அதிரைப்பட்டினத்தில் 40கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் உள்ளனர்.அவர்களில் 8நபர்களுக்குமட்டுமே அரசின் உதவிதொகை கிடைத்துவருகிறது. மீதமுள்ள அனைவருக்கும் தமிழக அரசின் மாற்றுதிறனாளிகளுக்கான உதவிதொகை கிடைக்க அதிரை அதிமுக நிர்வாகிகள் உதவவேண்டும் என்ற கோரிகையுடன் வைத்திருந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று, நகர அதிமுக செயலாளரும் பேரூராட்சி துணைத் தலைவரும்மான பிச்சை அவர்கள் தலைமையில்,நகர அதிமுக துணை செயலாளர் எம்.ஏ.முகமதுதமீம்,கவுன்சிலர்கள் அபுதாஹிர்,உதயகுமார்,சிவகுமார் உள்ளிட்டவர்களும் அப்துல் லத்தீப்,ஹாஜா,எல்.எம்.எஸ்.முகமது யூசுப் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
உங்கள் உதவிகளை அனுப்பும் முன் முஆதினுல் ஹஸனத்துல் இஸ்லாமிய சஙகம்(நெசவு தெரு) செயலாளரும் 18வது வார்டு கவுன்சிலருமான அபுதாஹிர் அவர்களை தொடர்புகொண்டு (செல் 9677668896)அனுப்பவேண்டிய பெயர்,முகவரி உள்ளிட்டவைகளை அறிந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்
நன்றி
அதிரை போஸ்ட் ஹிதாயத்துல்லா
10 பின்னூட்டங்கள்:
கிடைக்க வேண்டிய உரிமையை போராடியும் பரிந்துரையின் அடிப்படையில்தான் தேடிக் கொள்ள வேண்டும் என்ற அவலம் மாற வேண்டுமென்றால் ஆட்சி அதிகாரத்தில் நாமும் பங்கெடுக்க வேண்டும் அதோடு மற்றவர்களையும் அரவணைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தை முன்னிருத்திய அதிரை முஸ்லீம்களை வேறு விதமாக பயண்படுத்தி அரசியல் ஆதாயம் பார்க்க வேண்டாம்.
கிடைப்பெறாத அரிய முயற்சியை செய்தீர்களேயானால் பாராட்டவும் தயங்க மாட்டோம், ஆனால் முறையாக கிடைக்க வேண்டியதையும் அதற்கு தகுந்த சான்றிதழ் பெற வேண்டியும் இப்படியான பரிந்துரைதான் அவசியம் என்று பிரபலப் படுத்த வேண்டாம்.
அதிரையில் காலூன்ற துடிக்கும் ஆளும் கட்சி, அரசியல்தான் செய்வார்கள் என்பது எவருக்கும் அவர்களை மிஞ்சியவர்களும் அல்லர் மற்றக் கட்சிக் காரர்களும்.
அதிரை முஸ்லீம்களின் ஒற்றுமைக்கு பங்கமக காய் நகர்த்திடும் தகிடுதத்தான் வேலைகளி ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்... !
ஒன்றுபட்டு ஒருங்கே திரண்டு வந்தால் ஓட்டு இல்லையே வேட்டு இனிமேல்...
இன்னும் பல சேவைகள் தொடர வேண்டும்,அரசியல் ஆதாயம் இல்லாமல் செய்தால் மக்கள் நன்றியுடன் இருப்பார்கள்.
தமிழ் நாட்டை ஆளும் கட்சி்யை சேர்தவர் துணை சேர்மனாக நம் ஊருக்கு வருவதுதான் சிறந்த பயன் அளிக்கும் என்று ஜித்தா சாகுல் அவர்கள் எடுத்த முயற்சி வீன் போகவில்லை. தமுமுக வின் வெற்றியை திமுக காரர்கள் தடுக்காமல் இருந்து இருந்தால், சாகுல் காக்கா அவர்கள் த மு மு க வை சேர்ந்தவர் துணை சேர்மனாக வர முயற்ச்சி செய்து இருப்பார்கள். த மு மு க காரர்களால் இது போன்ற உதவிகளை செய்ய முடியும்.
"அம்மா" என்ற வார்த்தை சொல்லாத சகோ.பிச்சையா இது.....
.................துணைத்தலைவர் சகோ. பிச்சை அவர்களின் தன்னலமற்ற இந்த பேச்சு பொதுப்பணி செய்பவர்களுக்கு அழகிய முன்மாதிரி................keep it up ..... பிச்சை அவர்களே........
என்னமோ தெரியவில்லை, உங்கள் பேட்டியையும், சகோ. அஜீஸ் அவர்களின் பேட்டியையும் கேட்டு கேட்டு எங்களுக்கு "அம்மா" ஞாபகம் ஜாஸ்தியாயிடுச்சு.
பிச்சைக்கு தெரியும் அவர் யாரால் உதவி சேர்மானாக ஆனார் என்று. அதனால்தான் அவர் அம்மா என்று அழைப்பதில்லை. சரி....நாம் ஏன் இவர்களுக்கு முக்கி்யத்துவம் கொடுக்க வேண்டும்?.
அம்மா.... அனாவசியமாக பிச்சையை கட்சியை விட்டு அகற்றும் பணிகளில் இறங்கிவிட்டீரோ, சப்தத்தை குறைத்து வாசிக்கவும் அம்மாவுக்கு விளங்கினால் விபரீதமா போயிடும், பாவம் இந்த பிச்சை ...
பதவியை கொடுப்பவனும் அல்லாஹ்தான்,எடுப்பவனும் அல்லாஹ்தான்.அதை மறந்து விட்டு ஜித்தா சாகுல் என்றும்,அம்மா என்றும் எழுதும் சகோதரர்களே,அல்லாஹ்வை மறந்துவிட்டு எழுதாதீர்கள்.மிக கவனம் தேவை.
அல்லாஹ் அவனுடைய பிரதிநிதிக்கு கொடுக்கும் பதவி, வேறொரு பிரதிநிதியை வைத்து கால சூழ்நிலைக்கு தகுந்தவாறு கொடுக்கிறான்.
நீங்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்கணும், ஒரு வேலை நமதூர் நல்உல்லங்கள் இந்த விஷியத்தில் சற்று ஒதுங்கி இருந்தால் (ம.ம.க., சம்சுல் இஸ்லாம் சங்கம், தாஜுல் இஸ்லாம் சங்கம், சுயேச்சை வேட்பாளர் மற்றும் ஜித்தா ஷாகுல் ஹமீது போன்றோர்கள்)...... கடந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் எந்த வித வித்தியாசத்தையும் உங்களால் கண்டிருக்க முடியாது.
(அதிமுக அஜீஸ், சுயேச்சை முனாப், காங்கிரெஸ் பஷீர் போன்றோருக்கும் கொஞ்சம் ஆறுதல்...)
இந்த மூன்று பேருக்கும் "துக்ளக் நியூஸ் குழுமம்" ஒரு செய்தியை நினைவூட்ட விரும்புகிறது...................
**** சிறிய முயற்ச்சியில் சந்தித்த வெற்றியை விட, பெரிய முயற்ச்சியில் தோற்றுப் போவது தான் தலையாய சிறந்தது*****
அருமையாக சொன்னீர் துக்ளக் நியூஸ்...... முயற்சி திருவினையாகும் என்பது பழமொழி, தோல்வியே வெற்றியின் முதற்படி என்பதை நினைவு கூறுங்கள்.
மாற்றுதிறநாளிகளுக்கு இன்ஷா அல்லாஹ் நிச்சயம் உதவி கிடைக்கும் அதுமட்டுமல்லாமல் பே.து.த.பிச்சை அவர்கள் ஆளுங்கட்சியாக இருப்பதால் எப்படியும் அதிரையில் உள்ள வாய் பேச இயலாதவர்களுக்கும்,காது கேலாதோருக்கும் உதவி செய்து விடுவார் என்று நம்பிக்கை இருக்கிறது.துணை தலைவர் பிச்சை அவர்கள் இதற்கு முழு முயற்சி எடுக்கவும்.இன்னும் பல சேவைகள் செய்ய வேண்டி உள்ளது.படி படியாக செய்ய வேண்டும்.
மு.செ.மு.அபூபக்கர்
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment