அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, December 28, 2011

2011 -ன் முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை.

மார்ச் 11 ஆம் தேதி ஜப்பானில் நிகழ்ந்த மிகப்பெரிய பூகம்பம் அதை தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப்பேரலை(சுனாமி) பல்லாயிரகணக்கான உயிர்களை பலிக்கொண்டது, பல கோடி சொத்துக்களும் சேதமடைந்தன.




ஏப்ரல் 2 ஆம் தேதி டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட அணி உலகக்கோப்பையை கைப்பற்றி உலக சாம்பியன் ஆனது.



ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே வின் கிளர்ச்சி.



ஏப்ரல் - 29 ஆம் தேதி இளவரசர் சார்லஸ் திருமணம் லண்டனில் ராணி எலிசபத் முன்னிலையில் ஆடம்பரமாக(கோலாகலமாக) நடைப்பெற்றது.



மே - 2 ஆம் தேதி ஒசாமா-பின்-லேடனை கொன்றுவிட்டதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது (ஒசாமா பின் லேடன் தேடுதல் வேட்டையை வெள்ளை மாளிகையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் உயர் அதிகாரிகள்)



மே 20 ஆம் தேதி 2ஜி வழக்கில் கருணாநிதியின் மகள் கனிமொழி கைதானார்.



2011 தமிழக சட்டசபை தேர்தலில் அருதிப்பெருன்பானமையுடன் மே - 16 ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க ஆட்சிபீடம் ஏறியது.



செப்டம்பர் - 18 ஆம் தேதி சிக்கிம் மாநிலத்தில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது, சேதமதிப்பு 1 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டது.



செப்டம்பர் - 22 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடி உடல்நல குறைவால் மரணமடைந்தார்.



அக்டோபர் 5 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் தலைச்சிறந்த நிர்வாகி ஸ்டீவ் ஜாப் மரணமடைந்தார்.



அக்டோபர் 30 ஆம் தேதி உலகின் முதன்மை கார் பந்தயமான பார்முலா - 1 கார் பந்தயம் முதன்முதலாக இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைப்பெற்றது.



அக்டோபர் 31 ஆம் தேதி உலகின் 7-வது பில்லியனாவது குழந்தை( world's seven billionth baby) உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்த்தது.



டிசம்பர் - 8 ஆம் தேதி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் சேவாக் தனது அதிரடி ஆட்டம் மூலம் இரட்டை சதமடித்தார். ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார்.



டிசம்பர் - 9 ஆம் தேதி கொல்கத்தாவில் அம்ரி என்ற மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தினால் 90க்கும் மேற்பட்டவர்கள் தீயில் கருகி பலியானார்கள்.



டிசம்பர் 18 ஆம் தேதி ஈராக்கிலிருந்து அமெரிக்க ராணுவப்படைகள் முற்றிலுமாக வாபஸ் பெறப்படுவதாக அமெரிக்கா அறிவித்தது.



வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சி அதை தொடர்ந்து லிபியா அதிபர் கடாபி அக்டோபர் 20 ஆம் தேதி போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டார்.



மேற்கு வங்காளம் பிரகாஷ் நகர் கிராமத்தில் வழிதவறி சுற்றி திரிந்த சிறுத்தைப்புலி ஒன்று பல பொதுமக்களையும் மூன்று வனத்துறை காவலர்களையும் கடித்துக்கொதறியது, நீண்ட போராட்டத்துக்குப்பின் பிடிப்பட்டது.



டிசம்பர் - 26 ஆம் தேதி சென்னை அருகே பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலா பயணிகள் 22 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். (அதில் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் 20 பேர் என்பது மிகவும் பரிதாபத்திற்குரியது)



முல்லை பெரியாறு அனை விவகாரம் தமிழகம்-கேரளம் இடையே பெரும் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


தொகுப்பு:வளர்பிறை.

5 பின்னூட்டங்கள்:

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நாம் அறிந்து கொண்ட தகவலை திரும்பி பார்க்க வைத்த அதிரை BBC நன்றிகள், வாழ்த்துக்கள்.

முடிஞ்சா இந்த தகவல் தொகுப்புல நம்ம சேர்மன், துணை சேர்மன் அய்யாக்களின் பதவிப் பிரமாணத்தையும் சேர்த்து சொல்லி இருக்கலாமே...

கொசுக்கடி ஜாஸ்தியோ...

அதிரை என்.ஷஃபாத் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல தொகுப்பு. வருட முடிவில் இது மாதிரியான தொகுப்புகள் வெளியிடப்படுவது மிகப் பொருத்தம்.

கூடுதலாய்..

உலகின் கணிணித் துறையின் முன்னோடி- புரோகிராம்மிங்க் உலகின் சக்கரவர்த்தி - டென்னிஸ் ரிட்ச்சி - 'C' என்னும் கணிணி மொழியைக் கண்டறிந்தவரும் 2011-இல் தான் இறந்தார்.

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

2011 -ன் முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை.

அதிரையில் அதிரைபிபிசி என்ற வளைதளத்தின் வருகைதான் மிகவும் முக்கயமான ஒன்று அதை விட்டு விட்டிர்களே.....

இதன் மூலமாகதான் நம் ஊரைப் பற்றிய செய்திகலை அறிய முடிகிரது.....ஜசக்கல்லாஹ் ஹைர்...

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

1. மார்ச் 11 ஆம் தேதி ஜப்பானில் நிகழ்ந்த மிகப்பெரிய பூகம்பம் : பார்க்க குர்ஆனில் 11:43

2. ஏப்ரல் 2 ஆம் தேதி டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட அணி: பார்க்க குர்ஆனில் 6:32

3. ஊழலுக்கு எதிரான அன்னா: பார்க்க குர்ஆனில் 5:29

4. ஏப்ரல் - 29 ஆம் தேதி இளவரசர் சார்லஸ் திருமணம்: பார்க்க குர்ஆனில் 6:141

5.மே - 2 ஆம் தேதி ஒசாமா-பின்-லேடனை கொன்றுவிட்டதாக அமெரிக்கா: பார்க்க குர்ஆனில் 2:85

6.மே 20 ஆம் தேதி 2ஜி வழக்கில் கருணாநிதியின் மகள் கனிமொழி: பார்க்க குர்ஆனில் 8:28

7.2011 தமிழக சட்டசபை தேர்தலில் அருதிப்பெருன்பானமையுடன் அ.தி.மு.க: பார்க்க குர்ஆனில் 2:107

8.செப்டம்பர் - 18 ஆம் தேதி சிக்கிம் மாநிலத்தில் மிகப்பெரிய பூகம்பம்: பார்க்க குர்ஆனில் 7:91

9.செப்டம்பர் - 22 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடி மரணமடைந்தார்: பார்க்க குர்ஆனில் 2:180

10. அக்டோபர் 5 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் தலைச்சிறந்த நிர்வாகி ஸ்டீவ் ஜாப் மரணமடைந்தார்: பார்க்க குர்ஆனில் 39:9

11.அக்டோபர் 30 ஆம் தேதி உலகின் முதன்மை கார் பந்தயமான பார்முலா - 1 கார் பந்தயம் முதன்முதலாக இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைப்பெற்றது: பார்க்க குர்ஆனில் 6:32

12.டிசம்பர் - 8 ஆம் தேதி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் சேவாக் தனது அதிரடி ஆட்டம் மூலம் இரட்டை சதமடித்தார்: பார்க்க குர்ஆனில் 6:32.

13.டிசம்பர் - 9 ஆம் தேதி கொல்கத்தாவில் அம்ரி என்ற மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்: பார்க்க குர்ஆனில் 2:28.

14.டிசம்பர் 18 ஆம் தேதி ஈராக்கிலிருந்து அமெரிக்க ராணுவப்படைகள் முற்றிலுமாக: பார்க்க குர்ஆனில் 2:190.

15. வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சி அதை தொடர்ந்து லிபியா அதிபர் கடாபி கொல்லப்பட்டார்: பார்க்க குர்ஆனில் 3:57.

16.மேற்கு வங்காளம் பிரகாஷ் நகர் கிராமத்தில் வழிதவறி சுற்றி திரிந்த சிறுத்தைப்புலி ஒன்று பல பொதுமக்களையும் கடித்துக்கொதறியது: பார்க்க குர்ஆனில் 9:51.

17.டிசம்பர் - 26 ஆம் தேதி சென்னை அருகே பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலா பயணிகள் 22 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்: பார்க்க குர்ஆனில் 9:51.

18.முல்லை பெரியாறு அனை விவகாரம் தமிழகம்-கேரளம் இடையே பெரும் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது: பார்க்க குர்ஆனில் 67:30.

Jana said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

2011 ஆம் ஆண்டு தகவல்களை தொகுத்தளித்த தங்களுக்கு எனது நன்றியும், பாரட்டுக்களும். அன்புடன் ... ஷேக் உசேன்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.