3G ஓர் எச்சரிக்கைபார்வை !
அதிராம்பட்டினம் போன்ற ஊர்களுக்கு வெகு விரைவில் 3G என்ற அதி நவீன மொபைல் வசதி வர இருக்கிறது. இதனால் நம் சமுதாயதிற்கு என்ன நன்மை ஏற்பட போகிறது? என்ன தீமை உருவாகும்? இவை சம்பந்தமாக ஒரு அறிவு சார்ந்த அலசல்
2G நம் இந்திய அரசியலையே புரட்டி போற்றிக்கிறது.. குறிப்பாக தமிழகத்தை தலை கீழ் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதை நாம் மறந்திட வாய்ப்பில்லை. ஆனால் 2G வரவால் சமுதாய சீர்கேடு ஏற்பட்டுவிடவில்லை ( சில ஆயிரம் கோடிகள் இழப்பீடு ஏற்பட்டதை தவிர ) என்ற போதிலும் 3G அறிமுகத்தால் பெரியதொரு சமுதாய சீரழிவு ஏற்பட மிகபெரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 3G மொபைல் நெட்வொர்க் மூலம் அதி வேக இன்டர்நெட் உபயோகபடுத்தலாம், வீடியோ மற்றும் புகை படங்களை நொடியில் உலகில் எந்த மூளைக்கும் அனுப்பிவிடலாம். இவை எல்லாம் பெரிய விஷயமல்ல.
3G மூலம் வீடியோ டெலிபோன் தான் மிகப் பெரிய பிரச்சனை உருவெடுக்க காத்திருக்கிறது. உங்கள் வீட்டு ஜன்னல் கதவை திறக்காமலேயே அந்நிய நபருடன் வீடியோ போன் மூலம் உரையாடலாம், அந்நியன் எங்கிருந்தாலும் இதற்க்கு வாய்ப்புகள் அதிகம். இதில் மிக கேடான விஷயம் என்னவெனில் , மறு முனையில் உள்ளவர் இந்த உரையாடல் / நிகழ்வுகளை பதிவு செய்யலாம் இந்த பதிவை வைத்து ப்ளாக் மெயில் செய்ய வாய்ப்புள்ளது.
வருமுன் காப்போம் (Prevention is better than cure) என்ற கூற்றின்படி
தாய் தந்தையர் தன் பிள்ளைகளுக்கு குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு கேமரா போன் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
மொபைல் போனில் என்னென்ன வீடியோ, புகை படங்கள் உள்ளன என்பதை அவ்வபோது நோட்டமிடுதல் அவசியமானது.
தாய், தந்தையர் தங்கள் பிள்ளைகளுடன் மனம் விட்டு இதன் தீமைகளை விளக்கி கூறினாலே, பிள்ளைகள் தங்களை தானே இவ்வித சூழ்நிலைகளிலிருந்து பாதுகாத்து கொள்வார்கள்.
ஒரு தீமையிலும், ஓர் நன்மை உண்டு, புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் விழும் என்ற தத்துவ பாடலின்படி.
இதன் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் அன்பர்கள் தங்கள் உறவினர்களுடன் மனமார உரையாடலாம்.
தங்கள் வீட்டின் விசேஷ நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பாக கண்டுகலிக்கலாம்,. வீட்டு கட்டுமான பணிகளை பார்வையிடலாம்.
அவரசர கால நிகழ்சிகளையும் டிவி நிலையங்களுடன் இணைந்து ஒளிபரப்பு செய்யலாம்., மாணவர்கள் கல்வி கற்க video conference முறையில் இந்த வசதியை பயன்படுத்தி மேற்படிப்பு படிக்கலாம்.
குடும்ப நல மருத்துவருடன் தொடர்பு கொண்டு மருத்துவ உதவி பெறலாம்.
3G கட்டணம் மாதம் ரூ 1500 / வரை மொபைல் கம்பெனிகள் நிர்ணயித்துள்ளனர்
நம் அந்தரங்க விஷயங்கள் வெளியில் போகாதவரை இவை எல்லாம் நன்மை பயக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. நம் சமுதாயத்தை அறிவியல் ரீதியாக தகர்க்க வரும் இது போன்ற டெக்னாலஜி ஊடுருவலை உன்னிப்பாக கண்காணிக்க தயாராகுங்கள் . அறிவியலை வரவேற்ப்போம், அறிவியல் என்ற போர்வையில் சமுதாய சீர்கேட்டை தடுத்திடுவோம்.
அப்துல் ரஜாக்(chasecom)
16 பின்னூட்டங்கள்:
சரியான நேரத்தில் சரியான கட்டுரை. நம் சமுதாயத்திற்கு இதுபோன்று ஆலோசனை அவசியம்தான்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அப்துல் ரஜாக் காக்கா அவர்கள் 3G.யின் நன்மை தீமை பற்றி அழகாக விளக்கி இருந்தாலும்.இது போன்ற சாதனங்கள் வாங்குபோது நன்மையை நாடியே தான் வாங்குகிறார்கள்.கால சூழ்நிலையினாலும்.
ஷைத்தானுடைய சூழ்ச்சினாலும்.மனிதன் தவறான பாதைக்கு சென்று விடுகிறான்.இது போன்ற இழிவான
காரியங்களில் சிக்கிக் கொள்ளாமல். 100 G.என்கிற தரமான மார்க்கத்தை தானும் கற்று தன் பிள்ளைக்கும்
கற்று கொடுப்பானேயானால்.எத்தனை G வந்தாலும் மனிதன் ௦ ௦0 G க்கு சென்று விடாமல் அல்லாஹ்
பாதுகாக்க போதுமானவன்.
நல்ல பயனுள்ள கட்டுரை. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகத்தில், புதிது புதிதாக உருவாகும் சாதனங்களால் சாதக/பாதகங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுதல் மிக அவசியம். தூரத்தில் வாழும் உறவினர்களை கைக்குள் அடக்கமான கருவிக்குள் கண்டு களித்தல் சாத்தியமானது என்றாலும், அதே திரையில் ஆபத்தும் இருக்கின்றது என்பதையும், இரு முனைகளுக்கும் இடையில் காண்காணிப்புகளும் பதிவுகளும் நிகழ வாய்ப்பும் இருக்கின்றது என்பதையும் தெரிந்து கொள்ளுதல் கட்டாயம். பகுத்து ஆயும் திறனும், பார்த்து பக்குவமாய் உபயோகிக்கும் முறையும் தெரிந்தால், எந்தச் சாதனமும் சாதகமே.. தனிமையில் உபயோகிக்கப்படுத்துதலும், பிறரது பார்வையிலிருந்து மறைக்கப்படுவதுமாக ஒரு சாதனம் உபயோகிக்கப் படுகிறதென்றால், அதில் நிச்சயம் பாதகமே..
இந்த கட்டுரையை பதிந்த கட்டுரை ஆசிரியருக்கு என் நன்றி.
முன்பெல்லாம் கார் யாரிடம் இருக்கிறது என்று சொல்லிவிடலாம்.
இப்பொழுது கார் யாரிடம் இல்லை என்று சொல்லிவிடலாம்... என்பதுபோல்...
கல்யாணத்திற்கு முன் பெண்ணை ஒருமுறைகூட பார்த்தவரை எண்ணிவிடலாம். (இஸ்லாத்தில் அனுமதி இருந்தும்கூட..)
3G மூலம் பார்க்காதவரை இனிமேல் என்னிவிடலாம்.
துக்ளக் நியூஸ் குழுமம் உங்கள் எல்லோரையும் கேட்டுகொள்வது என்னவென்றால்....
"உங்களுக்கு துக்கம் வருமுன் தூங்கிவிடாதீர்கள்"
"உலமாக்கள் கை ஓங்கட்டும்"
"அடிமைத்தன எண்ணம் குறையட்டும்"
அஸ்ஸலாமு அழைக்கும்
இப்பொழுது எத்தனை ஜி வந்தாலும் உலகம் கெட்டுதான் போகப்போகுது இன்னும் சொல்ல போனால் 3G வந்தால் அதிகமாக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் எல்லா மக்களும் கெட்டு போகுவதற்கு மிக எளிதாகிவிடும். அதில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக ஆமீன்.பள்ளி படிக்கும் குழைந்தைகலை மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.என்னாதான் நன்மையை நாடி வாங்கினாலும் தீமை தான் மிக அதிகம் உள்ளது.
மு.செ.மு. அபூபக்கர்
விஞ்ஞான முன்னேற்றம் ஒரு மிகப்பெரிய அழிவுக்கு வழிவகுக்கும் என்பது கற்றரிந்தவர்களின் கூற்று.... செல்போன் இல்லாத காலத்திலும் வியாபாரம் நடந்தது தற்போதும் நடக்கிறது என்ன வித்தியாசம் நிம்மதியற்ற வியாபாரம்...! இன்றைய சூழ்நிலையில் விஞ்ஞான முன்னேற்றம் என்பது தவிர்கமுடியாதது, விவேகமான முறையில் இதனை கையாண்டால் நன்மை பயக்கும் இல்லாவிடில் "அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழிபோல் ஆகி விடும்
ஆய்வு கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது சிறப்பான பங்களிப்பை செய்து வரும் சகோதரர் அப்துல் ரஜாக் காக்கா அவர்களின் எழுத்துப்பணி மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.
சமுதாயத்தின் நலன் கருதி சகோதரர் அப்துல் ரஜாக் அவர்கள் எழுதிய கட்டுரை மென்மேலும் பாராட்டுக்கு உரியது
weldon kakka
இதுபோன்ற கட்டுரைகளை நோட்டீசாக அச்சடித்து,சமுதாய அமைப்புக்கள்
,சங்கங்கள் பெற்றோர்களிடம் விழிப்புணர்வுக்கு ஏற்பாடு செய்யலாம்,ஜும்மா மேடைகளில் சொல்லலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பான சகோதரர்களே எனது பார்வையில் இந்த நெட் யுகம் என்பது இந்த உலகம் மாதிரி.. இந்த உலகத்தில் நல்லதும் உள்ளது, தீயதும் உள்ளது. நமக்கு இம்மைக்கும் மறுமைக்கும் எது நல்லதோ அதனை நாம் எடுத்துக்கொள்வோம். எது தீயதோ அதனை தவிர்ந்து கொள்வோம்.
அதே போல் இன்டர்நெட் விசயத்திலும் நாம் நல்லதை எடுத்துக்கொண்டு தீயதை விட்டு விட வேண்டும். அல்லாஹ் நம்மை எப்போதும் கண்காணிக்கிறான் என்ற நினைவும அச்சமும் இருந்தால்தான் இது சாத்தியம்.
எ.அஹ்மத் தாஹா , அல் கோபார் - சவுதி அரேபியா.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பான சகோதரர்களே 3G ஓர் எச்சரிக்கைபார்வை ! என்ற ஒரு கட்டுரை எமது பாலாக்சப்பாட்ல் பதித்து நமது சமுகத்திற்க்கு இதனுடைய ஒரு ஆபத்தான பயன்பாட்டை சுட்டிகாட்டினார்கள். அதே சமயம் எமது மார்க்கத்தின் அடிப்படியல் இது போன்ற நவின சாதன்ங்கள் பற்றி என்ன சொல்லுகிறது எனப்தையிம் எமது சமுகத்திற்க்கு சுட்டிகாட்டி, அதை மார்க்க சட்ட வீதிகளுக்கு உட்பட்டு அவைகளை நாம் பய்ன் படுத்திகொல்லவேண்டும்.இன்ஷா அல்லாஹ்
அல் குர் ஆனின் அல்லாஹ் சொல்கிரான்:
(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் - அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு. (sura 31:6)
அல்லாஹ் இந்த ஆயத்தில் வீனான பேச்சுகளை விலைக்கு வாங்கி, அவைகள் மூலமாக எமது ச்முகம் ஃபித்தானின் பக்கம் சென்ற்று கொண்டு இருப்பதை நாம் பார்த்து கோண்டுதான் இருக்கிரோம்.
நபியவர்கள் கூறினார்கள்.
“விபச்சாரம், பட்டாடை, மது, இசைக் கருவிகளை ஹலாலாகக் கருதக்கூடிய சில கூட்டத்தினர் எனது சமுதாயத்திலே தோன்றுவார்கள்…” என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ மாலிக், ஆதாரம்: புகாரி – 5590)
அல்லாஹ் எமது சமுக்த்தை பாதுகாப்பானாக...ஆமீன்
அல்லாஹ் அஃலம்..
அபூ அப்துல்லாஹ் முஹம்மது யூசுஃப்
டெஃபி பிளஸ் மொபைல்போன் : மோட்டரோலோ அறிமுகம்
மொபைல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மோட்டரோலோ நிறுவனம், ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் டெஃபி பிளஸ் மொபைல்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, பத்திரிகையாளர்களை சந்தித்த மோட்டரோலோ (விற்பனை மற்றும் செயல்பாடுகள் பிரிவு) உயர்அதிகாரி ராஜன் சாவ்லா கூறியதாவது, 7 மணிநேர டாக்டைம், 16 நாட்கள் பேட்டரி ஸ்டாண்ட்பை டைம், 1 ஜிகாஹெர்ட்ஸ் புராசசர், ஜிஞ்சர்பிரெட் எனப்படும் ஆண்டராய்ட் 2.3 பதிப்பிலான ஆபரேடிங் சிஸ்டம், 3.7 இஞ்ச் டச் ஸ்கிரீன் தொடுதிரை, 5 மெகாபிக்சல் கேமரா, 32 ஜிபி வரையிலான நீட்டிக்கத்தக்க மெமரி, அடோப் பிளாஷ் 10 அடிப்படையாகக் கொண்ட பிரவுசர் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்ட இந்த போனின் விலை ரூ. 19,940 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ. 2,999ல் டேப்ளெட் பிசி : அசத்தும் ரிலையன்ஸ்
விரைவில் பரவலாக்கப்பட இருக்கும் 4ஜி தொழில் நுட்பத்தின் இயக்கத்தையும் இணைத்து, டேப்ளட் பிசி ஒன்றை வடிவமைத்து, பட்ஜெட் விலையில் வழங்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த திட்டத்தில் தங்களுடன் ஒத்துழைக்க கனடா நாட்டின் டேட்டாவிண்ட் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் தான், உலகிலேயே மிக மலிவான விலையில் ஆகாஷ் என்னும் டேப்ளட் பிசியினை அண்மையில் வெளியிட்டது. மேல் நாடுகளில், பல நிறுவனங்கள் 4ஜி தொழில் நுட்பத்துடன் டேப்ளட் பிசியினை வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றன. ஆனால் ரூ.4,000 முதல் ரூ.5,000 வரையிலான விலையில் இதனைத் தர ரிலையன்ஸ் முன்வந்துள்ளது சிறப்பான முயற்சி ஆகும். ஏனென்றால், இந்த விலை மேல்நாட்டு விலையில் நான்கில் ஒரு பங்காகும். வரும் டிசம்பர் மாதம் ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பத்துடன் இயங்கும் டேப்ளட் பிசி ஒன்றை டேட்டாவிண்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் விலை ரூ. 2,999 என்ற அளவில் இருக்கும். முன்பு மொபைல் போன் பயன்பாடு அறிமுகமான போது மிகவும் மலிவான விலையில் நாடு முழுவதும் சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பத்தில் இயங்கும் மொபைல் போன் மற்றும் சேவையினை வழங்கி ரிலையன்ஸ் முன்னணி இடத்தைப் பிடித்தது. இதே வழியில், டேப்ளட் பிசி விற்பனையிலும் தன் தடத்தைப் பதிக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிடுகிறது.
நாளுக்கு நாள் புதுப் புது மொபைல் போன்கள் சந்தையில் வந்து கொண்டு இருக்கின்றன. கையடக்க கணினி என அழைக்கபடும் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் வசதியிலும், விற்பனையிலும் சிறந்து விளங்குகிறது. ஆப்பிளுக்கு பரம போட்டியாளரான கூகுள் சும்மா இருக்குமா என்ன அதுவும் ஆப்பிளுக்கு போட்டியாக Android எனப்படும் புதிய இயங்குதளத்தை உருவாக்கி போட்டியில் இறங்கி உள்ளது. இப்பொழுது இந்திய மார்க்கெட்டில் ஆப்பிள் போன்களை விட android வகை போன்கள் அதிக அளவில் விற்பனை ஆகின்றன. கூகுள் நிறுவனம் மேலும் போட்டியை வலுப்படுத்த புதிதாக சாம்சங் மொபைல் நிறுவனத்துடன் இணைந்து Google Nexus என்ற புதிய வகை போன்களை கூடிய விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதில் பல்வேறு வசதிகள் அடங்கி உள்ளது. அதற்க்கான ஆன்லைன் புக்கிங் சேவையை கூகுள் இந்தியா நிறுவனம் தற்பொழுது தொடங்கி உள்ளது.
சிறப்பம்சங்கள்:
Android 4.0இந்த மொபைல் போனில் புதிய வரவான கூகுளின் Android4.0 வகை இயங்குதளம் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. தோற்றம் மிகவும் ஸ்லிம்மாக உருவாக்கப்பட்டுள்ளது.
Face Unlock
இந்த மொபைலில் Face Unlock வசதி உள்ளது. அதாவது இந்த மொபைல் போனை Unlock செய்ய பாஸ்வேர்ட் எதுவும் உபயோகிக்க தேவையில்லை. மொபைல் போனில் உள்ள கேமராவை ஓபன் செய்து அதில் உங்கள் முகத்தை படம் பிடித்தால் போதும் Unlock ஆகிவிடும். திரும்பவும் உங்கள் முகத்தின் நேராக வைத்தால் தான்
Voice Typingஇந்த போனில் உள்ள இன்னொரு முக்கியமான வசதி Voice Typing. நீங்கள் பேசினாலே போதும்(ஆங்கிலத்தில் மட்டும்) தானாக அது வார்த்தைகளை டைப் செய்து கொள்ளும்.
முன்பதிவு செய்வது எப்படி:
இந்த லிங்கில் கிளிக் செய்து கூகுள் தளத்திற்கு செல்லுங்கள். அங்கு உள்ள Register Now என்ற பட்டனை அழுத்தவும். உங்களை விண்டோவின் கீழே பகுதிக்கு அழைத்து செல்லும் அதில் உங்களின் ஈமெயில் ஐடியை கொடுத்து அருகில் உள்ள Register என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களின் ஈமெயில் ஐடி பதிவு செய்யப்படும்.
விற்பனைக்கு வந்தவுடன் அதற்க்கான அழைப்பை உங்கள் மெயிலுக்கு அனுப்புவார்கள். இந்தவகை போன்கள் அமெரிக்காவில் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படுகிறது. அதன் வரவேற்ப்பை பொறுத்து தான் அடுத்த கட்ட நடவடிக்கையை கூகுள் நிறுவனம் எடுக்க போகிறது. (தகவல் – சசி)
மு.செ.மு.அபூபக்கர்
செல்போன்களின் வில்லன் தண்ணீர்!
தண்ணீர் மூலமே செல்போன்கள் அதிக அளவில் பாழாகிறது என்கிறது ஓர் ஆய்வு. நம் ஆறாம் விரலாகிப்போன செல்போன்களை நாம் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறோம். செல்போன்களை மாற்றுவதற்கு முக்கியக்காரணம் ஒன்று அது பாழாகியிருக்க வேண்டும் அல்லது தொலைந்துபோயிருக்க வேண்டும். செல்போன்கள் எவ்வாறு பாழாகிறது என்பது குறித்து பிரிட்டனில் ஒரு செல்போன் நிறுவனம் ஆய்வு செய்தது. 18 வயதுக்கு மேற்பட்ட 2,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 73 சதவீதம் பேர் தண்ணீர் மூலம்தான் செல்போன்கள் பாழாகிறது என்று கூறியுள்ளனர். தண்ணீர் என்ற பிரிவில் கழிவறைதான் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவதாக காபி, டீ, மது போன்றவை சிந்துவதால் செல்போன்கள் பாழாகிறது. மூன்றாவதாக குளியல் அறை, நான்காவதாக சமையல் பாத்திரங்கள் கழுவும் இடம், அதற்கு அடுத்ததாக சிலர் சட்டைப் பைகளில் செல்போன்கள் இருந்தவாறே வாஷிங்மெஷினில் போட்டு துவைத்துவிடுகின்றனர் என்கிறது ஆய்வு முடிவு. உலகிலேயே அதிக செல்போன்களை உபயோகப்படுத்துவதில் பிரிட்டனுக்கு 14-வது இடம். முதலிடம் சீனாவுக்கு. அங்கு 95 கோடி செல்போன்கள் புழக்கத்தில் உள்ளனவாம்.
இணையத்தில் கவிழும் ஆண்கள்
இன்றைய தலைமுறையினர் சமூக இணையதளங்களில் அதிகநேரம் செலவழிப்பதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் அதில் பெண்கள் "உஷார்' பேர்வழியாக இருக்கின்றனர். ஆண்கள்தான் எளிதில் ஏமாந்துவிடுகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் ஒரே சமயத்தில் 3000 ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. அதாவது சமூக இணையதளங்களில் ஆண்கள் தங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்களை உடனடியாக தங்கள் நண்பர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்கிறார்கள். அதே சமயம் பெரும்பாலான பெண்கள் அறிமுகம் இல்லாத நபர்களை நண்பர்கள் பட்டியலில் சேர்ப்பதில்லை. மேலும் ஆண்கள் தங்கள் இருப்பிடம், செல்போன் எண் போன்ற சொந்த விஷயங்களையும் அனைவருக்கும் பொதுவாக்குகின்றனர். இந்த விஷயத்திலும் பெண்கள் உஷார் என்கிறது ஆய்வு. அதனால் எளிதில் பிரச்னைகளில் ஆண்கள் சிக்கிக் கொள்கிறார்கள். மேலும் தங்கள் இணையதளக் கணக்குகளிலிருந்து முறையாக வெளியேறுவதில்லை. அலுவலகங்களில் சமூக இணையதளங்களை உபயோகிப்போர், அதனை அப்படியே விட்டுவிட்டு வேறு எங்காவது போய்விடுகின்றனர் என்று ஆண்களைப்பற்றி அடுக்கிக்கொண்டே போகிறது ஆய்வு முடிவு. இதை ஆய்வு செய்துதான் கண்டுபிடிக்க வேண்டுமா என்கிறீர்களா?
வீட்டுக் குறிப்புகள்
கண்ணாடி மேஜை மீதுள்ள கறைகள் நீங்குவதற்கு டால்கம் பவுடர் அல்லது கடலை மாவைத் தூவி நன்றாக துடைத்துவிடவும்.இரும்புக் கடைகளில் கிடைக்கும் சிலிகான் கார்பைட் பேப்பர் வாங்கி வந்து இலுப்பக்கட்டி/ தோசைக்கல்லில் அலம்பிவிட்டு இந்தக் காகிதத்தில் ஒரு சிறு துண்டு வெட்டி தேய்த்தால் கறுப்பெல்லாம் மறைந்துவிடும். வருடக்கணக்கில் பிசுக்குப் பிடித்திருந்தால் சில தடவைகள் தேய்த்துக் கழுவினால் சுத்தமாகிவிடும்.வீட்டில் வாசற்படி, ஜன்னல் கதவுகளில் உள்ள அழுக்கைத் துணியில் மண்ணெண்ணெய் தொட்டுத் தடவி ஒரு நிமிடம் ஊறவிட்டு, பின் வேறு துணி கொண்டு துடைத்தால் அழுக்கு போய்விடும்.உபயோகிக்கப்படாத புதிய தபால் தலைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு விட்டனவா? அவற்றை சில நிமிடம் ஃபிரிட்ஜ் ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் சுலபமாக பிரிக்க முடியும்.பிளாஸ்டிக் வாளி ஓட்டையாகிவிட்டால் அதைக் கவிழ்த்து பழைய பல் தேய்க்கும் பிரஷ்ஷை எரித்து அதிலிருந்து ஒழுகும் திரவத்தைக் கொண்டு அந்த துளையை அடைக்கலாம்.பவுடர் டப்பாவில் அதிகத் துளை போட்டுவிட்டால் மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அதில் வரும் திரவம் கொண்டு துளையை அடைத்துவிடலாம்.குழாயில் தண்ணீர் வருவதற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குழாயைத் திருகலாம். ஆனால் மூடும்போது ஒரே திருக்கில் மூட வேண்டும். அப்போதுதான் குழாயின் ஆயுள் நீடித்து நிற்கும். அடிக்கடி வாஷர் போட வேண்டிய பிரச்னையும் இருக்காது.
அமெரிக்காவில் உள்ள கவுடியா வைஷ்ணவா சொசைட்டி தலைவர், மத ஊழியர் விசாக்களை விற்று மோசடியில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ளது மில்வாக்கி நகரம். இங்கு கவுடியா வைஷ்ணவா சொசைட்டி தலைவராக இருப்பவர் சாகர்சென் ஹல்தார் (31) (எ) கோபால் ஹரிதாஸ். ஆன்மீக குரு என்று கருதப்படுபவர். இவர் நடத்தும் கோயிலில் பலர் பணியாற்றுகின்றனர். ஆன்மீக சொற்பொழிவு, யோகா, பஜன்கள் போன்றவற்றில் இந்த சொசைட்டி ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியர்கள் பலருக்கு மத ஊழியர் விசாவை விற்று மோசடியில் ஈடுபட்டதாக ஹரிதாஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தியர்கள் பலர் அமெரிக்காவில் குடியேற ரூ.15 லட்சத்துக்கு மத ஊழியர் விசாக்களை ஹரிதாஸ் விற்றுள்ளதை குடியேற்ற உரிமை துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்த வழக்கு விஸ்கான்சின் மாகாண மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2008ம் ஆண்டு முதல் நடந்து வந்தது. அதன்பின்னர் கடந்த 2010 ஜூன் மாதம் இந்தியாவில் இருந்து ஹரிதாஸ் அமெரிக்கா திரும்பிய போது கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணையின் போது, அமெரிக்க குடியேற்றத் துறை சார்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர்.
ஹரிதாஸ் 25க்கும் அதிகமான ஆர்1 விசாக்களை பெற்று அவற்றை இந்தியர்களுக்கு விற்றுள்ளார். அத்துடன் கோயிலில் பூசாரிகள் மற்றும் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று கூறி அமெரிக்க குடியேற்ற துறையிடம் விசா கேட்டு ஏராளமான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார். விசா பெற்றவர்கள் பூசாரி அல்லது மதரீதியான பயிற்சி இல்லாதவர்கள். அமெரிக்கா வந்த பின் அவர்கள் விஸ்கான்சின் மாகாணத்தின் பல ஸ்டோர்களிலும் மற்ற இடங்களிலும் வேலை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறி நீதிமன்றத்தில் ஆதாரங்களை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஹரிதாசுக்கான தண்டனை பின்னர் வெளியிடப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
திருடுவதற்காகவே ராஜஸ்தானிலிருந்து வந்த வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
சென்ட¢ரல் ரயில் நிலையம் வால்டாக்ஸ் சாலையில் அருகே 2 தினங்களுக்கு முன் கையில் இரும்பு ராடுடன் ஒரு வாலிபரை போலீசார் பிடிக்க முயன்றனர். போலீசாரை அவர் இரும்பு ராடால் தாக்க முயன்றார். உடனே இன்ஸ்பெக்டர் சிவமணி, எஸ்.ஐ. மாசிலாமணி ஆகியோர் அவரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில் அவரது பெயர் சுனில் (22), ராஜஸ்தான் மாநிலம் ரேணிவாடா கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
சுனில் கொடுத்த தகவலின் பேரில் சென்னையில் முக்கிய பகுதியில் பதுங்கி இருந்த ராஜஸ்தான் வாலிபர்கள் ஓம்பிரகாஷ் (20), ஜெயராம் (22), போராராம் (22) ஆகியோர் சிக்கினர். பிரகாஷ், ஷேராம் ஆகியோர் தப்பி விட்டனர். விசாரணையில் ராஜஸ்தானில் ரேணிவாடா கிராமத்தில் திருட்டு தொழில் செய்பவர்கள் நிறைய பேர் இருப்பதும், அவர்கள் குழுக்களாக சென்னை வந்து கொள்ளை அடிப்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரும் சென்னையில் 20க்கும் அதிகமான இடத்தில் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. அந்த 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மு.செ.மு.அபூபக்கர்
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment