அன்றொரு காலம் அதிரைக்கு என்று அழகு சேர்த்த இரயில் பயணங்களை அனுபவித்தவர்களின் ஏக்கம் தொடருமா ? அல்லது மீண்டும் வருமா என்று ஏங்க வைத்த கம்பன் ஏமாற்றியதன் தாக்கம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
அது ஒரு பக்கம் இருந்தாலும் இரயில்வே நிர்வாகத்தின் மனம்போல் சுருங்கியிருக்கும் இரயில் தண்டவாளத்தை அகன்ற தண்டவாளமாக மாற்றுங்கப்பா அதுக்கான ஆயத்தங்களையும் போராட்டங்களையும் தொடர்ந்து செய்துவரும் அதிரை மக்களின் கோரிக்கையை இரயில்வே நிர்வாக செவிசாய்த்து நிறைவேற்ற வேண்டும்.
இன்று 01-டிசம்பர்-2011 வியாபாரிகள் சங்கத் தலைவர் மற்றும் மற்ற நிர்வாகிகளோடு பொதுமக்களும் இணைந்து ஓடும் ஒற்றை தொடர் வண்டியின் தொப்புள் கொடி உறவை அறுக்க வேண்டாமே என்று மனுவும் கொடுக்கப்பட்டது.
அகலமான இரயில் பாதை வேலைகள் ஆரம்பிக்கும் வரையிலாவது இந்த தொடர் வண்டியின் சேவை தொடர வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகும்.
இதோ மூச்சிரைத்து வரும் தொடர் வண்டியின் இன்றைய நிறைவு மூச்சையும் இங்கே காணொளியில் காணலாம்.
10 பின்னூட்டங்கள்:
அஸ்ஸலாமு அலைக்கும்
ஓடும் இரயிலே நின்று விடாதே ..- இரயிலின் சத்தமும் ஸ்டேசனின் காட்சியும் எங்களை பார்க்க பரவச படுத்தியது . ஆனால் ஸ்டேசன் மாஸ்டரிடம் மனு கொடுக்க சென்றவர்களின் எண்ணிக்கையை பார்த்தால் தான் மிகவும் சங்கடமாக உள்ளது. இவ்வளவு பெரிய ஊரில் இந்த அளவு மக்கள் தான் உள்ளனரா? என்று நினைக்கும் அளவுக்கு நம் ஆர்வம் பொது நலனில் உள்ளது. இரு கையும் சேர்ந்து தட்டினால்தான் சத்தம் அதிகமாகும் அணைத்து அமைப்புகளும் கட்சிகளும் இயக்கங்களும் பொதுமக்களும் இனனைந்து இதற்காக போராடினால்தான் நாம் சாதிக்கலாம் என்பதை ஏன் எவரும் உணர்வதில்லை ?
ஓடும் ரயில் ஒய்ந்து விட்டதே அதிரை நகருக்கு
அதிரை மக்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை இன்னும் சொல்லபோனால் அதிரை மக்கள் தான் அதிகமாக ரயில் பயணம் செய்து வருகிறார்கள்.பல முயற்சி செய்தும் ரயிலே நிறுத்தி விட்டார்கள் ஊரில் உள்ள அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து இதற்கு முயற்சி செய்தால் நடக்க வாய்ப்புகள் இருக்கிறது.எல்லோரும் முயற்சி செய்யா விட்டாலும் ஒரு சில பெரியவர்கள் அதை கவனத்தில் கொண்டு பல முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்.முயற்சி செய்தால் ஒன்றும் கெட்டு போவதில்லை அதிரை நகரில் தான் ரயிலுக்கு அதிக வசூலாகிறது. நம்ம ஊருக்கு அகல ரயில் பாதை வந்தால் மிக எளிதாக இருக்கும்.இதை தொடர்ந்து மனு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். நாம் அனைவரும் இறைவனிடம் துஆ செய்வோமாக அல்லாஹ் நாடினால் அவர்கள் நிறுத்திய ரயிலை திரும்ப விடுவதற்கு முடியும்.
முகம்மது : இந்த விசயத்தில் ஊரே திரண்டு சென்று கோரிக்கை மனுவை கொடுத்திருக்க வேண்டுமா இல்லையா?
அகமது : நாம தான் கட்சிகள், இயக்கங்கள் என பிளவுப்பட்டு கிடக்கிறோமே! அது எப்படி முடியும்?
முகம்மது : மனம் வைத்தால் மார்க்கம் உண்டு. நாம் அனைவரும் கட்சி, இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு ஒன்று திரள வேண்டும். அப்பொழுதுதான் கோரிக்கை மனுவை வாங்குபவர்களுக்கும் கூட்டத்தை பார்த்து ஒரு பயம் வரும், சும்மா 4, 5 பேர் போய் கொடுத்தா ஒன்றும் நடக்காது.
அகமது : ஆமா! நீ சொல்வது சரிதான். சரி இப்ப என்ன பண்ணலாம்?
முகம்மது : இந்த விசயத்தில் அனைத்து தெரு வாசிகளும் ஒன்று கூடி அகல ரயில்பாதை போராட்டக்குழு ஒன்றை அமைக்க வேண்டும், பல்வேறு கட்டங்களில் போராட்ட அறிவிப்பு முறையே செய்து போராட்டகளை நடத்தி ரயில்வே இலாக்காவுக்கு நெருக்கடிகள் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் நமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை.
அகமது : சரியா சொன்னாய். கணினி முன்பதிவு மையத்தையாவது (வாங்கப்பட்ட இயந்திரங்கள் மையத்து ஆவதற்கு முன்பு) முதலில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க சொல்ல வேண்டும் முகம்மது.
முகம்மது : ஆமாடா அகமது இதற்காக பட்டுக்கோட்டைக்கும் முத்துபேட்டைக்கும் செல்ல வேண்டியதிருக்கு.
போராட்ட குணங்கள் இல்லாதவரை ரயில்வே புறக்கணிப்பு தொடரத்தான் செய்யும்.... மக்களை ஒன்றிணையுங்கள் அடையாள போராட்டமாக மிகப்பெரிய போராட்டத்தை ஏற்பாடு செய்யுங்கள்..... இன்ஷா அல்லாஹ் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு தஞ்சையிலே மிகப்பெரிய பேரனிக்கு ஏற்பாடு செய்து அங்கே நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பை அறிவிப்பு செய்து போராட்ட குணத்தை முடுக்கி விடுங்கள்.... பிறகு பாருங்கள் விளைவு சாதகமாக வரும்.
முறையான அறிவிப்பு செய்து மக்களை திரட்டி கோரிக்கை வைத்துருக்கலாம்
கோரிக்கையை கொடுப்பதில் கூட்டம் கூட்ட தேவையில்லை..... அந்த அதிகாரியினால் பெற்றுக்கொள்ளத்தான் முடியுமே தவிர செயல்வடிவம் கொடுக்க முடியாது..... சம்பத்தப்பட்ட மத்திய ரயில்வே துறை நினைக்காதவரை ஒன்றும் நடந்துவிடாது.... நான் மேற்கூறியவாறு போராட்டகளம் காணாதவரை தீர்வை எட்ட முடியாது..... தயவு கூர்ந்து நமதூர் முக்கிய தேவையான இந்த விஷயத்தை இயக்க மற்றும் சங்க பிரிவினை பாராமல் அனைவரும் ஒன்று சேர்ந்து களம் காண முயற்ச்சியுங்கள்.... மற்றும் நமதூர் சென்னை வாசிகள் அனைவரையும் இந்த விசையத்தில் ஒன்றிணையுங்கள்.... இன்ஷா அல்லாஹ் என் போன்றோர் களம் காண அனைத்து ஒத்துழைப்புகளையும் செய்யா தயார்....
போராட்டம் தொடரவேண்டும்,அப்போதுதான் இன்ஷா அல்லாஹ் தொடர் வண்டிகள் வரும்.
கடலலைகள் பாடும்
இரயிலடியின் காற்றினிசையில்
நினைவலைகளின் நாடாக்களை
நித்தம் சுழற்றும் எல்லாரும்
மீண்டும் வராதா அக்காலம்
மீண்டு வராதா இரயில் கோலம்
வேண்டுகின்றோம் வேதனையில்
தூண்டுகின்றோம் தொடர்ந்து....
அந்தக் காலம்:
பாங்கோசையுடன் வழியனுப்பும்
பாங்கினைக் கண்டோம்
ஹஜ்ஜுப் பயணிகளாய்
பாவங்கழுவி வருவோரை
ஆரத்தழுவி “துஆ” வேண்டுவோம்
ஃபஜரின் பாங்கோசை
படுக்கையை விட்டெழுப்பும்;
பஞ்சாயத் போர்டு சங்கொலி
பள்ளிக்கு ஓத அனுப்பும்;
புகைவண்டியின் வருகையோசை
புறப்படவைக்கும் பள்ளிக்கூடம்
தேர்வுக்குத் தயாராக
தேர்ந்தெடுக்கும் இரயிலடியும்;
மனப்பாடம் செய்யும் ஒலியலைகள்
வனப்போடுச் சுற்றி வரும்
உப்பளத்தின் முகடும்;
இப்பொழுதும் என் நினைவலையில்...
மனப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி
கடற்காற்றினைக் கலப்பின்றி
உடலுக்குள் உள்வாங்கும்
நடைப்பயிற்சியும் நாளும்....
அத்துணைச் சுகமான
அந்த இரயிலடி எங்கே?
இத்துணை வருடமாய்
“இத்தா”வில் இருப்பதால்
அந்த கருப்பு தேவதை
எந்த நாளில் இனியும்
மணக்கோலம் காண்பாள்?
வயதானோர்க்கு வசதியான
பயணமும் வாராதா?
இடியாப்பம் இறைச்சி
மடியில் வைத்து உண்ண;
இடித்துக் கொள்ளாத
இருக்கையும்;
படித்துக் கொண்டே
பயணிக்க படுக்கையும்;
ஒளுவும்; தொழுகையும்
ஒழுங்காய் நிறைவேற்றவும்;
தாலாட்டுப் பாடலாய்
“தட தட தட “ ஓசையும்
குறைவான செலவில்
குடும்பமே பயணிக்கவும்
நிறைவேறுமா ஆசையும்???
இக்காலத்தில்
கடலும் மறந்து போச்சு;உப்பளத்
திடலும் மறந்து போச்சு
உடலும் பெருத்துப் போச்சு
உடலுக்கு நடைப்பயிற்சியும் என்னாச்சு?
”இரயிலடி என்றால் என்ன?”
இனிவரும் சந்ததிகளின் அறியாமையாச்சு
அஃதொரு கனாக்காலம்!!
இரவின் முழுத் தூக்கமும்
இரயிலின் நீண்ட ஓட்டத்தில்
ஃபஜ்ரின் நேரத்தில்
பளிச்சென கதிரவன் உதயத்தில்
படுக்கையை விட்டெழுந்தால்
அதிராம்பட்டினம் இரயில் நிலையம்
அதிர்ந்திடும் எண்ண ஓட்டம்
அதிரையில் நிற்கும் இரயிலின் ஓட்டம்
குதிரை வண்டியில் குதூகலமாய்
வீட்டை நோக்கியே ஓடும் மனமும்
தேட்டமாய்ப் பார்க்கின்றேன்
எங்கோப் போனது இரயில் பயணம்?
ஆஹா! பிரம்மாதம்!!
கலாம் காதிர் அவர்களின் கவிதை மழையில் மட்டும் நனையவில்லை!
பழைய நினைவலைகளின் மழையிலும் நனைகிறேன்.
எங்கோப் போனது இரயில் பயணம்?
எங்கேயும் போகவில்லை.போராடினால் மீண்டும் வரும் இன்ஷா அல்லாஹ்...
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment