அதிரையும் அடுத்த சீஸனுக்கு தயாரகிவிட்டது..
"ஹஜ் மாசத்துல தாமா ஊருல கல்யாண காட்சிகள் கலைகட்டும்" என்று இரண்டு பெரிசுங்களின் உரையாடல் நமது காதுக்கு விழுந்தது.
இன்று! ஒரு திருமண வைபவத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது அங்கே மாப்பிள்ளையாக சிக்கியவரையும் அவரைச் சூற்றியிருப்பவர்களையும் கிளிக் கிளிக் கிளிக்... :)
நடுத்தெருவை சேர்ந்த சகோ.அப்துல் ரவூப் அவர்களின் திருமணம் நேற்று(11/11/11) மாலை 5.00மணிக்கு மரைக்காயர் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது . அதிரை பிபிசியின் சார்பாக அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அல்லாஹ் அவர்களின் மணவாழ்க்கையில் அருள்புரியட்டும்.
11 பின்னூட்டங்கள்:
மணமக்களுக்கு என் இதயம் கனிந்த நல்ல வாழ்த்துக்கள் .....
சகோ.அப்துல் ரவூப் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் ...
S.ஷேக் மைதீன் ....மதுரை
[TRANSLINK இன்டர்நேஷனல் சென்னை ]
(உயிர் எழுத்துக்களின் வரிசைப்படி)
அன்பே என்று அழைத்திடுங்கள்!
ஆசைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்!
இதயங்களை ஈந்திடுங்கள்!
ஈரவிழிகளை துடைத்திடுங்கள்!
உறவுகளை நினைத்ததிடுங்கள்!
ஊடல்களை மறந்திடுங்கள்!
எளிமைக்கு வழிவிடுங்கள்!
ஏழ்மைக்கு உதவிடுங்கள்!
ஐயங்களை அழித்திங்கள்!
ஒரு யுகம் கடந்திடுங்கள்!
ஓசையின்றி உயர்ந்திடுங்கள்!
ஒளஷதம் நிறைந்து வாழ்ந்திடுங்கள்!
-S.ஷேக்மைதீன் மதுரை
[TRANSLINK இன்டர்நேஷனல்]
[CHENNAI]
தாங்கள் பிரசுரித்த அனைத்து விசயங்களும் அதன் சார்ந்த புகைப்படங்களும் அருமை, ஆனால் இந்த புகைப்படங்கள் என்னவோ சற்று சம்மந்தம் இல்லாதது போன்றுத் தெரிகிறது, இவ்வளவு புகைப்படங்கள் ஒரு பொது தளத்திற்கு தேவை தானா ?
'பாரகல்லாஹுலக வ பாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபி கைர்'
அல்லாஹ் உங்களுக்கு உள்ளும் புறமும் அருள் புரிந்து நல்ல காரியங்களில் உங்கள் இருவரையும் ஒன்றிணைத்து வைப்பானாக...
( ஜஹபர் சாதிக் தெரு{சந்து} வாசி )
'பாரகல்லாஹுலக வ பாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபி கைர்'
@abdul
எனக்கும் அப்படி தான் தோன்றியது.ஆனால் இப்படி மார்க்கம் வலியுறுத்திய எளிமையான திருமணமாக தோன்றுவதால்,இதை படிக்கும் இளைஞர்கள் தாங்களும் அவ்வாறு செய்ய ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்பதால் இதை வரவேற்போம்
இது ஒரு எளிமையான திருமணமாக இருந்தாலும்,
கோர்ட்டு சூட்டு என்று வலிமையாக இருக்கிறது.
மணமகன் ப்ளஸ் நண்பன் ரவுஃப்...வாழ்த்துக்கள்..
ஃபோட்டோக்களும் நம் தெருக்களும் மிக அருமை..பகிர்வுக்கு நன்றி..
பதிந்த கருத்துகளை தங்களின் தளத்தில் தெளிவாக வெளியிடும் அதிரை பி பி சி இந்த திருமண சம்பந்தமாக பதியப்பட்ட விமர்சனகளை ஏன் அகற்றிவிட்டீர், கண்ணியமான வரையறைக்குட்பட்டு பதியப்படும் விமர்சனங்களை பதிந்தால் தானே தங்களின் ஊடகத்தின் நெஞ்சுரிதியை வெளிப்படுத்த முடியும்.... சிந்திபீர் செயல்படுவீர் :)
எல்லா புகளும் இறைவனுக்கே தம்பி ரவூப் அவர்களே உங்கள் கல்யாணம் செய்தியை அதிரை பி பி சி வாயிலாக தெரிந்து கொண்டேன். அல்லாஹ் இருவர் உள்ளதிலும் என்றென்றும் சந்தோசத்தையும் இஸ்லாத்தின் பிரகாரம் வாழக்கூடிய வாழ்க்கையையூம் அமைத்திட தூவ செய்தவனாய் உங்கள் சகோதரன்
மேலத்தெரு ஜமால்
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment