அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Friday, December 16, 2011

ப்ளஸ்-2 தேர்வு கால அட்டவணை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ்-2 தேர்வு மார்ச் மாதம் 8-ம் தேதி தொடங்கி மார்ச் 30-ம் தேதி முடிவடைகிறது.

இதற்கான கால அட்டவணையை அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி  வியாழக்கிழமை இரவு வெளியிட்டார்.

ப்ளஸ்-2 தேர்வு கால அட்டவணை:

மார்ச் 8 - தமிழ் முதல் தாள்.

மார்ச் 9 - தமிழ் 2-வது தாள்.

மார்ச் 12 - ஆங்கிலம் முதல் தாள்.

மார்ச் 13 - ஆங்கிலம் 2-வது தாள்.

மார்ச் 16 - இயற்பியல், பொருளாதாரம், உளவியல்.

மார்ச் 19 -  கணிதம், விலங்கியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்.

மார்ச் 20 - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.

மார்ச் 22 - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து.

மார்ச் 26 - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்.

மார்ச் 28 - கம்மியூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய பண்பாடு, கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு மொழித்தேர்வு, தட்டச்சு தேர்வு.

மார்ச் 30 - அனைத்து தொழில்கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.

தேர்வுகள் அனைத்தும் காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிகிறது. ஆனால் மாணவ - மாணவிகள் காலை 10 மணிக்கு முன்னதாக தேர்வு அறையில் இருக்க வேண்டும்.

காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்படுகிறது. 10.10 மணி வரை வினாத்தாள் வாசிக்க நேரம் ஒதுக்கப்படுகிறது. 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளில் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்கள் எழுத நேரம் ஒதுக்கப்படுகிறது.

தனித்தேர்வர்களுக்கு...

அரசு தேர்வுகள் சென்னை மண்டல துணை இயக்குனர் ரேவதி ருக்மாங்கதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ப்ளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கூடுதலாக வழங்கப்படும் குறியீட்டு படிவத்தில் (கோடிங் ஷீட்) குண்டூசி மற்றும் ஸ்ட்ராப்லர் பின் பயன்படுத்தாமல் ஜெம்கிளிப்-ஐ மட்டும் உபயோகிக்குமாறு தனித்தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 20- மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு வரும் விண்ணப்ப படிவங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பத்தை மடிக்கக் கூடாது

விண்ணப்ப படிவம் மற்றும் குறியீட்டு படிவத்தை மடிக்காமல் நேரடியாக கொடுக்க வேண்டும். கூரியர், பதிவுத்தபால், விரைவுத் தபால் மூலம் மடித்து அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

2 பின்னூட்டங்கள்:

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்
தேர்வு கால அட்டவனையை வெளியிட்ட நீங்கள் அவர்களுக்கு இப்போதிலிருந்தே தேர்வுக்கு பொதுவான தயாரிப்புகளையும் வழங்கியிருந்தால் நன்றாக இருக்கும்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமை மாணவர்களே தங்களை தயார் படுத்திகொள்ளும் தருணம் இது.... பல பேர் பல யோசனைகள் சொல்வார்கள்.... கேள்வி தாளில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் முறையாக ஒன்றிலிருந்து ஆரம்பித்து கடைசிவரை நிதனாமாக ஒருமுறை பார்த்து விட்டு PART-Aக்கு எத்தனை நிமிடம் PART-Bக்கு எத்தனை நிமிடம் PART-Cக்கு எத்தனை நிமிடம் என்று ஒதுக்கி முறையாக சீராக அனைத்து கேள்விகளையும் விடாமல் எழுதினால் வெற்றி நிச்சயம்.

ஒன்றன் பின் ஒன்றாக சீராக எழுதினால் திருத்துபவரையும் திருப்தி படுத்தலாம்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.