அன்றாடம் நம் காதில் அடிக்கடி விழக்கூடிய பல இடங்களிலிருந்து வெளிவரக்கூடிய வார்த்தைகளில் இளைஞரை பற்றிய குறைகள்தான் அதிகம். இதற்கு முழுக்காரணம் இளைஞரே என்றும் கூறி விட முடியாது. காரணம், நமது சமுதாயத்தை பொருத்தவரை பெற்றோர்களும் காரணம்தான்.
நமது ஊரில் ஒரு குழந்தை பிறந்தால் என்ன குழந்தை உனக்கு பிறந்திறக்கிறது என்று கேட்பதற்கு மாறாக உனக்கு பாஸ்போர்ட்டா, மனக்கட்டா என்று கேட்க கூடிய இன்றையநிலை ஏன்? தனக்கு குழந்தை பிறந்தவுடன் தன் குழந்தைக்கு இஸ்லாமிய பொழிவுடன் கூடிய கல்வி செல்வம் வழங்கி, அதனை தாயகத்தில் குடும்பத்தோடு வளர்த்து அந்த குழந்தை நல்ல பெயர் எடுக்க வேண்டும். ஜந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்ற கேள்விகளை ஞாபகத்தில் வைத்து தனது குழந்தைகளை பராமரித்து வளர்க்கவேண்டும்.
எங்களுக்கு ஒரே குழந்தை எங்களுடைய செல்லப்பிள்ளை, கடைக்குட்டி அப்படித்தான் இருக்கும், போன்ற வார்த்தைகளும் குழுந்தைகளின் முன்னோக்கு பாதைக்கு தடையாய் நிற்கிறது. தங்களுடைய குழந்தைக்கு படிப்பு முடிந்ததும், அரைகுறையாய் படிப்பை நிறுத்தினாலும் போதும் உடனே இவன் இங்கிருக்க இனி லாயக்கு இல்லை உடனே பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டிற்கு அனுப்பவேண்டும் என்ற எண்ணத்தை திணித்துவிடுகிறார்கள். இது குழந்தை பிறந்த சில நாட்களில் கூட அந்த எண்ணத்தை புகுத்திவிடுகிறார்கள்.
இளைஞர்களின் வளர்ச்சி இன்று எப்படி இருக்கிறது? என்ற கேள்வியை இளைஞர்களிடத்தில் வைப்போமானால், அதிகமானோரின் பதில் நான் பாஸ்போர்ட் எடுத்துட்டேன் இன்னும் ஒரு மாதத்தில் விசா வந்துவிடும் நான் வெளிநாடு போய்விடுவேன் என்ற ஒரு பதிலில் அதிக ஒற்றுமை. இதற்கு காரணம் முழுவதும் பெற்றோர்கள் என்று கூறிவிடவும் முடியாது.
இளைஞரே, சிந்தித்து பாருங்கள் தங்களின் வாழ்க்கை பயணத்தை பற்றி! இந்தியாவின் செல்வத்தை அள்ளிச் சென்றனர் ஆங்கிலேயர். இந்நாட்டை விட்டு சென்று எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் செல்வத்திற்கு இந்தியாவிற்கு தட்டுபாடுகள் உண்டா? இந்தியாவில் ஒரு வீட்டில் சராசரி 10 பவுன் என்றாலே, தங்கத்தின் மதிப்பு?, மேலும் விட்டுச் சென்ற செல்வத்திலும் சுரண்டிய நமது அரசியல்வாதிகள் சுரண்டிக்கொண்டிருப்பவர்கள், சுரண்டுபவர்கள் எத்தனைபேர்?. நாம் அதற்கெல்லாம் இடங்கொடுத்துவிட்டு வெளிநாட்டில் ஏனோ வாழ்க்கை ஓட்டிக்கொண்டேயிருக்கிறோம். சிந்தித்து செயல் நடத்தினால் நம்முடைய முயற்சியில் வெற்றி நிச்சயம்.
நாங்கள் நன்றாக படித்தோம் வேலைக்கிடைக்கலை என்றவர்களுக்கும், இந்த புள்ளை இனி உருப்புடாது என்று வெளிநாட்டிற்கு அனுப்புகிறவர்களுக்கும் தகவல்களை சொல்ல ஆசைப்படுகின்றோம். படித்துவிட்டுதான் இன்ஜினியர் கட்டிடம் கட்ட வேண்டும் என்று கட்டாயமும் இல்லை, படித்தவர்களுக்கு மட்டுமே கட்டிடம் கட்ட வேண்டும் என்ற சட்டமும் இங்கே இல்லை. படித்து வேலைப்பார்ப்பவரைவிட படிக்காமல் வேலைசெய்பவர்களின் மதிப்புகள் இங்கே அதிகம், படிக்காத மேதைகளாக இருப்பவர்கள் அதிகம். எங்களுடைய படிப்புதான் எங்களின் தேவைகளை நிறைவேற்றும் என்று நினைப்பது முற்றிலும் தவறு.
படிப்பு என்பது வாழ்க்கையில் ஒரு ஏணிதான். வாழ்க்கை சீராக அமைப்பதற்கு என்ற எண்ணம் மட்டுமே போதுமானது. நமது வாழ்க்கையை ஆரம்பத்தையும், முடிவையும் நமது சொந்த நாட்டிலேதான் நடத்தவேண்டும் என்று எண்ணி தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள் எத்தனைபேர்? கூறுங்கள். நீங்கள் நினைத்திருந்தால் உருப்படாத புள்ளைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கும்....
தேவைக்கு மீறிய பணம் என்ன பயன்? தேவையில்லாத விசயத்தில் தேவையில்லாத தேவைகளுக்காக வாரி! வாரி இறைக்கத்தான் என்பது நமது சுற்றுப்புரத்தில் அன்றாடம் நாம் அறியும் உண்மைகள். இது நம்முடைய நேர்வழிக்கு பாவச்சுமைகளைதான் சேர்க்கும். உண்மை உழைப்பும், இறையச்சம், முறையான கல்வி நம்மை பாவத்திலிருந்து மீட்டுவிடும் என்பதே உண்மை.
இளைஞரே நீங்கள் உங்களைப்பற்றியே பல கேள்விகளை கேட்டுப்பாருங்கள். நம்முடைய முன்னேற்றத்திற்காக நாம் என்ன முயற்சி செய்தோம். நமது பெற்றோர்களுக்கு என்ன பணிவிடைகள் செய்தோம் என்று. இந்த எண்ணம் உங்களை மேன்மைபடுத்தும்...
1.உழைப்பதற்கு இடமில்லை?
2.தொழில் இல்லையா?
3.வலிமையில்லையா?
4.பணபலமில்லையா?
இதுபோன்ற பலகோணங்களிலும் சிந்தித்து பாருங்கள், நேர்வழியில் வாழ்க்கையை ஏற்று முன்னேறியவர்களின் வாழ்க்கை எப்படியிருந்தது. நாம் எப்படியிருக்க வேண்டும் என்பது புரியும்... இன்றைய உழைப்பின் முயற்சிக்கு மண்முடைக்கூட மூலதனமில்லா பெருஉழைப்புதான் என்பதை உணருவோம். இளைஞர் சமுதாயத்தை இறையச்சத்துடன் வளர்போம், வளர்வோம் என்ற தூய சிந்தனைக்கு வழிகொடுப்போம்....
DIGITECH.
KMC, College Road
6 பின்னூட்டங்கள்:
இந்த கட்டுரையைப் படிக்கும் போது நான் கேட்ட சில வார்த்தை வரிகள் எனக்கு நினைவுக்கு வருகிறது....
தூக்கம் பெற்ற காசுகள்;- இருப்பவனுகோ வந்துவிட ஆசை, வந்தவனுக்கோ சென்றுவிட ஆசை; இதோ அயல் தேசத்து ஏழைகளின் கண்ணீர் அழைப்பிதழ்;
விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும்
வரும் கடிதங்களைப் பார்க்கும் போது
பரிதாபப் படத்தான் முடிகிறது;
நாங்கள் பூசிக்கொள்ளும் வாசனைகளில்
வேண்டுமானால்
வாசனை இருக்கலாம் ஆனால்
எங்கள் வாழ்க்கையில்?
தூக்கம்பெற்ற காசில் தான் துக்கம் அளிக்கிறோம்;
ஏக்கம் என்ற நிலையல் தான் இளமை களிக்கிறோம்;
எங்களின் நிலாக்கால நினைவுகளை எல்லாம்
ஒரு விமானப் பயணியோடு விற்றுவிட்டு
கனவுகள் புதைந்து விடும் எனத்தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்;
மரவுச்சியில் நின்று தேன் கூட்டை
கலைப்பவன்ப் போல் வார விடுமுறைகளில் தான்
பார்க்கமுடிகிறது இயந்திரம் இல்லாத மனிதர்களை;
அம்மாவின் பரிசம் தொட்டு எழும் நாட்கள் கடந்துவிட்டன;
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு எழும் நாட்கள் கசந்துவிட்டன;
பழகிய வீதிகள், பழகிய நண்பர்கள், கல்லூரி நாட்கள்
இவை அனைத்தும் ஒரு இரவு நேரக் கனவுக்குள்
வந்துவந்து போய்விடுகிறது;
வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த நண்பனின்
மாப்பிள்ளை அலங்காரம்,
கல்யாணநேரத்து பரபரப்பு,
பழைய சடங்குகள் மறுத்துப்போராட்டம்,
பெண்வீட்டார் மதிக்கவில்லை எனக்கூறி
வரட்டுப் பிடிவாதங்கள்,
இவை எதுவுமே கிடைக்காமல் கண்டிப்பாய்
வரவேண்டும் என சம்பிர்தாய அழைபிற்காக
சங்கடத்தோடு ஒரு தொலைபேசி வாழ்க்கையோடு
தொலைந்து விடுகிறது எங்கள் நீண்ட நட்பு;
எவ்வளவு சம்பாதித்தும் என்ன
நாங்கள் அயல்தேசத்து ஏழைகள் தான்;
பெற்ற குழந்தையின் முதல்ப்பரிசம், முதல்ப்பேச்சு,
முதல்ப்பார்வை, முதல்க்கழிவு,
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் திர்ஹமும் தந்துவிடுமா?
கிள்ளச்சொல்லி குழந்தை அழும் சப்தத்தை
தொலைபேசியில் கேகின்றோம்,
கிள்ளாமலையே நாங்கள் தொலைவில் அழும்
சப்த்தம் யாருக்கு கேக்குமோ?
மொத்தத்தில் இருப்பையும், இழப்பையும்
கணக்கிட்டு பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும் தான்......
சேனா இப்பொழுது ஓவராக சிந்திக்கிறான் என்னமோ தெரியல?
ஒரு காலத்தில் அமெரிக்காவை உருவாக்குவதற்கு தென் ஆப்ப்ரிக்காவிலிருந்து அங்கு உள்ள கறுப்பின ஒட்டு மொத்த குடும்பத்தையும் கப்பலில் கொண்டு போய் வேலையே வைத்து அடிமைத்தனத்தை கட்டவிழ்த்து வதைத்தனர். (போகும்வழியில் தீரா நோய் ஏற்பட்டால் கப்பலில் இருந்து கடலில் வீசிவிடுவார்கள்.
அதே அமெரிக்காவுக்கு அதே வேலையை செய்வதற்கு சென்றால் இப்பொழுது நமதூரைப் பொறுத்தவரை அவர் ஒரு "ஹீரோ".
(அமேரிக்கா ஏர்போட்டில் போதிய ஆவணங்கள் இல்லாவிட்டால், திரும்பவும் அதே இந்திய பெருங்கடல் பக்கம் அனுப்பிவிடுவார்கள்.
சவூதி துபாய் போன்ற நாடுகளுக்கு ஒரு காலத்தில் நாம் மானியம் கொடுத்தோம்,...
இன்று நம்மவர்களே வளைகுடாவில் வாழ்வை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் எழுத்து மூலம் கொட்டி தீர்ப்பதை விட, எளிமையான வாழ்வைத் தேடி, வெளிநாட்டு வாழ்வை தூக்கி எரிவதே தலையாயச் சிறந்தது.
வெளிநாட்டில் சம்பாதிப்பதை விட நான்கில் ஒரு பங்கு சொந்த நாட்டில் கிடைத்தாலே போதும். வாழ்வைத் தொலைக்க வேண்டியதில்லை.
எல்லாவற்றிலும் கொடுமை. வெளிநாட்டில் இருப்பவரிடம் ஒட்டு கேட்பதுதான்..
அஸ்ஸலாமு அலைக்கும்
இது குறித்து என் மனதில் பட்டவை
இக்கரைக்கு அக்கறை பச்சை
சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம்
சொல்லியவண்ணம் செயல்
அல்லாஹ் நாடினாலே தவிர ..
@ajibrahimஉண்மையே வெல்லும்
இளைஞனே.... என்ன வளம் இல்லை நம் நாட்டில்... எவனோ வந்து கொள்ளைபோகிறது நம் வளம்.... முகலாய பேரரசு சாஜஹான் தான் வெள்ளையன் கொள்ளையனாக மாற வழிவகுத்தவர்..... இந்தியாவின் பூர்வ குடிகளான நாம் ஏன் இந்தியாவின் வளர்ச்சியோடு பங்கெடுக்க கூடாது... முயற்ச்சியுங்கள் இந்தியாவின் வணிகத்தில் பங்கெடுக்க...
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment