அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, November 1, 2011

அதிரையில் ஒட்டகம் காணொளி ..

தியாகத்திருநாளை எதிர்நோக்கியிருக்கும் இந்த நேரத்தில் அதிரையில் தமுமுக ஏற்பாட்டில் கூட்டுக் குர்பானி முறையில் இரண்டு ஒட்டகத்தை ஏற்பாடு செய்து தலா ரூபாய் 7500 ஒரு பங்கிற்கு என்று நிர்ணயித்து இருக்கிறார்கள் அந்த ஒட்டகம் நேற்று அதிரைக்கு கொண்டுவரப்பட்டது அதனை மக்கள் ஆர்வத்துடன் கண்டனர் அதன் காணொளி கிழே .


அதிரை த.மு.மு.க. இந்த வருட கூட்டுக் குர்பானித் திட்டத்தின் அடிப்படையில் ஓட்டகம் மற்றும் மாடு கொடுப்பது என்று நிர்னயித்து அதில் ஒட்டகத்திற்கு பங்கு சேர்ந்து விட்டது மாட்டுக்கான பங்கு மட்டும் மிதி உள்ளது அதில் ஒரு மாட்டுக்கு ஒரு பங்கின் விலை ரூபாய் 900 நிர்ணயித்து இருக்கிறார்கள், உங்களின் பங்களிப்பை அளித்திட அதிரை தமுமுக நிர்வாகியை தொடர்பு கொள்ளவும் .

சகோ /தையுப் 9952131334

குறிப்பு : இது போன்று குர்பானித் திட்டத்தில் வரும் நிதியைக் கொண்டு வாரம்தோறும் ஏழைகளுக்கு உணவு வழங்கப்படுவதாகதமுமுக நிர்வாகி தெரிவித்தார்.

22 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஹ ஹ ஹ.... அசத்துறீங்க ஒட்டகத்தையும் விட்டு வைக்கலையா.... கலக்குறீங்க போங்க அதிரை பி பி சி தற்போது குழந்தைளிடமும் நம்பர் ஒன்னு ...

ADIRAI TODAY said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

காலில் பலமில்லாமல் இருப்பதுப்போல் தெரிகிறது! ஒரு வாரத்திற்கு நல்ல உணவு கொடுக்கவும். நம்ம ஊர் ஸ்டைலில் வேப்பிலையை கொடுக்க வேண்டாம்!

aa said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எது எது செய்தின்னு நம்ம ஊர் மீடியாக்களுக்கு தெரியவில்லை போலும். நமதூர் மீடியாக்களின் நிலை கவலை அளிக்கிறது. நமதூர் மீடியாக்களுக்கு Mission/Vision எல்லாம் இருப்பதாக தெரியவில்லை.பரபரப்பு நாளிதழ்கள் ஸ்டைலில் எது சூடாயிருந்தாலும் செய்தியாக போட்டுவிடுகிறார்கள். அவர்களின் இலட்சியம் எல்லாம் Number of hits/நீனா நானா போன்றவையாகத்தான் இருக்கிறது.உண்மை கசந்தாலும் சொல்லத்தானே வேண்டும்

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஒட்டகம் புட்டாயே போடுறதுக்கு முன்னே.......
இந்த குப்பையே எப்போ அல்ல போறாரு இந்த வார்டு மெம்பெர்...

ஊர் குருவி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஹ்மத் ஃபிர்தௌஸ்க்கு

வெளி நாடு வாழ் அதிரையர்களுக்கும், ஊரில் உள்ளவர்களுக்கும் ஊரில் நடக்கும் எல்லா சம்பவங்களும் செய்திதானே, அது போல் இதுவும் செய்தி தான். அடுத்தவர் குறை கண்டுபிடிப்பதிலேயே குறிக்கோளாய் இருக்கிறீர்கள் போலும். கொஞ்சம் திருந்துங்களேன், இதை கொஞ்சம் மாத்தி யோசியுங்கள் "அஹ்மத் ஃபிர்தௌஸ்" அவர்களே!!

Vision : அதிரை மக்களுக்கு ஊரில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் நடப்பு செய்திகள் தருவதோடு, அதிரை மக்களின் படிப்பாற்றல் மற்றும் எழுத்தாற்றலை ஊக்குவிப்பது என்று நினைக்கிறேன்.

Mission : அதிரை மக்களுக்கும் உண்மையான செய்திகளை முடிந்த வரை உடனுக்குடன் தருவதோடு Journalism and Mediaவில் வலுவான கால் பதிப்பது என்று நினைக்கிறேன்.

மேலதிக விவரங்கள் AdiraiBBC தருவார்கள்

aa said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ஊர்குருவி //மேலதிக விவரங்கள் AdiraiBBC தருவார்கள்// அவர்கள் தரட்டும். அதுவரை காத்திருப்போம்.

அது சரி. ஊர்குருவி உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு புதிதாகப் பிறந்த குருவி போல் தெரிகிறதே. அட யாங்கப்பா! ஒழுங்கா உங்க உம்மா வாப்பா வச்ச பேர்ல எழுதுங்களேன். சும்மா குருவி, மைனாண்டுகிட்டு....சீசனுக்கு ஒரு ID create பண்றவங்களுக்கு மட்டும் உரியது இந்த கடைசி பாரா.

முஹம்மது அப்துல்லாஹ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சபாஷ்!!! சரியான தீர்ப்பு!!!

ஊர் குருவி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஆமாப்பா அஹ்மத் ஃபிர்தௌஸ் மேட்டர பாரு, பாருப்பா Vision/Mission பத்தி சொல்லிருக்கேப்பா அதபத்தி ஒன்னு எழுதலே, யான் புரியலையா?

aa said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ஊர்குருவி. உங்களோட Mission/Vision எல்லாம் பார்த்தேன். ஆனால் நான் அறிந்த வரையில் ஒரு நிறுவனம் தான் தன்னுடைய இலட்சியம்/குறிக்கோள் பற்றியெல்லாம் சொல்ல வேண்டுமே தவிர, அந்த நிறுவனத்திற்கு வந்து செல்லும் வாடிக்கையாளர் அல்ல.

இப்ப கேள்வி நீங்கள் நிறுவனத்தின் சொந்தக்காரரா இல்லை வாடிக்கையாளரா?!!!!

அதிரை புதியவன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஹ்மத் பிர்தௌசுக்கு :)
செய்திகளோடு சுவாரஸ்யமும் வேண்டும் என்பார்கள் அது போல தான் இந்த ஒட்டக செய்தியும் இதில் என்ன தவறை கண்டுகொண்டீர் ? ஒ அந்த நடிகை இந்த நடிகைகள் பற்றி எழுதினால் தான் செய்தியோ ? மீடியாக்களை சிறுவர்களும் பார்க்க தூண்டனும் அதற்கு இது போன்ற செய்திகள் நன்மை பயக்குமே ! சிந்தியுங்கள் செயலாற்றுங்கள் - அதிரை பி பி சி க்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஹ்மத் பிர்தௌஸ் அவர்களுக்கு,
mission/vision பற்றிய தங்களுடைய வியாக்கியானத்தை சொன்னால் நன்றாக இருக்கும்,
"According to journalism vision should be flawlessly pointing out the right and interesting one. Mission should be achieving the respective thoughts" நல்லதை ரசிக்க தெரியனும்

அப்துல்லாஹ்... said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

என்னாங்க அந்த ஒட்டகத்துக்கு உடம்பு சரியில்லை டாகட்டர்க்கிட்டே ௬ட்டிக்கிட்டு போங்கப்பா plz.....!

MOHI said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சவுதி ஒட்டகத்தை பார்த்து , இதை பார்க்கும் போது எதோ சோமாலியாவிலிருந்து கொண்டு வந்தது போல இருக்குது.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அப்பப்பா இந்த ஒட்டகத்தை விட மாட்டாங்க போல.....

ஊர் குருவி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//நான் அறிந்த வரையில் ஒரு நிறுவனம் தான் தன்னுடைய இலட்சியம்/குறிக்கோள் பற்றியெல்லாம் சொல்ல வேண்டுமே தவிர, அந்த நிறுவனத்திற்கு வந்து செல்லும் வாடிக்கையாளர் அல்ல//

நான் வாடிக்கயாலருங்க!! ஆனா கொஞ்ச விசுவாசமான வாடிக்கயல்ருங்க!!

ஒரு நிறுவனம் அதனுடைய Vision/Mission ஐ Memorandum of Association மற்றும் Articles of Association மூலம் அதன் பங்குதாரருக்கு/வாடிக்கையாளருக்கு பிரகடனப்படுத்தும். அதை அவர்கள் தெரிந்து வைத்துக்கொண்டு உங்களமாதிரி தெரியாதவர்களுக்கு சொல்லுவார்கள். இதைவிட எழிமையா என்னால சொல்லமுடியாது. அனேகமாக புரிந்திருக்கும்.

ஆமா.. இப்போல்லாம் பெருக்குப்பின்னாடி சலபி பட்டம் போடறதில்லை? யான் வாப்பா நீங்க வாங்குன பட்டத்தை போடுங்க!!

சும்மா வியாக்கியானம் பண்ணாம மதியழகன், அதிரை புதியவன் போன்ற நல்லவங்க பெரியவங்க சொல்றத கேட்டுக்கம்மா!!

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஊர்குருவி..... அஹ்மத் பிர்தௌஸ்......மதியழகா......
நீங்க மூணு பெரும் யாரு இந்த ஒட்டகத்த அறுக்கபோறது.
என்ன சொல்றீங்க....நீங்க முனுபேருமா.......அருப்பீங்களா........
அப்போ அந்த ஒட்டகத்துக்கு காசு கொடுத்தவங்களுக்கு என்ன பதில் த.மு.மு.க சொல்லும்........

என்னது......ஒட்டகம் உங்க வீட்டுக்கு வரணுமா.....???....

சரி உங்களுக்கும் வாணாம் எங்களுக்கு வாணாம்....
ஒட்டகம் யார் வீட்டுக்கு போகுதோ.... அப்புறம் முடிவு பண்ணலாம்....
Gentleman களா, நீங்க படிக்கிற பாட்டு கொஞ்சம் பேமஸ்தான்....

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

யா ரப்பனா ? ஒட்டகத்தை இன்னும் விடலையா... துக்ளக் ஐய்யா - யாருக்கு வாய்ப்ப்பு கிடைத்தாலும் அறுப்போம்ல காரணம் சவாப் / நன்மை கிடைக்கும்ல... அதிரை பி பி சிக்கு ஒரு அன்பான வேண்டுகோள் தயவு செய்து அந்த ஒட்டகத்தை குர்பானி கொடுத்தபுரம் ஒரு வீடியோ பதிவு பண்ணி இந்த கதைக்கு முற்று புள்ளி வையுங்கள்.

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அப்பப்பா,நான் மட்டும்தான் ஒட்டகத்த பத்தி எழுதல(ஹிஹி )

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அப்போ ஒட்டகத்த திங்க மட்டும் தெரியும்.....சரிம்மா.....சரிம்மா.....நீங்க ஹீஹீன்னு சொல்லாதீங்க....அஆன்னு சொல்லுங்க.....

ஹிஹி...ஹிஹி... (நா உங்கள பார்த்து...)

Shameed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மதியழகன் said... [Reply to comment] 17

//யா ரப்பனா ? ஒட்டகத்தை இன்னும் விடலையா//



திரு மதியழகன் உங்கள் எழுத்தில் நிறைய இஸ்லாமிய சாடை தெரிகின்றது அது போல் உங்கள் பெயரிலும் இஸ்லாமிய பெயர் தெரிய இறைவன் நாடட்டும்!

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சகோதரர் shameem (ஷமீம்) அவர்களுக்கு,
தங்களின் அறிவுரைக்கு நன்றி, நானும் அந்த ஏக இறைவனை ஏற்றுகொண்டவர்களில் ஒருவன், கருத்து பதிவதற்கு அரபு (இஸ்லாமிய) பெயர்தாங்கியாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, இன்னும் சொல்லபோனால் எத்தனையோ நபிமார்கள் தாங்கள் சார்ந்த மொழிகளிலேயே பெயர் சூட்டியிருந்தார்கள், "அஸ்ஸலாமு அழைக்கும்" என்ற வாசகத்திற்கு தமிழாக்கம் செய்யும்போது "அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக" என்று மொழியாக்கம் செய்யும் நாம் நடைமுறையில் சாந்தி என்ற பெயர் அந்நிய பெயர் போன்று எண்ணுகிறோம், இன்றைக்கும் இந்தோனேசிய போன்ற நாடுகளில் இஸ்லாமியர்கள் தாங்கள் சார்ந்த மொழிகளிலேயே பெயர் சூட்டிகொல்வது வழக்கமாக இருக்கிறது, என்னை பொறுத்தவரையில் நாம் சார்ந்திருக்கும் மொழிகளை நமக்கு பயன்படுத்திகொள்வதை ஊக்கபடுத்த விரும்புகிறேன் ஆகவே தான் என்னுடைய புனை பெயரையும் அறிவு சார்ந்ததாக அமைத்திருக்கிறேன் இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை, மற்றும் என் உயிரினும் மேலான அல்லாஹ்வின் மார்கத்தில் இதற்க்கு தடை இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை அப்படியேதும் சுட்டிகாட்டபட்டால் இதிலிருந்து விலகுவதில் நான் தான் முன்னிருப்பேன் இன்ஷா அல்லாஹ்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மன்னிக்கவும் சகோதரர் sameedh (சமீத்) என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ஷமீம் என்று குறிப்பிட்டுள்ளேன் மாத்தி வாசிக்கவும்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.