அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, December 13, 2011

வட்டியை ஒழிக்க! நமதூர் செழிக்க!


வட்டி எனும் கொடுமையான நோய் அதிரைவாழ் ஏழைநடுத்தர மக்களை வாட்டி எடுக்கிறது. வெளிநாடு செல்லகல்யாண வேலைகளுக்குவீடு கட்ட இதுபோன்ற அவசரத் தேவைகளை / நெருக்கடிகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஒரு கூட்டம் விபசாரத்தைவிட கேடுகெட்ட வட்டி வியாபாரத்தைச் செய்து கொண்டிருக்கிறது.

பெற்ற தாயுடன் விபச்சாரம் செய்வதைவிட மோசமான இந்த வட்டியை அடியோடு ஒழிக்க "வட்டியில்லாக் கடன்என்ற அருமையான திட்டத்தை நம் அதிரை பைத்துல்மால் தொடங்கிஆனால் அதை முழுமையாக செயல்படுத்த போதுமான நிதிவசதி இல்லாமல் திண்டாடி வருகிறது.

இதற்கு ஒரு அருமையான தீர்வை பைத்துல்மாலின் குவைத் கிளை அறிமுகப்படுத்தியது. RD (Recurring Deposit Scheme -தொடர் வைப்பு திட்டம்). வெளிநாடு வாழும் நம்மூர் சகோதரர்கள் பல கனவுகளோடும் தேவைகளோடும் அவரவர் ஊதியங்களை எறும்பு சேமிப்பதுபோல் NREஅக்கௌன்ட்டில் சேமித்து வருகின்றனர். தேவையான நேரத்தில் அதை எடுத்து செலவு செய்கின்றனர். அதில் உள்ள சில பிரச்னைகள்:

1.    NRE அக்கௌன்ட்டில் சேரும் வட்டி நமக்கு ஹராம். (அதை அப்படியே விட்டுவிட்டால் அது முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான வழியில் செலவு செய்யப்படுகிறது. அதை எடுத்து தர்மம் செய்தாலும்அதை எடுத்ததற்கும் கேள்வி உண்டு; அந்த தர்மத்திலும் நன்மையை எதிர்பார்கமுடியாது.)

2.    சிறுசிறு தேவைகளுக்கு பணத்தை எடுத்து சேமிப்பின் நோக்கம் நிறைவேறாமல் போகிறது.

ABMன் தொடர் வைப்புத் திட்டம் மூலம் சிறுகச் சிறுக சேர்த்து வந்தால்,

1.    நம் தேவைக்கு முழுமையாக பயன்படுகிறது. மேலும் திரும்ப கேட்கும்பொழுது கிடைக்கிறது.

2.    வங்கியைவிட பாதுகாப்பானது மற்றும் நம்பிக்கைக்குரியது.

3.    ஒவ்வொரு முறையும் தரும் பணம் அப்போதைய CURRENCY RATE CONVERSION பிரகாரம் கணக்கிடப்படுகிறதுபணம் அனுப்பும் செலவு இல்லை. (NO REMITTANCE CHARGE)

4.    உங்கள் பணம் ABMல் இருக்கும்வரை வட்டி இல்லாக் கடன் திட்டத்திற்கு பயன்படுத்தப் படுகிறது. (தாமதமில்லாமல் உங்களுக்கு திருப்பித் தரப்படுகிறது). இதனால் எத்தனையோ சகோதரர்கள் வெளிநாடு சென்று தங்கள் குடும்பங்களை காப்பாற்றுகிறார்கள்குமர்கள் கரயேறுகிறது,வீடுகள் கட்டப்படுகின்றன. மேலும் நமது பணத்தைக் கொண்டு (நமது பணத்திற்கு எந்த சேதாரமும்தாமதமும்  இல்லாமல்) நம் சகோதர சகோதரிகளின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறுகின்றன.

நமதூர் சகோதர்களில் சுமார் ஆயிரம் பேர் வெளிநாடுகளில் இருக்கிறோம். இவர்கள் அனைவரும் மாதம் தலா 1,000 ரூபாய் அளவுக்குச் சேமித்தால் கூடமாதம் ஒன்றுக்கு சுமார் 50 இலட்சம் ரூபாய் நிதி திரட்டிஅதனை வட்டியில்லாக் கடனுக்கு பயன்படுத்தி, நம்மூரில் வட்டியை அடியோடு ஒழித்துவிடலாம்.

அதிரை பைத்துல் மாலில் சேமிக்கப்படும் நிதியின் அளவு அதிகமானால்கையிருப்புக்கு ஏற்ப தொழில்களில் முதலீடு செய்து வருமானத்தை ஏற்படுத்திஇலாபத் தொகையை நமக்குள் பங்கிட்டுக் கொள்ளலாம்.

வெளிநாடு வாழ் சகோதர சொந்தங்களே! வட்டி எனும் கொடிய நோயிலிருந்து நம் சமுதாயத்தைக் காப்பாற்ற உதவுங்கள். உங்கள் வருமானத்தைகொண்டு உங்களுக்கு நீங்களே உதவி செய்து, வறுமையிலும் வட்டி கொடுமையிலும் சிக்கி தவிக்கும் நம் உறவுகளுக்கும் உதவுங்கள்.


வட்டியிலிருந்து நம் சமுதாயத்தை காப்பாற்ற கை கோர்ப்போம்.



குவைத்திலிருந்து ஜைனுல் ஹுசைன்

இத்திட்டம் குறித்து மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள:
+965 99781286, 23872639

6 பின்னூட்டங்கள்:

Adirai Iqbal said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்ஹம்துலில்லாஹ் , இந்த திட்டம் மட்டும் சரியாக நிறைவேறினால் வட்டியின் தீங்கிலிருந்தும் சமுதாயம் மெல்ல விடுபடும் .

இது மட்டுமல்ல நமதூரில் சில நல்ல (?) குடும்பத்தார்களே வட்டிக்கு விடுவதாக செய்திகள் வருகின்றன இந்த செய்தியின் உண்மைய நிலையை அறிந்து அதற்க்கான சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் . அவர்களை நல்வழிக்கு கொண்டுவர நம்மால் இயன்றதெல்லாம் செய்ய வேண்டும் . இலையேல் நமதூர் அல்லாஹ்வின் கோபப்பார்வைக்கு ஆளாக நேரிடும் .
www.samuthayaarangam.blogspot.com

வளர்பிறை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிக அருமையான யோசனை(திட்டம்). இந்த திட்டம் தொடங்கி சிறப்பாக செயல்பட வெளிநாட்டில் இருக்கும் அனைத்து அதிரை உள்ளங்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

உள்நாட்டில்(இந்தியா) இருந்து சம்பாதித்து வரும் அதிரைவாசிகளும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கலாம். எத்தனையோ சகோதரர்கள் வங்கி சேமிப்பு கணக்கு துவங்கி பணம் போட்டு வருகிறார்கள், அந்த சகோதரர்களும் இந்த அருமையான திட்டத்திற்கு தங்களது பங்களிப்பை செய்யலாம். வல்ல இறைவன் அதற்குரிய நிறைவான கூலியை நிச்சயம் தருவான்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல யோசனை இத்திட்டத்தை நம் அதிரை நண்பர்கள் ஒத்துழைத்து அதன்படி செயல்படுத்தாலமே

\\NRE அக்கௌன்ட்டில் சேரும் வட்டி நமக்கு ஹராம். (அதை அப்படியே விட்டுவிட்டால் அது முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான வழியில் செலவு செய்யப்படுகிறது. அதை எடுத்து தர்மம் செய்தாலும், அதை எடுத்ததற்கும் கேள்வி உண்டு; அந்த தர்மத்திலும் நன்மையை எதிர்பார்கமுடியாது.)//

மிக தெளிவானே விளக்கம்

”நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு”" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (8:28)

"நிர்பந்த நிலையில் பேங்கில் பணம் போடுகிறவர்கள் இரண்டு தவறுகளைச் செய்யும் நிலை ஏற்படுகிறது.
ஒன்று தங்கள் பணத்தை தங்கள் விருப்பமின்றியே வட்டிக்கு விட்ட குற்றம். இரண்டாவது குற்றம் இவர்களது அந்த வட்டிப்பணம் நம் சமுதாயத்திற்கு எதிராகவே பயன்பட வழி வகுத்துக் கொடுப்பது."

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்
வட்டியை ஒழிக்க நமதூர் செழிக்க என்ற தலைப்பின் கீழ் கண்ட திட்டம் மிக அருமையானதாகும் . ஆனால் நமது ஊர் மக்கள் நிறைய குர் ஆண் விளக்கங்கள் தெரிந்து இருந்தும் பணம் பொருள் ஆசையினாலும் , வறுமையினாலும் இதில் பின்விளைவு தெரியாமல் ஈடுபட்டுள்ளனர் . அல்லாஹ்தான் நேர்வழி காட்டவேண்டும்.

“யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்” (அல் குஆன் 2:275)
ஆன்.
“வட்டியினால் திரட்டப்படும் பொருளையும், அவ்வாறு பொருள் திரட்டுபவனையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். எனவே அப்பொருளின் அபிவிருத்தியைத் தடுத்து அதனை அழித்து விடுகிறான். அவ்வாறே அத்தொழில் புரிவோரின் தர்மத்தையும், ஹஜ்ஜையும், இதர நன்மைகளையும் அவன் ஏற்பதில்லை” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
அல்லாஹ் அவனது மார்க்கத்தில் நமக்கு விளக்கத்தை கொடுத்து அதன்படி செயல்பட்ட நல்ல அடியார்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக - ஆமின்.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நமதூர் வட்டியை அடியோடு ஒழிக்கவண்டும் என்பது அல்லாஹ்வின் அச்சம் உடையவர்களும், எல்லா நல்லுள்ளங்களின் சிந்தனையின் பதிவே.

இந்த உணர்வு பூர்வமான சமுதாய எண்ணம் சகோ.ஜைனுல் ஹுசேன் அவர்களுக்கு வந்துள்ளது என்பது மிகையாகாது.

ஒருவளை அதிரை பைத்துல்மால் ஒரு கோடி ரூபாய் திட்டத்தில் மூலம் வட்டியில்லாக் கடனை அமல் படுத்தி வட்டிக்கடனை ஒழிக்க ஆரம்பித்தால் குறைந்தப் பட்சம் 7 டெல்லெர் கவுண்டராவது ( Teller ) வைக்கணும்.

எங்கு பார்த்தாலும், எல்லோரிடத்திலும் வட்டி....வட்டி....வட்டி... இதில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் யார் என்று சொல்லவே வாய் கூசுகின்றது.

அதிகமாக சொல்லவேடியதில்லை.....நன்றாக யோசித்து இந்த திட்டத்திற்கு முன் வந்தால் நல்லது.

அதாவது பங்கில் வேலை செய்யும் ப்யூன் முதல் (நரபலி மோடி ஊரிலிருந்து) வெளியூரிலிருந்து வந்த மார்வாடிவரை நமதூர் மக்களுக்கு வட்டிக்கு பணம் விட்டுகொண்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தடுப்பதற்கு முன்பாக, நம்மாளுக வட்டித் தொழில் செய்கிறதை முழுக்க முழுக்க நிறுத்த ஆயத்தமாக வேண்டும். அதற்க்கு ABM க்கு ஒத்துழைப்பு கொடுத்து அவர்கள் கஜானாவை நிரப்பி, ABM இருகரத்தை விரித்து மக்களை அழைக்க வேண்டும்.

"வாருங்கள் வட்டிக்கடனை ஒழிக்கலாம் என்று"
"ஊர் ஒற்றுமையை காக்கலாம்"

"அனைத்து" மக்களும் சேர்ந்து ஒத்துழைக்கலாம்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வட்டியில் வாழும் மக்களுக்கு அழகிய கடன் கொடுத்து உதவி புரியுங்கள் அல்லாஹ் தன திருமறையில் அழகிய கடனை பற்றி வலியுறுத்தி கூறுகிறான்.... முடிந்தவர்கள் இந்த தருமத்தை அதிகப்படுத்தினால் வட்டி என்ற வன்கொடுமையிளிருந்து நம் சமூகத்தை பாதுகாக்க முடியும்..... வல்ல ரஹ்மான் துணை நிற்பானாக ஆமீன்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.