சமீப காலங்களில் விட்டு கொடுக்கும் தன்மை மிக குறைந்து காணபடுகிறது, அதுவும் இஸ்லாமிய சகோதர, சகோதிரிகடத்தில் இந்த பண்பு அதிகமாக காணப்படுகிறது. மகள் , தாயிடத்தில் விட்டு கொடுப்பதில்லை , தாய் தன் பிள்ளையிடத்தில் தயாள குணத்தை வெளிபடுதுவதில்லை. இதே போன்று கணவன் , மனைவிகிடையில் பிளவுகள் ஏராளம். இதற்கெல்லாம் என்ன காரணம் ?
எல்லோரும் , எபோழுதும் சொல்வதைபோல் விஞ்ஞான வளர்ச்சி தான் காரணம் என்று சொல்லி பழியை அதன் மீது சுமத்துவது , நாம் நம்மையே ஏமாற்றிகொள்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். நான் அறிந்த உண்மை நிலைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆண் மற்றும் பெண் மக்கள் தங்கள் தாய் , தந்தையரின் வழிகாட்டுதலின்படியே தங்கல் வாழ்கையை நடத்தி செல்ல வேண்டும். இதில் எவ்வித மாற்று கருத்துகள் கிடையாது. அதே சமயம் , கல்யாணம் ஆன பெண் தன் கணவனின் கட்டளையை மதித்து நடக்க வேண்டும் என்ற பண்பை ஏற்று செயல்பட வேண்டும், ஆனால் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு உட்பட்ட மற்றும் தன் நலனில் ( தன்னலம் அல்ல ) எவிவித பாதிப்பும் ஏற்படாதவாரை கணவனின் சொல்லை கேட்டு நடக்க வேண்டும் , இந்த விஷயத்தில் , கணவனின் தாய் , தந்தையர்கள் எவ்வித குறுக்கீடும் செய்தல் கூடாது. இங்குதான் பிரச்னையே ஏற்படுகிறது. கணவன் தன் மனைவியிடம் ,என் தாய் சொன்ன பிறகு உனக்கு எந்த உரிமையுமில்லை, என் தாய் சொல்தான் கேட்க வேண்டும் என்ற கட்டளை மிக பெரிய பாதிப்பை தன் மனைவியிடத்தில் ஏற்படுகின்றது. எவ்வாறு மனிவிடத்தில் தனக்கு உரிமை உள்ளதோ , அதே அளவு மனைவிக்கும் உங்கள் மீது உரிமை உள்ளதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். பெண் என்றால் ஆண் மக்களின் அடிமையில்லை என்றபோதிலும் பெண் மக்கள் தான்தோன்றி தனமாக எவ்வித செயலிலும் ஈடுபடாமல் கட்டுபாடுடன் நடுந்து கொள்ள வேண்டும்.
தாய் தந்தையர் தன் பிள்ளைகளின் கணவன் , மனைவிகளிடத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிடல் கூடாது. அதே போல் ஆண் மக்கள் , தன் தாய் தந்தை கூறிய அனைத்து வார்த்தகளையும் தன் மனிவியிடத்தில் சொல்லி பிரச்சனையை கிளறக்கூடாது. ஆலிம்கள் , உலமாக்கள் , நல்ல சிந்தனையுடையோரத்தில் ஆலோசனை கேட்கலாம். எல்லாவற்றிக்கும் மேலாக , நாம் யாரையும் எந்த தேவைக்கும் எதிர்ப்பாக்காத குணத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.
TV / MOBILE ஆதிக்கத்தை குறைத்தாலே பாதி சிக்கல் தீர்ந்துவிடும்.
இல்லங்களில் நல்ல சூழ்நிலை ஏற்பட நபி அவர்களின் அறியுரை :
1 சலாம் சொல்லி வீட்டிற்குள் செல்லுங்கள்
2 எல்லோரும் சேர்ந்து உணவருந்துங்கள் .
3 . உங்களுக்கிடையில் அன்பளிப்பை பரிமாரிகொள்ளுங்கள்
4 நல்ல விஷயங்கலேயே பேசுங்கள்.
நல்ல பண்பு ஈருலகிலும் நன்மையை தேடி தரும்.
அப்துல் ரஜாக்
9 பின்னூட்டங்கள்:
//TV / MOBILE ஆதிக்கத்தை குறைத்தாலே பாதி சிக்கல் தீர்ந்துவிடும்.//
மிகச்சரியாக சொன்னீர்கள். ஒரு வீட்டில் தொலைகாட்சி பயன்படும் நேரத்தை கணக்கிட்டு அதை நாட்களால் கணக்கிடவும். உங்கள் வாழ்நாளில் அது குறைந்தது 25% த்தை எடுத்திருக்கும்.
நல்ல விசயங்களை பகிர்ந்துள்ள அன்பர் ரஜாக் அவர்களுக்கு நன்றி.... இங்கே முக்கியமான ஒரு விஷயத்தை தாங்கள் விட்டுவிட்டீர் இன்றைய கணினியுகத்தில், அது படுத்தும் பாட்டிற்கு அளவே இல்லை நிச்சயம் பிள்ளைகளின் கணினி தொடர்புகளை பெரியவர்கள் கண்காணிக்க வேண்டும் குறிப்பாக (மடிக்)கணினியினை தனிமையில் பயன்படுத்த அனுமதிக்ககூடாது, அதிலும் பேஸ்புக் போன்ற இணையதள தொடர்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும், இது போன்ற நவீன சைதான்களிடமிருந்தும் அல்லாஹ் நம் சமுதாயத்தை கண்ணிபடுத்த வேண்டும் - ஆமீன்
Nalla article namma ooruke thevaiyaanathu..
inthe prechanaiyin muthal kaaranamey..kalyaanam mudinthe pin,,aan pen veetirku povathuthaan..
madravaiyallam aduthuthaaan..adipadai kalaachaaramey kettupoikidakuthu....ithai patri inge idam peraathathu miga varuthathukuriyathu
இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயம் நம்ம ஊருக்கு மட்டுமா, அல்லது கீழக்கரை, காயல்பட்டினத்தையும் சேர்த்தா....
எல்லா உரிமையும் மனைவிக்கு மட்டும்தான் இருக்கிறது, இது ஏன் யாருக்குமே புரிய மாட்டேங்குது.....
ஏன்னா, வெளிநாடு செல்ல, தங்கச்சிக்கு திருமச்சிலவு, 50 பவுன் நகை, ஐகான் கட்டுன வீடு, முடிஞ்சா சென்னையிலே ஒரு பிளாட் எப்படி எல்லாத்தையும் கொண்டு வருபவல யார் என்ன செய்ய முடியும்.,
அந்த பொண்ணுட்ட எந்த விழயம் சொன்னாலும் " நான் என்ன சும்மாவா வந்தேன்" என்று ஆலிம்களுட்டேயே கேட்டாலும் அவங்களால ஒன்னும் செய்ய முடியாது.
சரி...நடப்பு என்னவென்றால், கணவன் மனைவி பிரச்சனையில் ஆலிம்கள் தலையீடு மட்டும் போதாது, உளவு ரீதியாக பிரச்சனையை கைய்யால்பவரையும் சேர்த்து பிரச்சனைக்கு முடிவுக்கு கொண்டு வரவேண்டும்., ( இப்பொழுது நீங்கள் கண்டுபிடியுங்கள்.... ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார், அரபாக்கா இப்பொழுது நம்மூரில் இருக்கிறார்களா என்று..)
...... முடிஞ்சா நாம வாங்குற வரதட்சணையில iphone , லேப்டாப், மந்தி போடுறது, தேர்தல் சிலவுன்னு நிறைய சேர்த்துகிடலாம்.....
அவசியமான பதிவு
அல்-குர்ஆனை அறிவோம்
“திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன
நபிமொழி அறிவோம்
“மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன: 1. பொருளாசை. 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி
புதி
விட்டுக் கொடுக்கும் தன்மை – முஸ்லிம்களிடத்தில் இது குறைந்து வருவதனால் தான் இன்று நம்மிடையே பகைமை உணர்வுகள் அதிகம் ஏற்பட்டு பல பிணக்குகளும் பிரிவுகளும் உண்டாகியிருக்கின்றன. இதில் வேதனையான விசயம் என்னவென்றால் குர்ஆன், ஹதீஸ் என்று வாய்கிழியப் பேசுபவர்கள் தான் இத்தகைய விட்டுக்கொடுக்கும் தன்மை சிறிதும் அற்றவர்களாக அதிகம் காணப்படுகின்றனர். இவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு பலியாகி அவனின் மாயவலையில் விழுந்திருக்கிறார்கள்.
சினிமா, டீவி போன்றவற்றின் மூலமாக ஆபாசங்கள் வீடுதேடி வந்துக் கொண்டிருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்கின்ற பலர் இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற ஷீரீஅத்தின் சட்டதிட்டங்களை மீறியவர்களாக உள்ளனர்,
அதிராம்பட்டினம், திருவாரூர், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சில முஸ்லிம் ஊர்களில் பல வீடுகளில் திருமணமானப் பெண்கள் தம் தாயின் வீட்டிலேயே தான் இருப்பர். கணவர் தம் மனைவியின் வீட்டில் பெரும்பாலான நாட்களைக் கழிப்பது வழக்கம்; இன்னும் சிலர் தம் மனைவியின் வீட்டிலேயே கூட தங்கிவிடுவது உண்டு. அதுபோலவே அப்பெண்ணின் சகோதரிகளும் தம் கணவர்மார்களுடன் அவ்வீட்டிலேயே தங்குவதுண்டு. அந்த சமயங்களில் ‘சில’ பெண்கள் தம் சகோதரியின் கணவர் தானே என்ற அதிக உரிமையில் அவர்களின் முன்னிலையில் இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற ஹிஜாப் முறைகளைப் பேணாது அவர்களின் முன்னிலையில் வந்து சர்வ சாதாரணமாக பேசுவதைக் காணமுடிகின்றது. இது இஸ்லாத்தின் பார்வையில் குற்றத்திற்குரிய செயல் என்பதை ஏனோ நம் பெண்கள் உணர்வதில்லை! ஒரு பெண் தம் சகோதரியின் கணவர்களையும் அந்நியராகவே கருதி அவர்கள் முன்னிலையில் முறையான ஹிஜாபுடன் வரவேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதிராம்பட்டினம், திருவாரூர், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சில முஸ்லிம் ஊர்களில் பல வீடுகளில் திருமணமானப் பெண்கள் தம் தாயின் வீட்டிலேயே தான் இருப்பர். கணவர் தம் மனைவியின் வீட்டில் பெரும்பாலான நாட்களைக் கழிப்பது வழக்கம்; இன்னும் சிலர் தம் மனைவியின் வீட்டிலேயே கூட தங்கிவிடுவது உண்டு. அதுபோலவே அப்பெண்ணின் சகோதரிகளும் தம் கணவர்மார்களுடன் அவ்வீட்டிலேயே தங்குவதுண்டு. அந்த சமயங்களில் ‘சில’ பெண்கள் தம் சகோதரியின் கணவர் தானே என்ற அதிக உரிமையில் அவர்களின் முன்னிலையில் இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற ஹிஜாப் முறைகளைப் பேணாது அவர்களின் முன்னிலையில் வந்து சர்வ சாதாரணமாக பேசுவதைக் காணமுடிகின்றது. இது இஸ்லாத்தின் பார்வையில் குற்றத்திற்குரிய செயல் என்பதை ஏனோ நம் பெண்கள் உணர்வதில்லை! ஒரு பெண் தம் சகோதரியின் கணவர்களையும் அந்நியராகவே கருதி அவர்கள் முன்னிலையில் முறையான ஹிஜாபுடன் வரவேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment