இக்கட்டுரையை படிக்கும் முன்பு இப்பதிவில் உள்ள படங்களை ( PHOTOS )பார்த்துவிட்டு தொடரவும்.
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் ! முஸ்லிம்கள் பெருபான்மையாக வாழும் ஹஜரத் பிலால் நகரில் பெரும்பாலும் ஏழை எளியோர்களாக இருக்கிறார்கள். இப்பகுதியில் மிகவும் புகழ் பெற்ற ஹஜரத் பிலால் ( ரலி ) மஸ்ஜித், காதிர் முகைதீன் பெண்கள் தங்கும்விடுதி, காதிர் முகைதீன் கல்லுரி மற்றும் EAST COASTAL ரோட்டை (E.C.R ) ஒட்டியப்பகுதியாகவுள்ளது. இப்பகுதி மிகவும் தாழ்வான நிலப்பரப்பில் அமைந்துள்ளதால். இதனால் ஒவ்வொரு வருடங்களிலும் பெய்கின்ற மழையினால் அருகில் உள்ள செல்லியன் குளத்திலிருந்து வழிந்து நிரம்புகின்ற நீரானது ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால்களை முறையாக தூர் வாரப்படாததல் அருகில் உள்ள பிலால் நகர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து ஆங்காங்கே தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் வைரஸ் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இப்பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி அன்றாட வாழ்க்கைகள் மிகவும் பாதிப்புக்குள்ளகின்றன. இப்பகுதிகளில் இருந்துசெல்லும் பள்ளிக்குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சாலைகளில் நடந்துசெல்ல முடியாமலும், இரவு நேரங்களில் மஸ்ஜித்க்கு சென்று தொழக்குடியவர்களும், கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். சம்பந்தபட்டபகுதி பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட ஏரிபுறக்கரை கிராம உள்ளாட்சியில் வருவதால் இப்பகுதி மக்களின் சார்பாக கோரிக்கை மனு ( ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால்களை முறையாக அகற்றி தூர் வாருதல் தொடர்பாக ) ஓன்று ஏரிபுறக்கரை கிராம பஞ்சாயத்து தலைவர் ( பதவியில் உள்ளபோது ) அவர்களிடம் கடந்த 11-08-2011 அன்று கொடுக்கப்பட்டது. அவர்களும் கிராம சபையைக்கூட்டி தீர்மானம் ஓன்று நிறைவேற்றி அத்தீர்மானத்துடன் கிராம நிர்வாக அதிகாரியின் சான்றிதழுடன் இணைத்து சம்மந்தப்பட்ட அதிகாரி ( பட்டுக்கோட்டை தாசில்தார் ) அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அவற்றை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உள்ளாட்சி தேர்தல் நடக்கக்கூடிய காலமாகவுள்ளதால் தேர்தல் முடிந்த மறுநாள் (20-10-2011 ) வந்து ஆய்வு செய்வதாக உறுதியளித்தவர்கள் இதுவரையில் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால்களை முறையாக அகற்றி தூர்வார ஆவணம் செய்யவில்லை. புதியதாக பொறுப்பேற்றிருக்கும் ஏரிபுறக்கரை கிராம பஞ்சாயத்து தலைவர் அவர்கள் கவனத்திற்கும் கொண்டுசென்று நீண்ட நாள்களாக காத்துக்கொண்டு இருக்கிறோம். அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவருக்கு கோரிக்கை :- இப்பகுதி பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் பேரூராட்சியை ஒட்டிய பகுதியாகும். பெரும்பாலான மக்கள் மற்ற முஹல்லாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். இப்பகுதிகளில் ரேசன் கடை, வாக்குசாவடிகள், சுகாதாரம், சமுதாயக்கூடம், பள்ளிக்கூடம் இல்லாத காரணத்தினால் பெரும்பாலான மக்கள்கள் அதிராம்பட்டினத்தை சார்ந்து வருகின்றனர். மேலும் இப்பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதி மிகவும் பின்தங்கி உள்ளன. ஆதலால் இப்பகுதிகளில் வாழும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இப்பகுதியை அதிராம்பட்டினம் பேரூராட்சியுடன் இணைத்து அதற்கு உண்டான தீர்மானத்தை தலைவர், துணை தலைவர் மற்றும் உருப்பினர்கள் அனைவருடைய ஒத்துழைப்புடன் நிறைவேற்றி இப்பகுதிகளில் வாழும் மக்கள்கள் பயன்பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் ஆவணம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மக்களின் சார்பாக, M. நிஜாமுதீன் B.sc. ( 9442038961 ) |
6 பின்னூட்டங்கள்:
கொஞ்சம் பொறுங்கள்.
நம்ம தலைவர்கள் வீட்டுப்பக்கமும் இந்த கதிதான்.
இந்த போட்டோவ பார்க்கும்பொழுது ஆட்சி மாறிய சந்தோசம்தான் மக்கள் பார்வையில் தெரியுது.
பேசாமே... நீங்க இந்த ஹளரத். பிலால் நகருக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தச்சொல்லி உங்க தலைவர்கள கூப்புடுங்க....
ஒரு சின்ன காப்பி ரோடாவது போடுவாங்க.....
அதிரை பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் சகோதரர் நிஜாமின் கோரிக்கையான, இப்பகுதியை அதிராம்பட்டினம் பேரூராட்சியுடன் இணைத்து அதற்கு உண்டான தீர்மானத்தை நிறைவேற்றுவார்களா ?
அஸ்ஸலாமு அலைக்கும்
அதிரை பெரூராச்சி நிர்வாகம் மற்றும் ஆளுங்கட்சி இணைந்து பிலால் நகருக்கு தேவையான சீரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக செய்தால் பெரு மழை காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயங்களில் இருந்து மக்களை காப்பற்றலாம்.
அன்புச்சகோதரர் நிஜாமுக்கு எங்களுடைய முஹல்லா சார்பாக வாழ்த்துக்கள். இக்கோரிக்கையை சம்பந்தப்பட்டவர்கள் நிறைவேற்ற எல்லா வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
ஹஜரத் பிலால் நகர்வாசிகள்
ஆகா எவ்வளவு தண்ணீர் பார்பதற்கே அழகாக இருக்கிறது என்கிறது மனம்..... உள்ளம் சிறுபிள்ளையாய் துள்ளுகிறது.... ஆனால் பெரியோர்களின் பார்வையில் இது ஒரு இடர்பாடு என்பதில் சந்தேகமே இல்லை... கவுன்சிலர் என்ன செய்ய போகிறார் ?
எல்லா முஸ்லிம் இயக்கங்களும் ஒன்றிணைந்து போராடவேண்டும்,அப்பகுதி மக்களின் துயர் போக்க.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment