2007-மே மாதம் 18-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது ஹைதராபாத் நகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இக்குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் அநியாயமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
இத்துயர சம்பவம் நிகழ்ந்து மறுதினம் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த ஆந்திர போலீஸ்... "ஹர்கத்துல் ஜிஹாதுல் இஸ்லாமி (HUJI), லஷ்கர்-இ-தய்யிபா (LeT), இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (SIMI), ஆகிய இயக்கத்தை சார்ந்தவர்கள்தான் இவர்கள்" என்றும் "இவர்கள்தான் குண்டு வைத்த 'இஸ்லாமிய பயங்கரவாதிகள்'...!" என்றும் பழிசுமத்தி குற்றம் சாட்டி சிறையில் அடைத்தது.
ஆனால், இறைவனின் பேரருளால் மிகப்பெரிய ஒரு வரலாற்றுத் திருப்பமாக மாவீரர் ஹேமந்த் கார்கரே எங்கிருந்தோ வந்தார். வெடிகுண்டு வழக்குகளில் பூகம்பத்தை நிகழ்த்தினார். இந்த ATS விசாரணை பின்னணியில்... மாலேகான் அப்புறம்... ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் உட்பட பல குண்டுவெடிப்புகளிலும், அவற்றை நிகழ்த்தியதாக ஆதாரத்துடன் ஹிந்துத்வா RSS பயங்கரவாத குழுக்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டனர்.
அங்கே, ஏற்கனவே கைதான முஸ்லிம் நிரபராதிகளில் ஒருவரான அப்துல் கலீம் என்ற சீரிய சிறந்த முஸ்லிம் பண்பாளரின் கண்ணியமான பழக்கவழக்கத்தினால் மனம் மாறியஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி கைதி அசீமானந்தா என்பவன்... " ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கட்டளைக்கு ஏற்ப தான் இங்கே ஹைதராபாத்திலும், தன் ஹிந்துத்துவா சகாக்கள் மாலேகான், அஜ்மீர், சம்ஜோதா போன்ற ஏனைய இடங்களிலும் குண்டு வைத்தவர்கள்.. மாறாக இந்த முஸ்லிம் இளைஞர் அப்பாவி..."" என்று மாஜிஸ்ட்ரேட் முன்பு அதிரடி ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததும் நாம் அறிந்ததே.
இதன்பின்னர் மீண்டும் ஹைதராபாத் வழக்கு சரியாக விசாரிக்கப்பட்டு, எவ்வித ஆதாரங்களும் இன்றி கைது செய்யப்பட்டு சில ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட அப்பாவி நிரபராதி முஸ்லிம் இளைஞர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வழக்கில் ஆந்திர போலீசாரால் அநியாயமாக ஆதாரமின்றி கைது செய்யப்பட்ட 70 முஸ்லிம் இளைஞர்கள்... நிரபராதிகள் என்பது நிரூபணமானதால் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர். அப்போது, "வழக்கில் நியாயமாக கைது செய்யப்பட்ட அனைத்து நிரபராதிகளிடமும் மன்னிப்புக்கோருவேன்" என ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி அறிவித்தார். ஆனால், இவர்களுக்கு உடனடியாக தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும் என நேற்று முன்தினம் ஆந்திர சட்டசபையில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீனின்(MIM) கட்சியின் தலைவர் அக்பருத்தீன் உவைஸி வலியுறுத்தினார்.
நம்நாட்டில்.. நம் தமிழகத்தில் இது போன்று பல வழக்குகளில் 'குற்றவாளிகள்' என சந்தேகத்தின் பேரில் ஆர்ப்பாட்டமாக தலைப்புச்செய்தியில் அமர்க்களப்படுத்தி கைது செய்யப்படுபவர்கள்... 5..10..13..ஆண்டுகள் என்று வெறும் விசாரணைக் கைதிகளாகவே சிறையில் தம் வாழ்கையை இழப்பதும், பின் ஒருநாள் சாவதானமாக தரப்படும் வழக்கின் தீர்ப்பில் "நிரபராதி - அப்பாவி" என 17 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டாலும் 'நஷ்ட ஈடு' என்று ஒரு பைசா வழங்கப்பட்டதில்லை. பாதிக்கப்பட்டோரும்... "ஏதோ சாகும் முன்னேயாவது நம்மை வெளியேயாவது விட்டார்களே... அதுவே பெரிய அருட்கொடை... கோடி ரூபாய்க்கு சமானம்..." என்று நொந்து நூடுல்சாகி தள்ளாடி குச்சி ஊன்றி வெளியே மவுனமாக... அமைதியாக... துனுக்குச்செய்தியாகக்கூட... வராமல் வீட்டுக்கு நடந்து சென்று விடுவார்கள். பொதுவாக நம் நாட்டின் நடைமுறை இதுதான்.
ஆனால், இந்த வழக்கத்தை உடைத்தெறிந்து... முதன் முறையாக ஆந்திர அரசாங்கம் இவர்களுக்கு 70 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க முன் வந்துள்ளது. இது இந்திய குற்றவியல் வரலாற்றில் ஒரு புது திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் இது ஒரு சாதனை..!
ஆந்திர அரசு வழங்கும் அந்த 70 லட்ச ரூபாய் இழப்பீட்டு தொகையில் 20 பேருக்கு மூன்று லட்சம் ரூபாய் வீதமும், 50 பேருக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதமும் வழங்கப்படும் ஆந்திர அரசின் சிறுபான்மை கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் அத்தொகை இவ்விகிதமாக வழங்கப்படுகிறது.
இன்னொரு அதிரடி விஷயமாக... "முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையிலடைத்து கொடுமைப்படுத்திய போலீசாரின் சம்பளத்தில் இருந்து இத்தொகையை ஈடாக்கவேண்டும்" என ஆந்திர அரசின் சிறுபான்மை கமிஷன் சிபாரிசு செய்திருக்கிறது..!
அப்பாவி முஸ்லிம்களை தக்க ஆதாரமின்றி, சாட்சியின்றி, தடா... பொடா... என்று அக்கிரம சட்டங்கள் மூலம் அனியாயமாக கைது செய்துவிட்டு... ஜாமீன் கூட கொடுக்காமல்... அவர்கள் இளமை வாழ்வை சிறையிலேயே நாசமாக்கிவிட்டு... அவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் முதல்...20,000 ரூபாய் வரை கொடுப்பதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. நல்ல திருப்பம்... 'ஒன்றுமே இல்லை' என்பதற்கு பதில் ஏதோ ஒரு ஆறுதல் என்ற வகையில் இது பாராட்டப்பட வேண்டியசெயல்..! நன்றி சகோ.கிரண்குமார் ரெட்டி..!நீங்கள் முதல்வர்களுக்கு ஒரு முன்னுதாரணம்..! இந்த ஆந்திர முதல்வரை உதாரணமாக ஏற்று அவரை பின்பற்றுவார்களா.... நம் பிரதமர்மன்மோகன் சிங்கும்... முதல்வர் ஜெயலலிதாவும்...?
ஆனால்... இவர்களின் இளமை வாழ்க்கையை அவர்களுக்கு திருப்பித்தரமுடிமா..? மனைவி, குழந்தைகள், பெற்றோர் என ஆண்டுக்கணக்கில் குடும்பத்தை பிரிந்து இத்தனை நாள் அவர்கள் தனிமையாக சிறையில் அனுபவித்த மன உளைச்சலையும், ரெட்ரூமில் "உண்மையை சொல்லு... உண்மையை சொல்லு" என்று லத்தியால் லாடம் கட்டப்பட்டதும், "இஸ்லாமிய பயங்கரவாதிகள் கைது"..."ஜிஹாதிகள் கைது.." என்று ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக இடம்பெறவைத்து, இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்படுத்திய களங்கத்தையும் ஈட்டுத்தரமுடியுமா...? இவற்றுக்கெல்லாம் ஈடாகுமா இந்த லட்சங்களும் ஆயிரங்களும்..? ஒருக்காலமும் முடியாது சகோ..!
எதிர்காலத்தில் இப்படி நடக்காமல் இருக்க இதற்கெல்லாம் ஒரே வழி... இஸ்லாமிய வழி...ஆதாரம் இன்றி சந்தேகத்தின் பேரில் 'தடா'ல் 'பொடா'ல் என்று எவரையும் கைது செய்தபின் விசாரிக்காமல்... தீரமுடன் துப்பறிந்து... சரியான சாட்சிகளை சேகரித்து... அசைக்கவியலாத ஆதாரங்களை திரட்டி... விவேகமாகவும் விரைவாகவும் விசாரித்து... அப்புறமாக கைது செய்யுங்கள். வழக்கையும் ஓராண்டிற்குள் முடித்து, உடனே தீர்ப்பும் வழங்குங்கள்.
நம்பிக்கை கொண்டோரே..! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்..! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (குர்ஆன்-49:6)
இதுதான் இனி நாம் தேவையின்றி நஷ்டஈடு கொடுக்காமல் இருக்கவும், மன்னிப்பு கேட்டு தலைகுனியாமல் இருக்கவும் ஒரே தீர்வு..!
Saturday, December 10, 2011
Subscribe to:
Post Comments (Atom)
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.
5 பின்னூட்டங்கள்:
மாஷாஅல்லாஹ்
அருமை முஸ்லிம் சகோதரிகளின் வியக்கத்தக்க சாதனையில், அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் படி புர்கா அணிந்து கண்ணியமிக்க சாதனயாலராகி விட்டார்கள்.
வாழ்த்துக்கள் சகோதரிகளே........
இந்த செய்தியால் வந்த சில நினைவுகள்....
நீங்கள் தொர்கடிக்கபட்டுவிட்டதாக நீங்கள் நினைத்தால்,
நீங்கள் தோற்றுவிட்டீர்கள்.
உங்களிடத்தில் துணிச்சல் இல்லை என்று நீங்கள் நினைத்தால்,
உங்களிடம் துணிச்சல் இல்லை.
நீங்கள் வெற்றி பெற விரும்பி, ஆனால் அது உங்களால்
முடியாது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் வெற்றி பெறப் போவதில்லை என்பது கிட்டத்தட்ட உருதிபடுத்தப்பட்டுவிட்டது.
வாழ்வின் போராட்டங்கள் எப்போதும் வலிமை நிறைந்த அல்லது
வேகமான மனிதனை நோக்கி போனதே கிடையாது.
ஆனால்....
உடனடியாகவோ அல்லது மெதுவாகவோ, வெற்றி பெரும்
மனிதன் யார் என்றால், "தன்னால் வெற்றி பெற முடியும்" - என
நினைக்கும் மனிதர்கள்தான்.
போராடுபவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்.
*****துக்ளக் நியூஸ் குழுமம்*****
thuklaknews@gmail.com
அல்ஹம்துலில்லாஹ்
நம் இந்திய நீதித்துறையில் இப்படி ஒரு மாற்றமா?...கேட்பதற்கே வியப்பாக உள்ளது...எல்லா புகழும் அல்லாஹ்விற்கே
இது போல் மாற்றம் நம் நாட்டில் அனைத்து அப்பாவி முஸ்லிம்களுக்கு இந்நியாயம் கிடைத்திடுமா?......ஆந்திர முதல்வரைப் போல அனைத்து மாநில முதல்வர்களும் இருந்து விட்டால் அப்பொழுதுதான் இந்தியா உண்மையான மதசார்பற்ற நாடு என்ற பெயரைப் பெறும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
மிகவும் சந்தோஷமான செய்தி, ஒரு நற்பண்புள்ள இஸ்லாமியரின் நற்செயலால் அல்லாஹ் இவ்வளவு பெரிய காரியத்தை எளிமையாக நிறைவேற்றி தந்துள்ளான். முஸ்லிம்களாகிய நாம் நமது மார்க்கத்தை இறைதூதர் காட்டி தந்த முறையில் பின்பற்றினால் அதன் விளைவாக நம்மை பார்த்து மற்ற மதத்தவர்கள் இஸ்லாத்தினை அறிந்துகொள்வார்கள் . என்பதற்கு இது ஒரு சான்று. அவ்வாறு அல்லாமல் அதிகமானவர்க்ளகிய நாம் சரிவர நம் மார்க்கத்தை பின்பற்றாததினால்தான் நமக்கு இவ்வளவு சோதனைகள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும் - அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக ......
உச்ச / உயர் நீதிமன்றங்கள் உச்சு குடுமி மன்றங்களாக மாற்றப்பட்டுவரும் இக்காலகட்டங்களில்...... ஆந்திர நீதியரச்ரர்கள் வழங்கி தீர்ப்பு பாராட்டபடவேன்றிய ஒன்று....
இருப்பினும் கண்மூடித்தனமாக குற்றம் சாட்டிய காவல் துறை போன்றவர்களுக்கும் இங்கே தண்டனை கொடுத்தால் தான் இது போன்ற இன்னல்களுக்கு தீர்வாகும்.....இன்னொன்றையும் இங்கே நினைவுபடுத்த வேண்டியது ஒரு முஸ்லீமின் கடமை....
" அகில உலகிற்கும் இறுதி தீர்பளிப்பவன் நம்மை உற்று நோக்கிகொண்டிருக்கிறான், பாதிக்கபட்டவனுக்கும் ஏக இறைவனுக்கும் மத்தியில் எந்த இடைவெளியும் இல்லை - அநீதிக்குல்லாக்கபட்டவர்களின் குரலோங்கும்போது அல்லாஹ்வின் பிடியில் இருந்து அநியாயக்காரன் எவனும் தப்ப முடியாது "
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment