – 20 வருடங்களெல்லாம் மனைவியை,பெற்றோர்களை, குழந்தைகளை பிரிந்து தனித்திருப்பவர்களை சாதாரணமாக பார்க்க முடிகின்றது.
மனம் மணம் மனம் மணம்
1985 ஆம் ஆண்டில். "என்ன மாப்ளே நீ எதுக்கு துபாய்க்கு வந்தா. நீதான் நல்லா ஊர்லே தொழில் பண்ணிக்கிட்டு இருந்தியே...... இல்ல மாப்ளே நானும் எவ்வோளவோ முயற்சி பண்ணுனே, என் தங்கச்சிமார்களுக்கு வீடு, நகை, ரொக்கம் இதல்லாம் கொடுக்க வசதிப் படமாட்டேங்குது. வேற வழி இல்ல வந்துட்டேன்.
2007 ஆம் ஆண்டில். "என்ன மாப்ளே நீ இன்னமுமா துபாயிலே வேல செயரா", நா என்ன பண்ணுவேன், என் மகள்களுக்கு வீடு நகை செய்ய வேணாமா.......?!?!?!?!?!?!..ஆமால்லே
மாற்று மதத்தவர்கள் வெளிநாட்டு சம்பாத்தியம் என்றால் "இந்த மாப்பிள்ளைக்கு நாங்கள் பொண்ணு கொடுக்க மாட்டோம் என்கிறார்கள். (ஒரு சில பேர் அமெரிக்க என்றால் பல்லை........)
நமதூர் கண்மணியான சகோதரர்கள் படித்து முடித்து சிறிது காலம் வேலை பார்த்து அனுபவம் பெற்று சொந்த தொழில் புரிய வீட்டில் 3 அல்லது 5 லட்சம் பணம் கேட்டால் அவனுக்கு கிடைக்காது. அதே நபர் படிப்புக்கும், வேலைக்கும் சம்பந்தம் இல்லாத வெளிநாட்டு வேலைக்கு என்றால் 10 லட்சம் எங்கிருந்து வரும் என்று தெரியாது. (படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்காவிட்டால் பெட்ரோல் பாங்கு, சூப்பர் மார்கெட், கட்டிட தொழிலாளி என்று போக வேண்டிய கட்டாயம்)
ஒரு சில சகோதரர்கள் இன்ஜினியரிங் மற்றும் நல்ல மேற்படிப்புகள் படித்து உள்ளூரில் தனியார் கம்பெனியில் அல்லது அரசாங்க உத்தியோகத்திற்கு முயற்சிக்காமல் ஊரில் சும்மா இருப்பார்கள், அதை விட வேடிக்கை என்னவென்றால் "நீ இன்னும் வெளிநாடு போகலையா" என்று அந்த பையனிடமே கேட்பார்கள்.
சரி அப்படியே வெளிநாடு போகணும் என்று வைத்துக் கொள்வோம். MS IT , MBA , EEE படித்தவர்கள் கூட பாம்பே சென்று அங்கு ஓரிரு மாதங்கள் தங்கி பேப்பரில் வரும் துபாய், சவூதி, கட்டார் போன்ற நாடுகளின் வேலை வாய்ப்புக்காக Interveiw சென்று வர மாய்ச்சல்.
நன்கு படித்தவர்கள் பாம்பே சென்று வெளிநாடு வேலை வாய்ப்பை ஒரு மிகவும் குறைந்த சிலவுடன் பெற நிறைய வாய்ப்புள்ளது. இன்னொரு பக்கம் இந்த படித்த அப்பாவிகளுக்கு அவருடைய மாமாமார்கள், காக்க, வாப்பா போன்றவர்கள் 2 . 50 லட்சம் சிலவு செய்து FREE விசா எடுத்து ரூமில் தங்கவைத்து சாப்படுபோட்டு, இவருக்காக வேலை தேடி கொடுக்க வேண்டும். (நா வாப்பவுக்காக வேண்டிதான் படிச்சேன்........என்னால் படிக்க மட்டும்தான் முடியும்)
ஒரு கண்ணியமிக்க ஆலிமிடம் அவர் கொஞ்சம் சிரமபடுவதை தெரிந்து அவரிடம், நாங்கள் உங்களுக்கு உதவி புரிகிறோம் நீங்கள் ஏன் சிறிய தொழில் தொடங்கக் கூடாது என்றோம்., அதற்க்கு அவர், எனக்கு இன்னன்ன தேவைக்கு எத்தமாதுரி எனக்கு கிடைக்கும் வருவாய் போதுமானதாக உள்ளது, அந்தநாள் இதுவே எனக்கு போதும் என்றார். மெய் சிலிர்த்தது எங்களுக்கு. (இந்த ஆலிமை விட பத்து மடங்கு வசதி படைத்தவர்களும் பிழைப்புக்காக வெளிநாடு செல்கிறார்களே..... இதற்க்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்)
அதற்க்கு பதில் இதோ......""யாவ்லே என் மவனே யாருமே மாப்ளே கேட்டு வரமாட்டேங்குறாங்க, பேசாம அவன வெளிநாட்டுக்கு அனுப்பிர்லாமா"
ஒருவன் பிறக்கும் போது இந்திய குடிமகனாக இருப்பதால் கடனாளியாக பிறக்கிறான். (ஆளும் அரசியல்வாதிகள் நம் மக்களுக்காக செய்யும் புண்ணியம்)
*****துக்ளக் நியூஸ் குழுமம்*****
நல்ல முயற்ச்சி சகோதரரே...இது போன்றதொரு கருத்துக்களை நாம் நம் சமுதாய மக்களுக்கும் நம் பெற்றோர்களுக்கும் உணர்த்த வேண்டும். இந்த கருத்துக்களை படித்தவர்கள் அல்லது பார்த்தவர்கள் உணர்வார்களா?...நம்மில் எத்தனை பேர் உணர்வார்கள்?...இதை எத்தனை பேர் நடைமுரைபடுத்துவார்கள்?...முதலில் நம் சகோதரர்களுக்கு தொழில் தொடங்கக்கூடிய அல்லது பயிற்றுவிக்கக்கூடிய முயற்சியில் ஈடுபடுவோம்?...இதனை முதலில் நடைமுரைபடுதுவோம்?....நம் சமுதாயங்களில் எத்தனை நல்லுள்ளம்படைதவர்கள் இருக்கின்றார்கள்?...அவர்கலுடைய உதவிகளை நாடுவோம்?...இதுபோன்று ஒரு கமிட்டி அமைத்து வேண்டுவோர்க்கு மற்றும் பயில்வோருக்கு அவர்களை ஊக்கப்படுத்தினால், இன்ஷா அல்லாஹ், நிச்சயம் வெற்றிபெறுவோம்...செய்வார்களா?....
நம் சகோதரர்கள் பணம்,பணம் என்று ஆசையோடும்,மோகத்தோடும் இருந்து வருகிறார்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் ஆசை அடங்குவதில்லை இன்னும் மேலும் மேலும் சம்பாதிக்கணும் பணம் சேர்த்துக்கொண்டே போகணும் அதில்தான் குறிக்கோளாக இருக்கிறார்களே தவிர. பெற்ற தாய், தகப்பன் கட்டிய மனைவி, பிள்ளைகளை விட்டு செல்கிறோமே என்றல்லாம் அக்கறை என்பது கிடையாது. நம்ம ஊரில் வியாபாரத்திற்கு பணம் கொடுங்கள் என்று கேட்டால் தரமாட்டார்கள். அதை சமையம் விசா வந்திருக்கு பணம் தாங்கள் என்று கேட்டால் உடனே கிடைக்கும் இதுதான் நம்ம ஊரில் உள்ள நிலைமை.
பணம்..... பணம்..... பணம்......
அமெரிக்காவின் ஆணவம்.... காரணம் இந்த பணம்.....
ஆப்பிரிக்காவின் அகோர தோரணம்..... காரணம் இந்த பணம்....
பிறர் மணம் நோக காரணம்.... இந்த பணம்.....
வைத்துள்ளவன் ஆடுவான்.... இல்லாதவன் திண்டாடுவான்.... காரணம்
இந்த பணம்......
இறைவா கோடி கோடியாய் பணம் இல்லாவிட்டாலும்..... பிறர் மணம் போற்றும் பக்குவத்தை தா.....
@இதுபோன்ற துவாக்களை நம் சந்ததிகளுக்கு கிடைக்க அல்லாஹ் நல்லருள் புரியட்டும். அருமையான கருத்துகள்
ishafeek
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment