அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, November 12, 2011

அத்வானி யாத்திரை பாதை குண்டு: போலி என்கவுண்டருக்குத் திட்டம், அதிர்ச்சி தகவல்!


அத்வானி கொலை முயற்சி வழக்கில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டுச் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன் என்று அழைக்கப்படும் பக்ருதீனை என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல காவல்துறை திட்டமிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் பாஜக-வின் தலைவர்களில் ஒருவரான அத்வானி ஊழல் எதிர்ப்பு ரத யாத்திரை வந்தார். அவர் அங்கிருந்து யாத்திரை செல்லும் வழியில் பைப் வெடிகுண்டு ஒன்று காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் கடந்த 1ம் தேதி அப்துல் ரகுமான் மற்றும் இஸ்மத் என்ற இரண்டு இளைஞர்களைக் கைது செய்தனர். இந்த  சதி செயலுக்கு இமாம் அலி கூட்டாளியாக கருதப்படும் போலீஸ் பக்ருத்தீன் என்பவரைக் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாக கூறப்பட்டது. ஆனால் காவல்துறையினரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், சென்னை மண்ணடியைச் சேர்ந்த எம்.அப்துல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு(ஹேபியஸ் கார்பஸ்) ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

"நானும், பக்ருதீனும் நண்பர்கள். ஒரு வழக்கு தொடர்பாக சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினரால் 2003ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். அதே வழக்கில் பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீனும் (வயது 35) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த வழக்கு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீன் அடிப்படையில் நான் வெளியே வந்துவிட்டேன்.

இந்த நிலையில், கடந்த 2ம் தேதி சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினரால் பாஜக மூத்த தலைவர் அத்வானி வரும் வழியில் உள்ள பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் பக்ருதீன் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது  சிபிசிஐடி அலுவலகத்தில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் போலி என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக்கொலை செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதுபற்றி நானும், எனது நண்பரும் இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயலாளருமான ஜெ.அப்துல் ரஹீமும், தமிழக அரசு மற்றும் டிஜிபி-க்குத் தந்தி அனுப்பி பக்ருதீனை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரினோம். ஆனால் அவர் விடுதலை செய்யப்படவுமில்லை. இதுவரை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுமில்லை.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரானது. எனவே சட்ட விரோத காவலில் சிறை வைக்கப்பட்டுள்ள பக்ருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை வெளியில்விட அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்." என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

2 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அத்வானியின் ரதயாத்திரையின் போது வெடிகுண்டு கண்டு எடுக்கபட்ட ஊர் பாறைகளுக்கு அதிகம் குண்டு வைத்து தகர்க்கும் தொழில் சார்ந்த ஊர், இது போன்று தொழில் செய்யும் யாரேனும் இங்கே தற்செயலாக கூட வைத்திருக்கலாம் ? இன்னொரு முக்கியமான செய்தி என்னெவென்றால் அத்வானி ஒன்றும் பாபர் மசூதிக்கு எதிராகவோ அல்லது முஸ்லிம்களுக்கு எதிராகவோ யாத்திரை செல்லவில்லை மாறாக ஊழலுக்கு எதிராக, இதை அனைத்து மக்களும் குறிப்பாக முஹம்மத் நபியை பின்பற்றக்கூடிய ஒவ்வோரவும் இதை வரவேற்கத்தான் செய்வார்கள்..... ஆகவே இதை காவல்துறையினர் முறையாக விசாரிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.... குறிப்பு அத்வானி ஊழலுக்கு எதிராக யாத்திரை செல்வது வேலிக்கு ஓனான் சாட்சியவது போன்றாகும்.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எதிராளி அத்வானிக்கு கொஞ்ச நாளாவே வயித்துல புளிய கரைக்க ஆரம்பிச்சுடுச்சு காரணம், வரலாறு காணாத அளவுக்கு குஜராத் முஸ்லிம்களை கொன்று குவித்த மோடியை "வருங்காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்யக்கூடிய தகுதி மோடிக்கு மட்டும்தான் இருக்கு என்று அமெரிக்கா அறிவிப்பு செய்ததன் விளைவு, அத்வானியை இந்த கதிக்கு ஆளாக்கி விட்டது.

இந்த இன்ப அதர்ச்சியை தாங்க முடியாமல் மோடியும் யாத்திரை என்று அருவிக்க, ஆஹா என்னாடா இவன்.... எனக்கு போட்டியாயிட்டானே என்று அத்வானியும் யாத்திரையை ஆரம்பிக்க, அத்வானி விரும்பிகள் அவரின் யாத்திரையை பெரிது படுத்தத்தான் இந்த "கைது" நாடகம்.

அத்வானிக்கு ஒரு யோசனை : எனக்குப்பிறகு மோடிதான் அடுத்த பிரதமர் என்று நீங்கள் அருவியுங்கள்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.