மேலே காணும் படம் மெயின்ரோடு பழைய அண்ணாசிலை சந்திப்புக்கு பின்புறம் தரகர் தெரு செல்லும் ரோடு. அங்கு ரோடு போடுவதற்காக ஜல்லி, மணல் ஆகியவை கொட்டி வைக்கப்படுள்ளது என்னவென்று விசாரித்தால் சென்ற திமுக ஆட்சியில் போடப்பட்ட தீர்மானத்தின்படி இங்கு ரோடு போடப் போகிறார்களாம் (!!???).
அகலப் பாதாள சாக்கடை திட்டம் அதிரைக்கு அறிவிக்கப்பட்டு இன்னும் ஒரு சில மாதங்களில் பணியை துவங்க இருக்கின்ற இவ்வேளையில் அதிரையில் உள்ள பெரும்பாலான ரோடுகள் உடைக்கப்படும் அதில் இந்த ரோடும் தப்பாது இதைப்பற்றி கேட்டால் இதற்கு பெயர்தான் "கவர்மெண்ட் ஆர்டராம்" என்னவோ போங்க!
10 பின்னூட்டங்கள்:
கோபப்படாதீங்க.... அண்ணே....
நமதூர் தலைவர்களிடமிருந்து இன்னும் ஏகப்பட்ட திட்டம் வரவேண்டிருக்கு. அவங்க திட்டந்த்தப் பற்றி அறிவிச்சு முடிக்குவதர்க்கும், அது சம்பந்தமா நிகழ்ச்சி நடத்துவதற்கும் குறைந்தது நான்கு வருடமாவது வேண்டும், மறுத்தேர்தல் வருவதற்குள் நீங்கள் சொல்வது போல் இந்த ரோட்டை மறுபடியும் உடைப்பர்கள், அதன் பிறகுதான் "இது பாதாள சாக்கடைக்குண்டான வேலை ஆரம்பமாயிடுச்சு என்பார்கள்.
இதல்லாம் ரொம்ப சகச்..சம்..னே...
ஒருவேளை அந்தத் தெருவில் (தரகர் தெரு செல்லும் ரோடு), வாக்கு சேகரித்தவர்கள் நாங்கள் ஆட்சிக்குன் வந்தால் முதன் முதலில் ரோடு போட்டுத் தருகிறோம் என்ற வாக்கை நிறைவேற்றுகிரார்களோ என்னவோ.?
திட்டங்கள்(plan) இல்லாத திட்டங்கள்.
அரசு(மக்கள்) பணத்தை அநியாயமாக குப்பையில் போடுவதற்கு சமம்.
PLAN பண்ணாம எதுவும் பன்னப்பிடாது.........
பாதாள சாக்கடை திட்டம் வருவதற்கு முன்னர் சாலை அமைப்பது முட்டாள்தனமான ஒன்றாகும் அதிகாரிகள் இது போன்று கவனுக்குரைவாக செயல்பட்டால் பொது மக்கள் சார்பாக பொது நல வலுக்குகள் போடலாமே ? அரசாங்கம் நமக்காக தான் உண்மையில் மக்கள் பணியாற்ற நினைக்கும் நல்லுள்ளங்கள் இது போன்ற அஜாக்கிரதையான விசயங்களை கையில் எடுத்தால் ஊர் சிறக்கும் ! சென்னையை சார்ந்த டிராபிக் ராமசாமி ஒரு உதாரணம் ஒரு தனி மனிதன் ஒரு ராஜாங்கமே நடத்தி வருகிறார் சமீபத்திய தி நகர் கடைகளுக்கு சீல் வைத்ததற்கு அவருடைய வழக்கு தான் காரணம்.
பாதாள சாக்கடை திட்டம் என்பது ஒரு சிறந்த திட்டம். இது நம் ஊருக்கு ஒத்துவருமா என்று சற்று சிந்தித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஏன் என்று சொன்னால் சென்னை போன்ற பெரு நகரங்களில் இப்பாதாள சாக்கடை மூலம் ஏறபடும் பிரச்சனைகளை கையாள இதற்கு என்று ஒரு தனி பிரிவே செயல்பட்டு வருகிறது, அந்த பிரிவிற்கு பெயர் கழிவு நீர் அகற்றுவாரியம். நம்மூரை பொருத்தவரை ஒரு தெருவில் கிடக்கும் குப்பையை அகற்றவே நான்கு நாட்கள் ஆகும், இது போன்ற கால்வாய் வந்தால் ஊரே நாரிவிடும் அவ்வப்பொழுது ஏற்படும் அடைப்புகளை சரி செய்யாவிட்டால்! இதனால் பல்வேறு நோய்கள் பரவ இதுவே காரணமாகிவிடும்.
வளர்பிறை அவர்களே சற்று சிந்தித்து பின்னூட்டமிடுங்கள் தங்களின் இந்த கூற்று பின்னோக்கு சிந்தனை கொண்டது.... பாதாள சாக்கடை அமைக்கும்போது அதனை பராமாரிக்கும் நோக்குடன் எதிர்கால திட்டத்தோடு தான் செயல்படுவார்கள் இது தான் இயல்பு, ஆகையால் வருவதற்கு முட்டுகட்டையாக எதையும் எழுதாமல் ஊக்குவிக்கும் நோக்கில் கருத்து பரிமாறவும்.
பின்னோக்கு சிந்தனைக்கு நான் போகவில்லை மாறாக நம் ஊரின் சுகாதாரத்தை(நன்மையை) கருத்தில் கொண்டுதான் பின்னூட்டமிட்டேன். அதிரை பேரூராட்சியில் குப்பை கூளங்களை சுத்தம் செய்ய நியமிக்கபட்ட பணியாட்கள் துரிதமாக செயல்படுவதில்லை, அனைத்து தெருக்களிலும் குப்பை தொட்டிகள் நிரம்பி கீழே கொட்டி கிடக்கின்றது, இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்றும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டே அவ்வாறு நான் பின்னூட்டமிட்டேன். பூமியின் மேலே வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டியை பராமரிக்கவே இந்த நிலை என்றால் பூமிக்கு கீழே இருக்கும் பாதாள சாக்கடை கால்வாயை பாராமரிக்க என்ன கதியோ? பாதாள சாக்கடை திட்டத்தை வேண்டாம் என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை நண்பரே. முறையாக பராமரித்தால் நிச்சயமாக வரவேற்போம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
குறை சொல்லி சொல்லியே! மனம் குன்றிய நமக்கு குப்பைகள் கொட்டுவதற்கு சரியான இடம் கிடைக்காமல் போனது தான் மிச்சம்.
வளர்பிறை அவகளுக்கு - எந்த ஒரு திட்டத்தையும் துடங்குவதற்கு முன் அதன் முன் பின் விளைவுகளை ஆய்வு செய்து அதன் குழுவின் பரிந்துரையின் பெயரில் தான் இயக்குவார்கள் இது தான் நிதர்சனம்.... என்னதான் முறையாக செய்தாலும் பணியாட்கள் செய்யும் கவனக்குறைவுகள் தான் பின்னாளில் பிரச்சினையை உண்டு பண்ணுகிறது, இதனை முறையாக துறை சார்ந்த நடவடிக்கைகள் மூலம் களைய நிறைய வழியிருக்கிறது, இதை விட்டு ஆரம்பமே குறை கூறுவது நன்மையளிக்காது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. மேலும் சேர்மன் அஸ்லம் அவர்கள் தற்போது தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக தகவன் இன்ஷா அல்லா மேலும் அவர் பனி சிறக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment