இயற்கை வளம் அதிகமின்றி போனாலும், இனிமையான மக்களின் மனம் இயற்கையின் அழகை மறைத்து மனித வளத்தை மேம்பட செய்துள்ளது அன்று.
அதிரை மக்களின் இனிய வழிமுறைகள் எத்தனையோ வயதானவர்களுக்கு ஊன்றுகோலாகவும், வாலிபர்களுக்கு நல்வழிகாட்டியாகவும் இருந்து சென்றவர்கள் எத்தனையோ சான்றோர்கள், இந்த மண்ணின் மைந்தனாக பிறந்தும், பிரிந்தும் இருந்தும் வருகிறார்கள் என்பது கிணற்றில் வாழும் தவளைப்போல் வெளிகாட்ட முடியாமல் தவிக்கும் எத்தனை முதியோர்கள், இல்லை.. முன்னோர்கள் வேதனையோடு இன்றைய சமுதாயத்தின் கறைகளை பார்த்தும் அவர்களால் சுத்தம் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். நாம் சிந்தனைக்கு சிறப்பு கொடுக்கும் படைப்பு ஆனால் நம் சிந்தனைகளை மறந்து பயனற்ற பயணத்திற்காய் பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறோம்..... ஏன்! ?
இந்து,முஸ்லிம்,கிறிஸ்துவம் போன்ற மதங்கள் இருந்தாலும் மக்கள் நாங்கள் ஒன்றுதான் என்று ஓன்றுகூடி வாழ்ந்துக்காட்டியவர்கள் நம் முன்னோர்கள். மிகப்பெருமிதத்திற்குரியவர்கள் என்ற பெயரின் நேற்றைய சொந்தக்காரர்கள். இன்றைய சூழலில் நிழலாய் கூட சில ஊதாரிகள் ஒற்றுமை சிதைக்க நம்மை சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள் நம்முடைய சிந்தனையையும் மறைத்துதான் நாமும் மறந்துதான் செயலில் சித்தரிக்கின்றோம்....
இன்றைய கட்சிகளும் நம்மை காக்க பாடுபடுகின்றன என்று பொய் சொல்ல வேண்டுமானாலும் பல உண்மைகளை புதைத்து, உண்மையானவர்களை மறைத்து நம் மனதையே சிதைத்துதான் சொல்லவேண்டும் இதுதான் இன்றைய ஊன நிலை. உண்மை நிலை. வியாபாரிகள் 10 கட்டு கீரை 30 வாங்கினாலே 50ரூபாய்க்கு விற்றால்தான் உண்மையாய் உழைத்து ஊதியம் சம்பாதிக்க முடியும். ஆனால் அரசியலில் அள்ளி வீசும் பணம எவ்வளவு!(?). எவ்வளவு சம்பாதித்தாலும் அவர்களுக்கு முழுமையான லாபம் கிடைக்குமா? அவர்களுக்கே புரியாத நிலையில் புலம்பிக்கொண்டு திருகிறார்கள். கட்சிக்காய் அரும்பாடுபட்டு,தியாகங்கள் செய்து உண்மைத்தொண்டனாய் உழைத்தவர்களின் நிலை எங்கே? உண்மையாய் உழைத்தவர்கள் எங்கே? உண்மைக்கு சொந்தக்காரர்களாய் உழைத்தவர்கள் அமைதியாய்தான் இருக்கிறார்கள்.
நேர்மையான மனிதனுக்கு மரியாதை இல்லை என்பது முரண்பாடு புரிந்தும் ஒத்துழைப்பதுதான் இன்றைய இயல்புநிலையா? பணமிருந்தால் எந்நேரமும் கட்சியின் முக்கியபுள்ளிதான்.சிந்தித்து இன்னும் சிந்திக்க தூண்டுங்கள் எங்களுக்கும்.
இயக்கம் ஓர் இயக்கமின்றி இயங்கும் ஒரு ஸ்தாபனம் போன்ற தோற்றத்தில்தான் அதனுடைய நிலை இன்று. ஒரு இயக்கத்தில் உதவி கேட்டு ஒருவர் சென்றால் மற்ற இயக்கவாதிகளுக்கு இவரும் ஒரு எதிரியின் தோற்றம் தான் என்ற நிலைபாடுகள் நிலவுகின்றன. உண்மையை உணருங்கள். நமக்கு சத்தியம் காப்பதில் கவனம் அதிகமுண்டு என்பதனை உணர்ந்து.
நம்மைச்சுற்றி நடப்பதெல்லாம் உண்மையாக பொய் என்பது தெரிந்தும் தெளியாத வண்ணம்தான் ஒரு வட்டமிட்டு வலம் வந்துக்கொண்டிருக்கின்றோம். உண்மை மறைத்து வாழும் இந்த வாழ்க்கையின் சுகலாபம்தான் என்ன?. கொஞ்சம் மனதுக்குள் கூச்சலாய் ஒரு கேள்வி கேட்டுப்பாருங்களேன். நமக்கு நன்கு தெரியும் உண்மைக்கும் பொய்மைக்கும் உள்ள பாகுபாடு, நீதிக்கும் அநீதிக்கும் உள்ள வேறுபாடு, ஒற்றுமைக்கும் வேற்றுமைக்கும் உள்ள முரண்பாடு இவையனைத்தும் நன்கு அறிந்தும் நம் சிந்தனையை ஏன் சிற்றின்பத்திற்காக சிதறடிக்கின்றோம். நாம் சிந்தனையாளர்களாக இருந்தும் எதனையும் சிந்திக்காமல் சிந்தனையை உறக்கத்தில் விட்டுவிட்டு அடுத்தவர்களின் சிந்தனைக்கு நாம் நம் உணர்வுகளை ஊமையாக்கி “ நான் தூங்குகிறேன் நீ எழுந்துவிடு” நம் சிந்தçயை முடக்கி வைப்பதில் என்ன லாபம் நாம் சிந்தனையுள்ள மனிதப்பிறவியாக பிறந்ததற்கு?.
நாம் நல்வழியில் செல்லக்கூடியவர்கள் என்பதை மெய்பித்து மெய்சிலிர்க்க செய்வோம். நம்முடைய ஒரு நிமிட சிந்தனை பல நாள் வணக்கமாகும். சிந்தனையறிவே போதுமானது! சி ந்தியுங்கள் நமக்கு நல்வழிகாட்ட 7வது அறிவு தேவையில்லை. நேர்வழியில் நாமும் நம்மை சுற்றியுள்ளவர்களையும் அழைத்து சொர்கம் செல்வோம் இனியாவது தூங்கும் உங்கள் சிந்தனை உணர்வுக்கு செயல்வடிவம் கொடுங்கள் மற்றவர்களின் சிந்தனைகள் நம்வழிக்கு மாறும்.
--------------
Opp. KMC, College Road
SHABNAM COMPLEX
5 பின்னூட்டங்கள்:
ஒரு மனிதனுக்கு ஒரு மனம்தான் இறைவன் படைத்திருக்கிறான்.
அது இரண்டு வகையாக செயல்படுகிறது.
உங்களின் உல் மனதிற்கு ( sub -consious ) "நல்ல விசியங்களை மட்டும்", வெளிமனத்தில் இருந்து தொடர்ந்து கட்டளையிட்டுக்கொண்டே இருங்கள்.
இதை நீங்கள் தொடர்ந்து செய்தால் உங்கள் வாழ்க்கையில் "வெற்றி நிச்சயம்" என்பதை "துக்ளக் நியூஸ் குழுமம்" வலியுறுத்துகின்றது.
இதன் விளைவு உங்களைக் கொண்டு நூறு குடும்பம் பலனைடைவார்கள்.
மாறாக நூறு குடும்பம் தீங்கிலிருந்து காப்பாற்றபடுவார்கள்.
அஸ்ஸலமு அலைக்கும் வரஹ்...
இந்த கட்டுரை தொலைந்து போன நமது உயர்வான முன்மாதிரி வாழ்வை நினைவு படுத்துவதாக உள்ளது. நமது இறைவன் அல்குர் ஆனில் மனித ஜின் இனத்தை அவனை வணங்குவதற்காவே படைத்துள்ளதாக கூறுகிறான். அதற்கு ஏதுவாக சட்டமாகவும் வரலாறாகவும் படிப்பினைகளாகவும் ஏராளமானவற்றைக்கூறியுள்ளான். அதனை நாம் எத்தனை பேர் நாம் பொருள் உணர்ந்து படித்து செயல்படுகிறோம். மேலும் நமது வாழ்வுக்கு வழிகாட்டியாக இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் அனுப்பி அழகிய முன்மாதிரி வாழ்வையும் அவர்கள் மூலமாக நமக்கு தந்துள்ளான். அதனை நாம் எத்தனை பேர் ஆர்வமாக தெரிந்துள்ளோம். மிக மிக குறைவு. இதனால் தான் இவ்வளவு பிரச்சனைகள். நாம் இதனை விளங்க வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனது மார்க்கத்தில் நல்ல விளக்கத்தை கொடுத்து அதன்படி செயல்பட்டு நல்ல சமுதாயத்தை படைக்க உதவி செய்வானாக - இன்ஸா அல்லஹ் - ஆமீன்...a.ahamedthaha, al-kohbar, ksa.
// உண்மைக்கு சொந்தக்காரர்களாய் உழைத்தவர்கள் அமைதியாய்தான் இருக்கிறார்கள்.//
சரியாக சொன்னீர்கள்.
நல்ல ஆக்கங்களுக்கு நன்றி
அருமையான சிந்தனையோட்டம் ! நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.
//நமக்கு நல்வழிகாட்ட 7வது அறிவு (என்று ஏதும்) தேவையில்லை. நேர்வழியில் நாமும் நம்மை சுற்றியுள்ளவர்களையும் அழைத்து சொர்க்கம் செல்வோம்//
இன்ஷா அல்லாஹ் !
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment