அதிரை பேரூராட்சியின் நிர்வாக தேர்தல் இன்று காலை சுமார் 10:30 மணியளவில் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் 21வது வார்டு உறுப்பினர் H.முஹம்மது இப்ராஹிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய கம்யுனிஸ்டு கட்சியை சேர்ந்த காளிதாஸ் மற்றும் தி.மு.க. சார்பில் 21வது வார்டு உறுப்பினர் H.இப்ராஹிம் போட்டியிட்டனர். இத்தேர்தலில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வாக்கு செலுத்தினர் இதில் 16ஆம் வார்டு உறுப்பினர் அதிரையில் இல்லாத காரணத்தால் வாக்கு செலுத்த அவர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.!

தேர்வு முடிவில் இரு வேட்பாளர்களுக்கு தலா பத்து வாக்குகள் கிடைத்தன இதனால் குலுக்கல் முறையில் இறுதியாக தி.மு.க. சார்பில் 21வது வார்டு உறுப்பினர் இப்ராஹிம் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதிரை பேரூராட்சியின் வரி மேல் முறையீட்டுக் குழு தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் திமுக உறுப்பினர்கள் போட்டியிட்டனர் இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட உறுப்பினர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.!
அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள்:
--------------------
8வது வார்டு - ஷாகுல் ஹமீது
10வது வார்டு - சப்ருன் ஜமீலா
18வது வார்டு - அபுதாஹிர்
2வது வார்டு - உதயகுமார்
தி.மு.க. சார்பில் போட்டியிட்ட உறுப்பினர்கள்:
----------------------
12வது வார்டு - செய்யது
14வது வார்டு - ஷரீப்
11வது வார்டு - உம்மல் மர்ஜான் (அன்சர் கான் மனைவி)
20வது வார்டு - சித்ரா
1 பின்னூட்டங்கள்:
எத்தனை தேர்தல்தான் நடக்குமோ.... எது நடந்தாலும் ஊருக்கு நன்மை பயத்தால் நல்லதே:)
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment