அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, November 16, 2011

அதிரைக்கு ரயில் முன்பதிவு காலதாமதம் ஏன்?



அதிராம்பட்டினம் ரயில்வே ஸ்டேஷன் கணினி முன்பதிவு வசதிகள் சமபந்தமாக கடந்த 3 மாதங்களுக்கு முன் திருச்சிராப்பள்ளி ரயில்வே மேலாளர் அவர்களுக்கு கோரிக்கை மனு ஓன்று அனுப்பிருந்தோம். அதன் பிறகு, அதிராம்பட்டினம் ரயில்வே நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்து சென்றனர். அதற்க்கான கம்ப்யூட்டர் உபகரணங்கள் வந்துள்ளது. இட வசதி போதாமையும் , ISDN வசதி கோரி BSNL யிடம் கோரிக்கை கொடுத்துள்ளனர்.

எதிர்பார்த்ததை விட அதிக கால தாமதம் ஏற்பட்டுள்ளதால் இன்று ( 15/11/11) THE HINDU பத்தரிகையில் Reader's mail என்ற பகுதியில் பொது கோரிக்கையாக பிரசுகரிக்கப்ட்டுளது. நிச்சயமாக இது சம்பந்தபட்ட ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை நகல் உங்கள் பார்வைக்காக இதனுடன் இணைத்துள்ளோம்.


அப்துல் ரஜாக் (chasecom)

13 பின்னூட்டங்கள்:

வளர்பிறை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உங்கள் முயற்சி வெற்றியடையட்டும் இன்ஷா அல்லாஹ்.

வளர்பிறை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உங்கள் முயற்சி வெற்றியடையட்டும் இன்ஷா அல்லாஹ்.

அபூபக்கர்-அமேஜான் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரையில் கணினி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு எந்தவிதமான ஏற்பாடுகளும் இதுவரைக்கும் யாரும் எடுத்தது போல் தேரியவில்லை.அப்படி அதிரை மக்கள் எடுத்திருந்தாலும் ரயில் நிலையத்தில் கணினி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆள் இல்லை என்று சொல்லுகிறார்கள்.இங்கு வந்து விட்டால் ஏன் பட்டுக்கோட்டைக்கும்,முத்துப்பேட்டைக்கும் அதிரை மக்கள் அலைய வேண்டும் அந்த அலைச்சல் இல்லாமல் போய்விடும்.கணினி மையம் அதிரை நகருக்கு மிக விரைவில் வருவதற்கு இறைவனிடம் துஆ செய்வோமாக. இந்த போட்டோவை பார்த்து திருச்சியில் உள்ள அதிகாரி அவர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.அவர்கள் நினைத்து இருப்பார்கள் அதிரையில் கணினி வைத்துவிட்டார்கள் என்று நாம் அவர்களுக்கு தெரியபடுத்தினால் தான் அவர்கள் அதற்கு தகுந்தார் போல் நடவடிக்கை எடுப்பார்கள் அடிக்கடி இந்த விஷயத்தை அதிகாரி அவர்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.இல்லா விட்டால் அவர்களும் பல வேளைகளில் மறந்து விடுவார்கள். இதை பே.தலைவரும்,பே.துணை தலைவரும் மனதில் கொண்டு முயற்சி செய்யவும்
பல முறை முயற்சிகள் செய்தால் தான் வெற்றி அடைய முடியும். எந்த நோக்கத்திற்காக நாம் முயற்சி செய்கிறோமோ அந்த இலக்கை அடைய முடியும்.

மு.செ.மு.அபூபக்கர்

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உங்களுது கோரிக்கைக்கு எங்களின் வாழ்த்துக்கள்...

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தனி தனி நபர்களாக - கோரிக்கை கடிதங்களை எழுதி ஞாபக மூடிக்கொண்டேயிருக்கவேண்டும்.இதை ஒவ்வொரு அமைப்பாகவும் செய்யலாம்.பொதுவாக இவர்களுக்கு நாம்தான் கடிதம்,நேரில்,மற்றும் மீடியாக்கள் மூலம் கொண்டுபோகவேண்டும்.தொடர்ச்சியாக ..........

அபூபக்கர்-அமேஜான் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரை பேரூராட்சி தலைவர் அவர்கள் முன்னாள் தலைவர் அவர்களை சந்திக்க போகிறார்கள்.சந்திப்பின் போது தலைவர் அவர்கள் நீண்ட நாள் கனவு அகல ரயில் பதை பற்றி அவர்களுடைய கோரிக்கையாக இருக்கும் என்று நம்புகிறோம்.அதுமட்டுமல்லாமல் அதிரை நகருக்கு இன்னும் என்ன என்ன தேவைகளை செய்ய முடியிமோ அதை செய்வார்கள் என்று நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.எல்லாம் வல்ல இறைவன் நம்ம ஊருக்கு அவர்களை நல்லது செய்பவர்களாக ஆக்குவானாக ஆமீன்.நாமும் அவர்களுக்கு துஆ செய்ய வேண்டும் அதிரை நகருக்கு நிறைய நல்லது செய்வதற்கு.

மு.செ.மு.அபூபக்கர்

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பத்திரிக்கை செய்திகளால் பயன் இருப்பதாக தெரியவில்லை.... அரசாங்க அதிகாரிகளின் கவனக்குறைவே இது போன்ற தாமதத்திற்கு கரணம் இன்டர்நெட் வசதி என்பது ஒன்றும் பெரிய விசயமே இல்லை எதையாவது காரணம் காட்டி தமாதபடுத்தும் அதிகாரிகள் இருக்கும் வரை இது போன்ற இன்னல்களுக்கு விடையிருக்காது.... முறையாக சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு முயற்சியை முடுக்கிவிட்டால் பலனை எதிர்பார்க்கலாம்.

அபூபக்கர்-அமேஜான் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தனி தனி நபர்கள் கோரிக்கை வைத்தாலும் சரிதான் அதை அப்படியை விட்டுவிடாமல் ஜமாஅத் சார்பாகவும், மற்றும் ஊரில் உள்ள எல்லா முஹல்லா சார்பாகவும் ஒன்று பட்டு கோரிக்கைகளை வைத்தால் நிச்சயம் அதற்கு பலன் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் மிடியாக்கள் மூலமாகவும்,இணையதளம் மூலமாகவும் அந்த சமந்தபட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கையை கொண்டு போய் சேர்க்க வேண்டும்.எப்படி செய்தால் கோரிக்கையை சேர்க்க முடியுமோ அந்த கோரிக்கை விசையத்தில் நாம் கவனம் கொள்ள வேண்டும். முயற்சி திருவினையாக்கும் என்று சொல்வார்கள் அதைப் போல் முயற்சி செய்துக்கிட்டே இருக்க வேண்டும் ஒரு போதும் சோர்வு அடைந்து விடக்கூடாது எப்படியும் அந்த முயற்சிக்கு பலன் உண்டு.நம்மால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.

மு.செ.மு.அபூபக்கர்

ADIRAI TODAY said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ரயில்வே டிக்கெட் புக்கிங் நடைமுறைப்படுத்த செயற்கைக்கோள் இணைப்புடன் கூடிய வசதி தேவை , இல்லையெனில் அதிவேக இன்டர்நெட் இணைப்பு (ISDN)அவசியம். சாதாரண இணைய இணைப்பு இதற்கு பொருந்தாது.அடிக்க அடிக்க அம்மியும் நகரும்! பத்திரிகையில் பிரசுரமாகும் புகாரை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம் சில நேரங்களில் கொளுத்தி வீசினால் பற்றிக்கொள்ளும்.

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் அப்துல் ரஜ்ஜாக் அவர்கள் அவர்கள் போல் நமது ஊரில் உள்ள அனைத்து சமுதாய மற்றும் அரசியல் அமைப்புக்கள் தனி ஆர்வலர்கள் இது போன்ற முயற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் நமது இலக்கை அடையாலம்.
a.ahamed thaha, al-khobar - ksa

Diary said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சாதாரண கப்பேர் வயர் முலம் Integrated Services Digital Network (ISDN) என்று சொல்லக்கூடிய இந்த வசதி இணையத்தை டெலிபோன் exchangeல் இருந்து 5 கிலோ மிட்டார் வரை எடுத்து செல்லாம்

கேள்வி என்னவென்றால் இந்த நவீன உலகத்தில் இதுவரை இந்த வசதியை அதிரை டெலிபோன் exchageக்கு கொடுக்காம என்ன செய்தார்கள் BSNL அதிகாரிகள் ?

முன்னால் மத்திய மந்திரி தயாநிதி மாறன் விட்டுக்கு Integrated Services Digital Network (ISDN) என்று சொல்லக்கூடிய இந்த வசதியை ஏற்படுத்தி கொடுத்த அதிகாரிகளே
நான் தெரியாமதான் கேட்குறேன் எங்களை விடவா இந்த ஊட்டு பயலுவ வரி கொடுத்துட்டாங்க ?

Saleem said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ரயில் தான் வரவில்லை atleast ரயில் முன்பதிவு வசதியாவது கிடைக்கட்டும்!!!!

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நம்மூருக்கு இரயில் ஏன் வருவதில்லே...

வெளிநாட்டிலிருந்து அந்நிய செலவானி வருதுல்லே.....
நம்மூர் ஆம்பளைங்க எல்லா வெளிநாட்டுல இருக்கங்கள்ளே.....
நம்ம சங்கத்துக்கு நெறைய தலாக்கு கடிதம் வருதுல்லே...
நம்மோர் காலேஜ்லே எப்பவுமே கோர்ட் கேஸ் நடக்குதுல்லே...
குதிரை வண்டியே ஒழிச்சிட்டங்கல்லே....

(மன்னித்து விடுங்க..... குதிரை ஓட்டுனர்களே..... உங்களின் அருமை எங்களுக்கு இப்பத்தான் தெரிகிறது..... உங்களை நம்பி நாங்கள் கண்ணியமாக வெளியில் சென்று வருவோம்...அடிக்கடி உங்கள் வண்டியில் தலை அடிப்பட்டு காயம்பட்டாலும், எண்களின் மனம் காயம்படாது...அடிக்கடி குலுக்குது....வயித்த கலக்குது.... நாங்கள் வீட்டில் இருந்தாலும்.)

இந்த இடத்தில் பஞ்சாயத் தலைவருக்கு ஒரு யோசனை : நீங்கள் மறுபடியும் பழயபடி நிலக்கரி இரயில் வண்டியை வரவழைத்து விடுங்கள். (நம்ம ஏரியா MLA MP க்கு தெரியாம). ஏன்னா இரயில் நம்மூருக்கு நெருங்கியவுடன் இஞ்சின்லே நிறைய கொசு மருந்த கலந்து ஊரைச் சுத்தி புகை விட்டு அடிகக்கடி கொசுவை விரட்டலாம்.

அதுமட்டுமல்ல, நம்மூர் குப்ப கூலம் கூட, நல்லா மக்கிப்போய் நிலக்கரியை விட (கார்பன்) நல்லா எரியும்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.