தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் அதிகம் நிறைந்த ஊர்களில் அதிரம்பட்டினமும் ஒன்று நமது சமுதாயத்தை சார்ந்த காலம்சென்ற கொடை வள்ளல்கள் கல்வி நிறுவனங்களை நிறுவி ஊருக்கே பெருமை சேர்த்து தந்தவர்கள். இக்கல்வி நிறுவனனங்களில் பயின்ற மாணவ, மாணவிகள் இன்றும் பல்வேறுத்துறைகளில் உள்நாடுகளிலும் மற்றும் மேலை நாடுகளிலும் சிறந்து விளங்குகின்றனர். இவ்வளவு சிறப்புமிக்க ஊரில் சில தனியார் ஆங்கில கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளும் தங்களுடைய சேவையை மேலும் மெருகேற்றி ஊருக்கே பெருமை சேர்த்துக்கொண்டுள்ளனர்.
சரி விசயத்துக்கு வருவோம், இப்படங்களை பாருங்கள் ஆட்டோக்களில், ஆம்னி வேன்களில் நமது குழந்தைகள் நின்று கொண்டும், டிரைவர் சீட்களில் இருபுறமும் மற்றும் பேக் சீட் பின்புறம் உட்கார்ந்து பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்ய தயாராவதை. இதில் அவரவர் ஸ்கூல் பேக்குகளையும் அதில் வைத்துக்கொள்ளவேண்டும். பெரும்பாலும் எரிவாயு ( GAS ) நிரப்பட்ட வாகனங்களாவே உள்ளது.
இவர்கள் ஒரு ட்ரிப்களில் சுமார் பதினைந்து முதல் இருபது குழந்தைகளை ஏற்றிச்சென்று ( ஒரு ஆட்டோவில் அரசு விதிப்படி நான்கு பேரும், ஆம்னி வேன்களில் எட்டு பேரும் அமர்ந்து பயணம் செய்யலாம் டிரைவர் உட்பட ) ஒருநாளைக்கு குறைந்த பட்சம் இரண்டு , மூன்று ட்ரிப்கள் அசுர வேகத்தில் பள்ளிகளை நோக்கி பயணிக்கிறார்கள். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும் இதற்கு முன்உதாரனமாக கடந்த கால தின பேப்பரில் கொடூர விபத்துகளைப் பற்றி வந்த செய்திகளைப் படித்து அறிந்திருப்போம். இதனால் ஏற்படும் இழப்பீடுகள் குழந்தைகளையும், அவர்களது பெற்றோர்களையும் மற்றும் பள்ளி நிர்வாகத்தையும் சார்ந்துவிடும் சூழல் உருவாகிவிட வாய்ப்புகள் அதிகம்.
தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு ஓர் வேண்டுகோள் !
தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு ஓர் வேண்டுகோள் !
உயர் கல்வியை பயிற்றுவித்து மாணவ, மாணவிகளை உயர்ந்த நிலைக்கு கொண்டுச்செல்லும் தங்கள் பள்ளிகளின் சேவைகள் மேன்மையானது. அதை யாராலும் மறுக்க இயலாது. அதேசமயத்தில் பள்ளிகளில் கல்வி கற்க வரும் மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் நேரம் முடிந்தவுடன் அவர்கள் பாதுகாப்பாக அவரவர் வீடு போய்ச்சேரவும் அந்த அந்த பள்ளிகளே பொறுப்பாகும். ஆகையினால் ஆட்டோ மற்றும் ஆம்னி வேன்களில் கூடுதலான குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் ஏற்றி வருவதை தடைசெய்து அவர்கள் பாதுகாப்பாக அவரவர் வீடு போய்ச்சேர தங்கள் பள்ளிகளின் மீதுள்ள கடமையாகும். ஆகையால் தங்கள் பள்ளிகளுக்கு கூடுதலாக வாகனங்களை அனுபவமிக்க டிரைவர்களைக் கொண்டு இயக்குவதன் மூலம் இழப்பீடுகளை தவிர்க்கலாம் மற்றும் பெற்றோர்களின் பயம் உணர்வு நீங்கி அவர்களிடம் நற்பெயரை அடைந்து பள்ளியின் தரத்தை மேன்மேலும் உயர வைக்க ஒரு நல்ல வாய்ப்பாகும்.
விபத்துக்களைத் தடுப்போம் ! குழந்தைகளின் எதிர்காலத்தை வளர்ப்போம் !!
மக்களின் சார்பாக,
M. நிஜாமுதீன் B.sc.
( 9442038961 )
M. நிஜாமுதீன் B.sc.
( 9442038961 )
9 பின்னூட்டங்கள்:
பெற்றோர்கள் தங்களின் குழந்தையை SHARES AUTO மற்றும் OMNI VAN களில் ஏற்றுவதை முதலில் நிறுத்த வேண்டும்.
அதிரை மக்களின் விழிப்புணர்வை தூண்டும் உண்மையான ஊடக நண்பன் சகோ. நிஜாம் அவர்கள், தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.
என்ன தான் சொன்னாலும் நம்ம பெண்மணிகளுக்கு கேட்க்காது பிள்ளைகளை ஓம்னியிலும், ஆட்டோவிலும் சேர்த்துவிட்டதாக எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். பிள்ளைகள் ஓம்னியில் எப்படி செல்கிறார்கள் என்றல்லாம் பார்ப்பதில்லை பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டோமே அதற்கு பிறகு பார்ப்பதில்லை ஒழுங்காக உட்க்கார்ந்து செல்கிறானா இல்லையா என்று. பெற்றோர்கள் தனது பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் ஓம்னி அல்லது ஆட்டோ ஓட்டுனர்கள் பிள்ளைகளை ஒழுங்காக உட்க்கார சொன்னாலும் ஒரு சில பிள்ளைகள் கேட்ப்பதில்லை. நாம் ஓட்டுனர்களை குறைகூறிக்கொண்டே இருக்கிறோம் தாம் பிள்ளைகள் செய்கின்ற தவர்களை உணர்வதில்லை. பள்ளிக்கூட வேனில் ஏற்றினால் அது
பள்ளிக்கூடம் பொறுப்பாகவே போய்விடும் அதுமட்டுமல்லாமல் பள்ளிக்கூட பொறுப்பாகவே ஆகிவிடும் ஓம்னி,ஆட்டோ விசயத்திலும் பெற்றோர்கள் கவனமாக இருந்துக்கொள்ள வேண்டும்.
எத்தனனையோ விதிமுறைகள் போடப்பட்டும் கண்டுகொள்ளாத அதிகார வர்க்கம் இருக்கும் வரை இதற்க்கு வழி பிறக்காது.... இருப்பினும் வரும் முன் காப்போம் என்ற எண்ணம் பெற்றோருக்கு வேண்டும் அல்லவா.....
திண்டிவனம் : திண்டிவனத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ, வேனுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ கவிழ்ந்ததால், அதன் பயணம் செய்த 12 குழந்தைகள் பலத்த காயம் அடைந்தனர்.காயமடைந்தவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
SOURCE : DINA MALAR ( Dated 5/12/2011 )
சகோதரர் நிஜாம் உள்ளூர் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தந்து ஆக்கங்களை பதிந்து ஒரு சிறப்பான பணியினை செய்து வருகிறார், அந்த வரிசையில் இந்த ஆக்கமும் மிக இன்றிமையாதது! இந்த பதிவில் பிரச்சனைகளை மட்டும் சுட்டிகாட்டி நின்று விடாமல் அதை தீர்க சில யோசனைகளையும் கீழ்கண்டவாறு சொல்லியுள்ளார்.
//அதேசமயத்தில் பள்ளிகளில் கல்வி கற்க வரும் மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் நேரம் முடிந்தவுடன் அவர்கள் பாதுகாப்பாக அவரவர் வீடு போய்ச்சேரவும் அந்த அந்த பள்ளிகளே பொறுப்பாகும். ஆகையினால் ஆட்டோ மற்றும் ஆம்னி வேன்களில் கூடுதலான குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் ஏற்றி வருவதை தடைசெய்து அவர்கள் பாதுகாப்பாக அவரவர் வீடு போய்ச்சேர தங்கள் பள்ளிகளின் மீதுள்ள கடமையாகும். ஆகையால் தங்கள் பள்ளிகளுக்கு கூடுதலாக வாகனங்களை அனுபவமிக்க டிரைவர்களைக் கொண்டு இயக்குவதன் மூலம் இழப்பீடுகளை தவிர்க்கலாம் மற்றும் பெற்றோர்களின் பயம் உணர்வு நீங்கி அவர்களிடம் நற்பெயரை அடைந்து பள்ளியின் தரத்தை மேன்மேலும் உயர வைக்க ஒரு நல்ல வாய்ப்பாகும்.//
நமதூர் கல்வி நிறுவனங்கள் இந்த யோசனைகளுக்கு செவிசாய்க்குமா?
குழந்தைகளின் பாதுகாப்பில் யாருக்கு என்ன பொறுப்பு என்பதை உணர்ந்தாலே இதற்கு எளிய தீர்வு கிடைத்து விடும். குழந்தைகளின் பயண பாதுகாப்பில் முழு கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு பள்ளிகளுக்கே இருக்கின்றது..
குழந்தைகளுக்கு உடுப்பு உடுத்தி, உணவூட்டி புத்தகம் எடுத்து வைத்து, பேக் மாட்டி, வீட்டு வாசல் வரை கொண்டு வருவது பெற்றோரின் பொறுப்பு.
வீட்டு வாசலில் தொடங்கி, பயணம் செய்து பள்ளி சென்று, பயின்று, மறுபடி வீடு வந்து சேர்ப்பது பள்ளியின் பொறுப்பு.
குறைந்த பட்சம் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு பள்ளிகள் தாம் முறையான பயண வசதி செய்து கொடுக்க வேண்டும். பள்ளி வழங்குகின்ற போக்குவரத்து வசதியை உபயோகிக்கச் சொல்லி, பெற்றோரை பள்ளி நிர்வாகம் நிர்பந்திக்க வேண்டும். அதனை ஏற்க மறுக்கும் பெற்றோரிடம், தம் குழந்தையின் பாதுக்காப்பிற்கு தாமே பொறுப்பு என கையெழுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், அந்த குழந்தை எந்த வாகனத்தில், எப்படி வந்தாலும் அதற்கு முழு பொறுப்பு பெற்றோரே ஏற்க வேண்டும். எனக்குத் தெரிந்த மட்டில், குழந்தைகளின் உயிர் விஷயத்தில் எந்த ஒரு முறையான பெற்றோரும் தவறிழைக்க விரும்பமாட்டார்கள். சில பள்ளிக்கூடங்கள் வாகன வசதி செய்து கொடுத்தும், அதனைப் பயன் படுத்தாத பெற்றோரிடம் குழந்தையின் பாதுகாப்பு குறித்த உறுதி மொழியை வாங்கி கொள்ளத் தவறி விடுகின்றன. இது, பள்ளிக்கூடங்களுக்கு எதிராக அமையும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.
குழந்தைகளின் பாதுகாப்பு மிக மிக அவசியம் என்பதை பள்ளிக்கூடங்களும், பெற்றோரும் உணர்ந்து இதை ஒரு தெளிவான-திட்டமிட்ட வழியில் செயல்படுத்துதல் நமதூர் போன்ற நடுத்தர இடங்களுக்கு மிகவும் சாத்தியமானது ஆகும்..
விபத்துகளுக்கு நிறைய காரங்கள் உள்ளது
ஆட்டோ ஓட்டுனர் தான் ஒரு ஆட்டோ ஓட்டுனர் என்று உணர்வதை விட தான் ஒரு ஹீரோ என்று நினைப்பதும்....
சுபுஹு தொழுது, குர்ஆன் ஓதி, நல்ல (யூனிபோர்ம்) உடை உடுத்தி உன்னத கல்வியை நோக்கி செல்லும் அந்த பிஞ்சு உள்ளங்களில் மனதில் அனாச்சாரமான எண்ணங்களை உண்டுபண்ண சினிமா பாடலை போட்டு போட்டு அவர்கள் மனதில் பதிய வைத்து, எது நல்லது எது கேட்டது என்பதே அறியாத பிள்ளையாக வளர்ந்துவிடுவார்கள் என்பது தான் கசப்பான உண்மை.
இன்னும் இது போன்ற எத்தனையோ விஷயங்களை இந்த ஆட்டோ மற்றும் மினிவேனில் பொதுநல விரும்பிகள் தடுக்கலாம்.
கொஞ்சம் சிந்தியுங்கள்........
அஸ்ஸலாமு அலைக்கும்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது அதிக குழந்தைகளை ஏற்றும் தனியார் வாகனங்களில் அனுமதிக்க கூடாது. இதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பு ஏற்க வாய்ப்பில்லை. பள்ளி நிர்வாகம், பெற்றோர் , தனியார் வாகனம் அவரவர் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல் பட்டால் நலம். அதே சமயம் பிரயாண து ஆக்களையும் பயண ஒழுங்குகளையும் அனைவரும் கடைபிடிக்கவேண்டும் . - அல்லாஹ் ஆபத்துக்களில் இருந்து பாது காக்க போதுமானவன்.
விபத்து ஏற்படாதவரை நாம் எதையும் சிந்திப்பதில்லை. விபத்து ஏற்பட்டால் நம்முடைய கவனம் முழுவதும் ஆட்டோ மற்றும் ஆம்னி வேன் ஓட்டுநரிடம் திரும்பிவிட வாய்ப்புகள் அதிகம்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment