குஜராத்தில் 2004-ம் ஆண்டு இஷ்ரத் ஜகான் மற்றும் 3 பேர் கொல்லப்பட்ட போலி என்கவுண்டர் வழக்கை விசாரிக்க சி.பி.ஐ.க்கு குஜராத் ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் இஷ்ரத் மற்றும் ஜாவித் சேக், அம்ஜத் அலி ரானா, ஜீசன் ஜோகர் ஆகிய 4 பேரும் 2004-ம் ஆண்டு ஆமதாபாத்தில் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் என்றும் முதல்-மந்திரி நரேந்திர மோடியை கொல்லும் திட்டத்துடன் ஆமதாபாத் சென்றதாகவும் குஜராத் போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், இஷ்ரத் உள்ளிட்ட 4 பேரையும் போலி என்கவுண்டரில் போலீசார் சுட்டுக் கொன்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி பி.பி.பாண்டே, டி.ஐ.ஜி. வன்ஜரா உட்பட 21 போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்திய நீதிபதி எஸ்.பி.தமாங், `இது போலி என்கவுண்டர் என்றும் சுய ஆதாயத்துக்காக இந்த கொலையை போலீஸ் அதிகாரிகள் செய்ததாகவும்' அறிக்கை அளித்தார்.
ஐகோர்ட்டில் விசாரணை
இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியதால் குஜராத் கலவரம் தொடர்பாக விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டது. இஷ்ரத் ஜகான் என்கவுண்டர் குறித்து குஜராத் ஐகோர்ட்டிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. `இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டது சரியா அல்லது போலி என்கவுண்டரா?' என விசாரிக்குமாறு சிறப்பு புலனாய்வு குழுவை ஐகோர்ட்டு கேட்டுக் கொண்டது.
அதன்படி, விசாரணை அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழு தலைவர் ஆர்.ஆர்.வர்மா தாக்கல் செய்தார். அந்த அடிப்படையில் குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கை மாநில போலீசார் விசாரிப்பதா? சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைப்பதா? தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் அளிப்பதா? சி.பி.ஐ. வசம் வழங்குவதா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டது.
சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு
விசாரணை முடிந்த நிலையில், இளம்பெண் இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 4 பேரின் என்கவுண்டர் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்குமாறு நீதிபதிகள் ஜெயந்த் படேல், அபிலாஷா குமாரி ஆகியோர் அடங்கிய குஜராத் ஐகோர்ட்டு பெஞ்சு நேற்று உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் புதிய குற்றப்பத்திரிகையை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு சிறப்பு புலனாய்வு குழு தலைவர் வர்மாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் பிறகு, சி.பி.ஐ.யிடம் வழக்கு ஒப்படைக்கப்படும்.
மோடிக்கு பின்னடைவு
குஜராத் போலீசாரிடம் விசாரணையை ஒப்படைக்க கூடாது என்பதற்கு 12 காரணங்களை ஐகோர்ட்டு தெரிவித்தது. தேசிய புலனாய்வு ஏஜென்சி என்பது தேசிய அளவிலான தீவிரவாத சம்பவங்களை விசாரிக்கிறது. அதன் விசாரணை வரம்புக்குள் இந்த வழக்கை சேர்க்க முடியாது என்பதால் தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் ஒப்படைக்கவில்லை.
இதுபோல, சிறப்பு புலனாய்வு குழுவுக்குள்ளேயே இந்த வழக்கு தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன. இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பவில்லை. சி.பி.ஐ. வசம் விசாரணையை ஒப்படைப்பதற்கான காரணங்களாக இத்தகைய விளக்கங்களை ஐகோர்ட்டு தெரிவித்தது.
இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஐகோர்ட்டு ஒப்படைத்து இருப்பதால் முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு பின்னடைவு ஏற்பட்டதாக கருதப்படுகிறது.
Source: The Hindu, தினத்தந்தி
5 பின்னூட்டங்கள்:
விசாரணையை துரிதபடுத்தி உண்மையை உலகுக்கு அறிவிக்குமா CBI (மத்திய புலனாய்வுத் துறை)? பொருத்திருந்து பார்ப்போம்!
சிபிஐ விசாரணைக்கு செல்வது என்றால் இது போலி என்கவுன்ட்டர் என்பதை கோர்ட்டு நன்குனர்ந்திருக்கிறது.
எப்படி என்கிறீர்களா..பொதுவாக கோர்ட்டில் கொடுக்கப்பட்ட ஆதாரம் இது 90 % நிரூபிக்கப்பட்டதாக இருந்தாலும், அதற்குரிய தீர்ப்பை வழங்குவதக்கு பதிலாக இரண்டு பேரையும் திருப்தி படுத்துவதற்க்காக சிபிஐ இடம் ஒப்படைத்து விடுவது வழக்கம். சிபிஐ முடித்துக் கொடுப்பதற்கு சில காலம் எடுத்துக்கொள்ளும், அதன் பிறகு அந்த கமிஷன், இந்த கமிஷன், மறுபடியும் கோர்ட்டு, தீர்ப்பு தள்ளிவைப்பு.... மறுபடியும் மோடியின் போலி என்கவுன்ட்டர்...மறுபடியும், .....யப்பப்பா....
மோடியின் போலி என்கவுன்ட்டர்,
மோடியின் செல்வாக்குக்கு ஒரு வேலி
ஒரு மாவட்டத்தில் முஸ்லிம்களை கொன்று குவிப்பார்.
மற்றொரு மாவட்டத்தில், "நான் முடிக் கூட முஸ்லிம்களிடம்தான் வெட்டுகிறேன்" என்று கேவலமாக வாக்கு சேகரித்து, வேலியை தாண்டுவார் என்பது " Hindu " நாளிதழுக்கு தெரியாத ஒன்றல்ல.
அம்மா : மோடி அண்ணே உங்களுக்கு ஏதாவது பிரச்சனை, மன அழுத்தம் இருந்தா.... ரஜினிகாந்த் ஷூட்டிங்குல கொஞ்ச நாள் இருங்க.... அப்புறம் உங்களுக்கு செல்வாக்கு குறையுறதா எல்லாரும் சொல்றாங்களே.... உண்மையா....அண்ணே... கவலைப் படாதீங்க உங்களுக்கு நெறைய எம்ஜியார் படம் வச்சிருக்கேன், நம்ம ரெண்டு பேறும் சேர்ந்து பார்க்கலாம்
யா அல்லாஹ் முஸ்லிம்களை கொன்று குவித்த அயோக்கினை இந்த உலகத்திலேயே இழிவு படுத்திக்காட்டு.... நரபலி மோடியையும் அவனுக்கு பட்டுக்கம்பளம் விரிக்கும் செல்வி ஜெயலலிதாவையும் கேவலப்படுத்து.... விசாரணைகள் எத்தனை வடிவம் எடுத்தாலும் மோடி என்கிற ஒரு நர மாமிச மிருகம் ஆட்சி கட்டிலில் இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது.... நம் நாடு ஒன்றும் அமெரிக்காவோ அல்லது இங்கிலாந்தோ அல்ல மனித குளத்தை மதிக்க...
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்து தீவிரவாதி மோடியின் ஆட்சி இரத்து செய்யப்பட சி பி ஐ பரிந்துரை செய்ய வேண்டும், இந்நாட்டின் பூர்விக குடிமக்களாகிய முஸ்லிம்களை வந்தேறி ஆரியன் மோடி கும்பல் வகையறா வின் பாதுகாப்பற்ற ஆட்சிஇலிருந்து காப்பற்றப்பட வேண்டும். இன்ஷா அல்லாஹ்..
இவனுக்கு இன்ஷா அல்லாஹ் தூக்கு கிடைக்கும் வரை போராடுவோம்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment