அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, January 2, 2012

பேரூராட்சிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன ? – பகுதி ( கஃபர்ஸ்தான் பராமரிப்பு )


தெரு விளக்குகள் பராமரிப்பு :


1. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மட்டும் சோடியம் ஆவிவிளக்குகள் அமைக்க அனுமதிக்கலாம்.


2. தெருவிளக்குகள் மாற்றம் செய்யும் பொது அரசால் நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.


3. மின்சிக்கணம் கடைபிடிக்க தானியங்கி சுவிட்சுகள் அமைக்கப்பட்டு செலவினம் கட்டுபடுத்தலாம்.


4. மின்கட்டணத்தை கட்டுப்படுத்த மின்சக்தி தணிக்கை ( Energy Audit ) மேற்கொள்ள வேண்டும்.


5. மின்கம்பங்களின் பதிவேடு பராமரிக்க வேண்டும்.


6. மின்சாதனங்கள், அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மூலம் பெறப்பட்ட ஒப்பந்தபுள்ளிகளின் அடிப்படையில் இறுதி செய்ய வேண்டும்.

பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல் :


1. நகர / ஊரக அமைப்புத்துறையினால் ( DTCP ) முழு மானியமாக ரூ 2.50 லட்சம் வழங்கப்படுகிறது.


2. பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் அமைத்து பயனடையலாம்.

தனிநபர் கழிப்பறை கட்டித்தரும் திட்டம் :


1. பயனாளிகள் வறுமைக்கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள்.


2. குடும்பக்கார்டுகள் வைத்திருக்க வேண்டும்.


3. சொந்த வீடு இருக்க வேண்டும்.


4. மானியமாக ரூ 1000 / வீதம் குடும்பத்திற்கு கழிப்பறை கட்ட வழங்கப்படுகிறது.


கஃபர்ஸ்தான் பராமரிப்பு :


1. கஃபர்ஸ்தானை நன்கு பராமரிப்பது நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.


2. கஃபர்ஸ்தான் பகுதியை சுற்றி சுற்றுச்சுவர் அமைதல் அவசியம்.


3. முட்செடிகள் / புதர் நிறைந்த பகுதியாக வைத்துருக்காமல் அழகு மிளிரும் வளாகமாக அப்பகுதி மேம்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.


4. தேவையான அளவில் தண்ணிர் வசதி ஏற்படுத்தி வைக்கப்பட வேண்டும்.


5. தேவையான அளவில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி வைக்கப்பட வேண்டும்.


6. அணுகுசாலைகள் அமைத்து அவற்றை நன்கு பராமரிக்க வேண்டும்.


7. ஜனாஸாக்களை சுமந்து செல்லும் வண்டிகளை ( AMBULANCE ) , பொதுமக்களுக்கு மிகக்குறைந்த வாடகையில் கிடைக்க ஏற்பாடு செய்யலாம்.

இறைவன் நாடினால் ! தொடரும்...............

குறிப்பு : சுடுகாடு : கஃபர்ஸ்தான் என்றும், உடல்கள் : ஜனாஸா என்றும் குறிப்பிட்டுள்ளேன்.
Source : Web Site of Tamil Nadu Government

4 பின்னூட்டங்கள்:

அதிரை நியூஸ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முக்கியமாக அதிரை பேரூராட்சி இதை பின்பற்ற வேண்டும். அதிரையில் உள்ள அனைத்து கஃப்ர்ஸ்தான் விசயத்தில் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும்.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

///Source : Web Site of Tamil Nadu Government ///

நம்ம தலைவர்களுக்கு இந்த வெப்சைட்டே பார்த்து கோபம் வராம இருக்கணும்.

இஞ்சிருங்க...
கட்சியின் காலி இடத்தை நிரப்புவதா... (அல்லது)
கட்சிக்காக காலி புறம்போக்கை பட்டாபோடுவதா...
கட்சியின் தலைமைத்துவத்தை பிடிப்பதா...(அல்லது)
கட்சித் தலைவரின் காதில் விழ வைப்பதா...
கட்சிக் கொடியை ஏற்றுவதா...
கட்சித் தலைவருக்காக உண்ணாவிரதம் இருப்பதா...
கட்சித் தலைவருக்காக பிறந்த நாள் கொண்டாடுவதா...
கட்சிக் காரருக்கு சிபாரிசு செய்வதா....

ஆஹா.... தப்பு பண்ணிட்டோமே...பேசாம சுயேட்சையா நின்றிருக்கலாமே....

புனைபெயா்களில் ஒருவன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சம்மந்தமே இல்லாமல் பின்னோட்டம் இட வேண்டாம்..

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தற்போது இருக்கும் அதிகார வட்டத்திற்கு விளங்குமா இது ...?

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.