அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கோலாகலமாக குடியரசுதின விழா இன்று கொண்டாடப்பட்டது. கடற்கரைத்தெரு ஜமாத் தலைவர் Er.M.A.அகமது அலி அவர்களின் தலைமையில் ஊராட்சி ஒன்றிய தலைமையாசிரியை வரவேற்புரை வழங்கி, மாநில விளையாட்டு அளவில் பல பதங்கங்களையும் பரிசுகளையும் வென்றிருக்கும் A.அபுல் கலாம் அவர்கள் தன் வெற்றிக்கரங்களால் கொடியேற்றி வைத்தார்கள். கல்வித்துறையிலும் , விளையாட்டுத்துறைகளிலும் இன்றும் பல இளைஞர்களுக்கு வழிகாட்டிகளாகவும் ,ஆலோசனைகள் வழங்கி அனைத்துவிதங்களிலும் உதவி செய்துக்கொண்டிருக்கும் லயன்.ஹாஜி.C.முகமது இபுராகிம் அவர்கள் நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம்.
ஆனால் நமக்குள் இன்று நிலவுகின்ற முல்லைபெரியாறு பிரச்சனைகள் போன்ற பல விளக்கங்களை தெளிவாக உணர்த்தி இதுபோன்ற நிலைகள் ஏற்படாமல் மக்களின் வாழ்க்கை வெளிச்சமாகட்டும் என்றும் நிகழ்ச்சியை ஜமாஅத் தலைவர்,செயலாளர்,பொருளாளர்கள், 8வது வார்டு கடற்கரைத்தெரு கவுன்சிலர் K.S.சாகுல்ஹமீது மற்றும் இந்நிகழ்ச்சியை முன்னின்று நடத்தி தந்த M.S.முகமது அலி, J.J.சாகுல்ஹமீது அனைவரும் சிறார்களுக்கு பரிசளித்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் வழங்கினார்கள். பள்ளிதலைமையாசிரியர், ஆசிரியர் பெருந்தகைகள், ஜமாத்தார்கள் அனைவரும் குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டார்கள் . என்றும் இந்த வெற்றி முழக்கம் ஒலிக்கட்டும் என்றும் இந்த பள்ளி சிறார்களின் வெற்றிபாதைகளுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் எங்களிடம் கேளுங்கள் நாங்கள் எந்த நேரத்திலும் உதவிசெய்கின்றோம் என்று மார்புதட்டி கூறிய மாந்தர்களின் இந்த வார்த்தைகளுக்கும் இந்நாள் கோலாகல கொண்டாட்டம்தான்.
கல்வி என்றும் நிலைக்கட்டும்,
இஞைர்கள் நெஞ்சம் ஜொலிக்கட்டும்,
இந்தியாவின் குரல் எங்கும் ஒலிக்கட்டும்.
4 பின்னூட்டங்கள்:
சுப்பர்கோ போட்டோ! வாழ்த்துக்கள்.
போட்டோ அனைத்தும் அருமை.போட்டோவில் ஊர்க்காரர்களையும் சொந்தங்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி நன்றி ADIRAI BBC
இந்த நிகழ்வை படம் எடுத்து எங்களுக்கு ஊர் ஞாபகம் வரவைத்த அதிரை பி பி சி க்கு நன்றி.
நம் இந்திய நாட்டுக்கொடியயை ஏற்ற முழுத்தகுதியுள்ள எங்கள் மரியாதைக்குறிய அபுல்கலாம் மாமா அவர்கள் கொடியேற்றிய சூழல் கண்டு சந்தோசம். அவர் தனது மாணவப்பருவத்தில் ஓட்டப்பந்தயத்தில் ஸ்டேட் லெவெலில் [ State First in 100M ] பரிசு வாங்கியவர். பிரிட்டிஸ் அரசி கையால் பரிசு வாங்கிய பெருமையும் அவருக்கு உண்டு.
குடியரசு தினத்தில்... சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமிய பங்களிப்பை பற்ற இளைய சமுதாயத்திற்கு எடுத்துரைத்தால் நன்மை பயக்குமே.....?
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment