அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, December 17, 2011

“ கொசு “ தொல்லை தாங்க முடியலப்பா !


தண்ணீருக்கு அடுத்தபடியாக நோய் பரப்புவது கொசுக்களாகும். டெங்கு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற பயங்கர வியாதிகளை கொசுக்கள் பரப்புகின்றன. இது தவிர பலவித வைரஸ்களை பரப்புவதன் முலம் வேறு சில வியாதிகள் தொற்றவும் காரணமாக இருக்கின்றன.
இந்த கொசுக்களால் மனித இனம் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்சமல்ல. உலகில் 40 சதவீதம் பேருக்கு டெங்கு காய்ச்சல் கொசுக்கள் முலம் பரவுகிறது. ஆண்டு தோறும் 10 கோடி பேர் பாதிப்புக்குள்ளாவதில் ஏறக்குறைய 22 ஆயிரம் பேர் பாதிப்பு அதிகமாகி இறந்துவிடுகிறார்கள். ஏடிஸ் இன கொசுக்களே இதற்கு காரணமாகும்.


மனிதர்களின் உயிரையே பறிக்கும் மிகவும் அபாயகரமான நோய்களை வேகமாக உண்டாக்குவதில் கொசுக்களுக்கே முதலிடம். கொசுக்களிடமிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வது நமது நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது. குறிப்பாக குழந்தைகள் இதனால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒரு கொசுவின் இனப்பெருக்க காலத்தில் அது ஆயிரக்கணக்கான கொசுக்களை உற்பத்தி செய்து விடுகிறது. எனவே கொசுக்களை முற்றிலும் ஒழிப்பது என்பது சாத்தியமில்லாதது. ஆனால் அவற்றின் உற்பத்தியைக் குறைக்க முடியும். கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாவதற்கு நாமே காரணமாக இருக்கிறோம்.


இயற்கையாக கொசுக்களின் உற்பத்தியை ஓரளவு குறைப்பது எப்படி ?
1. வீட்டின் பின்பகுதியில் தண்ணீரைத் தேங்க விடுவது கூடாது. நீர் தேங்கும் இடங்களில் பிளிச்சிங் பவுடரை இடலாம் மற்றும் பினாயிலையும் ஆங்காங்கே தெளிக்கலாம்.
2. " சுத்தம் " என்பது ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாதது சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருத்தல் கூடாது.
3. தெருக்களில், குளம், குட்டைகளில் கழிவு மற்றும் குப்பைகளை கொட்டுவது உள்ளிட்ட சில காரணங்களால் கொசுக்களின் உற்பத்தி பல மடங்காகி விடுகிறது. இதை முதலில் நிறுத்த வேண்டும்.


எனவே இயற்கையாக கொசுக்களின் உற்பத்தியைத் முழுவதுமாக தடுக்க முடியாவிட்டாலும், கொசுவின் உற்பத்தியைத் ஓரளவு தடுக்கும் விதத்தில் நாம் செயல்பட முயற்சி செய்ய வேண்டும்.


செயற்கையாக கொசுக்களின் கடியை தடுப்பது எப்படி ?
1. சீனாவில் உள்ள NINGBO, FOSHAN, SHUNDE போன்ற மாகாணங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிற ELECTRONIC INSECT KILLER MACHINE, INSECT KILLER BAT மற்றும் இன்றைய காலகட்டத்தில் பல நவீன எலக்ட்ரானிக் சாதனங்கள் வந்துள்ளன. இவைகளையும் பயன்படுத்தலாம்.
2. மேலும் ELECTRONIC SPRAY, INSECT KILLER LIQUED, COIL போன்றவைகளையும் பயன்படுத்தலாம். ஆனால் இவைகள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.


மேலும் கொசுத்தொல்லையை ஒழித்திட, நமது பேருராட்சியை அணுகி அவர்களை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் / மாவட்ட மலேரியா ஒழிப்பு அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க கேட்டுக்கொள்ளலாம்.

குறிப்பு :- தற்பொழுது மழை மற்றும் பனி காலமாக இருப்பதால் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து சூடு தணிந்த பிறகு அருந்த வேண்டும்.


இறைவன் நாடினால் ! தொடரும்........................................

9 பின்னூட்டங்கள்:

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தேர்தல் வாக்குறுதியை இது போன்ற கட்டுரையின் வாயிலாக நிறைவேற்றுவது போன்று உள்ளது.

பாதி கொசு தொல்லையை கட்டுரையாளர் சொன்னது போல் நாங்கள் நீக்கி விட்டோம்.

மீதி கொசுவை பஞ்சாயத் போர்டு துரத்தியடிக்குமா?

கொசுக்கடியை தடுப்பதற்கு நம்மூரில் வறுமையில் உள்ளவர்களிடம் கூட உள்ளது. அதேசமயம் இது போன்றவைகளை பயன் படுத்தும்போது ஈரல், குடல், இளைப்பு ஆகிய வியாதிகள் வந்துவிடுங்கின்றனவே... இதை யார் நம்ம தலைவர்களா? தடுப்பார்கள். (இதற்க்கு Side Effect இருக்காது என்பது சுத்தப் பொய்)

சகோ. நிஜாம் அவர்களே... உங்களுடைய கட்டுரை பலனடையக் கூடியதுதான். அதை மறுக்கவில்லை. அதேசமயம் தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு...

(ஆரம்பத்தில் நாங்கள் குப்பையை குப்பத் தொட்டியில் போடாமல் ரோட்டில் போட்டுவிட்டு புலம்புவது நல்லதல்ல என்பதாக சுட்டிக்காட்டினோம். அதே கருத்தை பஞ்சாயத் போர்டு அதை நோட்டீசாக வெளியிட்டது.)

உங்கள் பலனுள்ள கட்டுரைக்கு நன்றி செலுத்தியவனாக "துக்ளக் நியூஸ் குழுமம்"

அபூ இஸ்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சுகாதாரம் என்பது ‘நோயற்ற வாழ்வே ‘ நோய்களை ஏற்படுத்தும் ‘ கொசுவின்’ அரஜாகத்தை முதலில் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

aks said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஒரு பேரூராட்சி தலைவருக்கு தெரிய வேண்டிய அனைத்து அறி்வும் சகோ. நிஜாம் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்துள்ளான். இவரைப் போன்ரோரை பேரூராட்சி தலைவ்ராக எதிர்காலத்தில் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அது வரை இவரை கொள்ரவ ஆலோசகரா நியமிக்க வேண்டும்.

அதிரை நியூஸ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கொசு உற்பத்திக்கு முக்கிய காரணம் தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீரே, வீடுகளில், தெருக்களில் தேங்காய் ஓடு, டயர்கள், உடைந்த பொருள்கள் போன்றவைகளை போடக்கூடாது.

ஓட்டு கேட்டு வந்த கவுன்சிலர்களே கொசுத்தொல்லையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள்

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//இவரைப் போன்ரோரை பேரூராட்சி தலைவ்ராக எதிர்காலத்தில் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அது வரை இவரை கொள்ரவ ஆலோசகரா நியமிக்க வேண்டும்.//

உணர்ச்சி வசப்பட வேண்டாம் சகோதரரே....ஏதோ நிஜாம் அவர்கள் செய்யும் நல்ல காரியங்கள் கேட்டுப் போய்விடும். அப்புறம் நிஜாம் எது எழுதினாலும் பஞ்சாயத் போர்டு ஏறுக்கு-மாறா நடக்க ஆரம்பிச்சுடும்.

ஏற்கனவே வரக்கூடிய பஞ்சாயத் தேர்தல்லே 3 டஜன் போட்டியாளர்களே நாம எப்படி சமாளிக்கப் போறேம்னு தெரியல.

"எங்கள் ஒட்டு நிஜாமுக்கு"
"வாழ்க பாரதம்"
"வளர்க முஸ்லிம் பத்திரிகை துறை"

"போடுங்கம்மா ஒட்டு - உங்களுக்கு வப்பாங்க வேட்டு"

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்
மிகவும் பயனுள்ள செய்திகள் - அனைவரும் ஒத்துழைத்தால்தான் இது சாத்தியமாகும்.

அபூ இஸ்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தமிழக அரசு வருங்காலங்களில் அதாவது தேர்தல் நேரத்தில் இலவச அறிவிப்பாக ரேஷன்கார்டு கார்டு உள்ள அனைவருக்கும் கொசு பேட் மற்றும் கொசு விரட்டி கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதில் ஒன்றும் இல்லை.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தனிமனித புகழ்ச்சி நிச்சயம் வீழ்ச்சிக்குதான் வழிவகுக்கும் என்பதை வாசகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.... ஒருவரை எளிதாக வீழ்த்த வேண்டுமா....? வானுயர புகழுங்கள்..... மதி மயக்கம் அவரை பீடிக்கும் பிறகு பாருங்கல்.......

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//ஒருவரை எளிதாக வீழ்த்த வேண்டுமா....? வானுயர புகழுங்கள்..... மதி மயக்கம் அவரை பீடிக்கும் பிறகு பாருங்கல்.......//

மதியழகா... அவருக்கு பிடித்த பீடயிலிருந்து தப்பிக்க ஒருவழி இருக்கு. யாராவது அவர புகழ்ந்தா ... புகழப்படுபவரே சற்று ஆவேசமா என்னப்பா கொசு இப்படிக் கடிக்கிதுன்னு சொல்ல ஆரம்பிச்சார்னா போதும்......புகழும் நபர் கொஞ்சம் விலகுவார்....

நம்மூர் தலைவர்கள் கொசுவை விரட்டுவதற்கு முன்னாடி இந்த புகழ் கொசுக்களிடம் அடிக்கடி "கொசுக்கடி"ன்னு சொல்ல ஆரம்பிக்க வேண்டியது தான். (அதுவும் சென்னையிலிருந்து வந்த கொசுக்களிடம் இருந்து நம்ம தலைவர்கள் தப்பிக்க).

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.