தமிழகத்தில் முஸ்லிம்கள் பெருபான்மையாக வாழக்கூடிய, வரலாற்று சிறப்பு மிக்க பிரபல கல்வி நிறுவனங்கள், மார்க்கத்தை பயிற்றுவிக்கும் மதரசாக்கள், மஸ்ஜித்கள், பைத்துல்மால், இஸ்லாமிய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் இருக்ககூடிய ஊர்களில் அதிராம்பட்டினமும் ஓன்று இவ்வூரில் பிரபல தொழில் அதிபர்கள், கல்வி சீமான்கள், கொடை வள்ளல்கள், மார்க்க அறிஞர்கள், கல்வி பயின்ற மேதைகள், கணினி வல்லுனர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், சட்டம் தெரிந்த வல்லுனர்கள், வாழ்ந்த, வாழ்ந்துகொண்டுருக்கிற ஊரில்....... வட்டி !
மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட, கடுமையாக விலக்கி வைக்கப்பட்ட இவ்வட்டியினால் எத்தனையோ குடும்பங்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து நடு வீதிக்கு வந்துள்ளார்கள். இவ்வட்டியானது சமுதாயத்தில் எவ்வாறு பல்வேறு பெயர்களில் உலவி வருகிறதென்று அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
1. சீட்டு :- என்ன சகோதரர்களே பெயரே வித்தியாசமாக இருக்கிறதா ! இது ஒரு நூதன வட்டி ! சீட்டு நடத்துபவர் ஒரு காலக்கெடுவை ( 12அல்லது 20 மாதங்கள் ) நிர்ணயம் செய்து ஒவ்வொரு மாதமும் பணத்தை வசூல் செய்வார். அவ்வாறு வசூல் செய்யும் முதல் மாத பணத்தை இலவசமாக ( வட்டி ) சீட்டை நடத்துபவர் எடுத்துக்கொண்டு மற்ற மாதங்களில் வசூல் செய்யும் பணத்தில் ஓவரி என்று அழைத்து ஒரு குறிப்பிட்ட தொகையை இலவசமாக ( வட்டி ) பணத்தை செலுத்துபவர்களுக்கு கொடுப்பார்கள். இவ்வாராக செயல்படும் முறையில் சீட்டு போடுபவர்களுக்கு இடையில் பணம் தேவை ஏற்பட்டால் சீட்டு நடத்துபவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட தொகையை தள்ளுபடிசெய்து ( வட்டி ) மீதி தொகையை கொடுப்பார்கள். இதில் பெரும்பாலும் நடுத்தர மற்றும் உயர் வர்க்கத்தினர் இவ்வலையில் சிக்கியுள்ளார்கள்.
2. ஒத்திக்கு (குத்தகை) :-
வீடு, தென்னந்தோப்பு, கடைகள் இவைகளை அடமானமாக ஒரு குறிப்பிட்ட பணத்தை பெற்றுக்கொண்டு கொடுப்பார்கள். பணத்தை செலுத்தும் நபர் இவற்றிலிருந்து கிடைக்கப்பெறுகிற வருமானத்தை
( வட்டி ) அடைவார்கள். மேலும் மற்றொரு வகையில் வீடு மற்றும் சொத்து பத்திரங்களை அடமானமாகக் கொடுத்து அவர்கள் நீட்டிய இடத்தில் வெற்றுப்பத்திரங்களில் கையொப்பம் இட்டு ( பின் விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல் )பணம் பெறுவது. குறிப்பாக இதில் அனைத்து வர்க்கத்தினரும் சிக்கியுள்ளார்கள்.
3. நாள் வட்டி (சைக்கிள்காரன்):-
நம் சமுதாய மக்களிடேய பெரும் சவாலாக உள்ளது இவைதான். நமது தெருக்களில் அங்காங்கே உலாவரும் வசூல் ராஜாக்கள் குறிப்பாக பாமர மக்களிடம் பணத்தை நாள் வட்டிக்குக்கொடுத்து திரும்ப தினமும் சைக்கிள் மற்றும் மோட்டார் பைக்கில் வசூல் செய்ய வருகிற இவர்களால் ஏற்படுகிற ( பதிவில் ஏற்ற முடியாத அளவுக்கு ) பல்வேறு பிரச்சனைகள். இதில் பெரும்பாலும் ஏழை எளியோர்கள்தான்இவ்வலையில் சிக்கியுள்ளனர்.
4. மேலும் பேங்கில் பெறப்படுகிற நகை கடன், டெபாசிட் தொகைகள், வீடு, வாகனம், தொழில் தொடங்க பெறப்படுகிற கடன்கள், இன்சூரன்ஸ்கள், ஷேர் மார்கெட் முதலீடு இவற்றைக்கொண்டு வருகிற இலாப, நஷ்டங்கள் அனைத்தும் வட்டியாகவே கருதப்படுகிறது.
தீர்வுதான் என்ன ?
1. மக்களிடேய விழிப்புணர்வு ஏற்ப்பட வேண்டும்.
2. வரவுக்கேற்ற செலவு செய்ய ஒவ்வொரு குடுபங்களும் ஒரு ஒழுங்கு முறையை பின்பற்றி நடந்து கொள்ளவேண்டும்.
3. இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று கூடி இம்மக்களிடையேCOUNSELLING செய்து அவர்களுடைய அறியாமையை அகற்றிட வேண்டும்.
4. நிபந்தனைக்கு உட்பட்ட வட்டியில்லாத கடன்களை வழங்க ஏற்பாடு செய்யலாம்.
5. அதிரையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், இஸ்லாமிய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிரபல அரசியல் கட்சிகள் மற்றும் வெளிநாடுவாழ் சகோதரர்கள் அனைவர்களும் ஒன்று இணைந்து இதனால் மக்களுக்கு ஏற்படுகிற இழப்பீடுகளை மனதில் எடுத்துக்கொண்டு சட்ட சிக்கல்களை ஆராய்ந்து பைனான்ஸ் நிறுவனங்களை தடை செய்யலாம்.
என்ன சகோதரர்களே இத்தலைப்புக்கும் இக்கட்டுரைக்கும் சம்மந்தம் இல்லை என்கிறீர்களா ? இருக்கிறது…! இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்.
குறிப்பு :-
மேலும் நல்ல கருத்துக்களுடன் கூடிய ஆலோசனைகள் வரவேற்க்கப்படுகிறது ( viewers can publish your valuable comments on the comment page )
மக்களின் சார்பாக,
M. நிஜாமுதீன் B.sc.
( 9442038961 )
7 பின்னூட்டங்கள்:
வலைக்குரிய விஷயம்,களையப்பட வேண்டிய விஷயம்,தீர்வுதான் என்ன?
அதிரையின் ஒட்டு மொத்த அதிகாரம் இவர்கள் கையில்தான் இருக்கிறது.
கடன் வாங்குவது இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டதை, தன்னை வாட்டிய நேரத்தில் வட்டிக் கடன் வாங்கலாம் என்று நினைத்தார்களோ என்னவோ....
வீடு......Not own but loan
மனை.....Nnot own but loan
நகை....Not own but loan
சீர்...Not own but loan
கார்.....Not own but loan
பைக்.....Not own but loan
படிப்பு.....Not own but loan
வியாபாரம்....Not own but loan
விவசாயம்.......Not own but loan
கல்யாணம்.....Not own but loan
வெளிநாடு பயணம்......Not own but loan
குற்றால பயணம்.......Not own but loan
கடனுதவி....Not own but loan
பைத்துல்மாலில் வட்டியில்லா கடன் வாங்கி, அதை அடைப்பதற்கு கந்து வட்டிக்கு எடுத்து அடைக்கும் அவல நிலை உங்களுக்கு தெரியுமா....
ஆணென்ன.....பெண்ணென்ன....
நீ என்ன..... நானேன்னே....
எல்லாம் லோன் இனம்தான்....
இந்த கட்டுரையை நாம் எல்லோரும் எழுதுவதற்கு முன் நம்மவர்களின் நெருங்கியவர்கள் இதில் எந்த அளவுக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆராயுங்கள்.......
கொஞ்சம் கொஞ்சமாக சரி பண்ணலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் நிஜாம் குறிப்பிட்டுள்ளது போல, வட்டியை பற்றி பேசிக்கொண்டிருப்பதை விட, அதற்கான காரணங்களை ஆராய்ந்து மேலும் அதற்கு ஓர் தீர்வை ஏற்படுத்தவேண்டும். பைத்துல்மால் என்ற அமைப்பு வட்டியில்லா கடன் கொடுப்பதை அதிகப்படுத்த வேண்டும், ஆனால் அதை நடுத்தர-மேல்தட்டு மக்களின் ஆடம்பர தேவைக்கு வழங்காமல், ஏழை-நடுத்தர மக்களின் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரமே வழங்க வேண்டும். அதிரையில் இதற்காக அழகிய கடன் அறக்கட்டளை (قرض حسنا) என்ற ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். அதை நாம் வலுப்படுத்தவேண்டும்.
//பைத்துல்மால் என்ற அமைப்பு வட்டியில்லா கடன் கொடுப்பதை அதிகப்படுத்த வேண்டும், ஆனால் அதை நடுத்தர-மேல்தட்டு மக்களின் ஆடம்பர தேவைக்கு வழங்காமல், ஏழை-நடுத்தர மக்களின் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரமே வழங்க வேண்டும். //
மிகச்சரியான கருத்து.
“வட்டியின் மூலம் கிடைத்த ஒரு திர்ஹம் முப்பத்தி ஆறு விபச்சாரத்தை விட அல்லாஹ்விடம் மிகக் கொடுமையானது என்றும், ஒருவனுடைய மாமிசம், (அல்லாஹ்வால்) தடுக்கப்பட்ட ஒன்றின் (வட்டியின்) மூலம் வளர்ச்சியடைந்தால் அதற்கு நரகமே மிக ஏற்றதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : தப்ரானி
வட்டி.... இன்றைய நவீன கொள்ளையன்.... நமதூரில் தடம் பதித்துள்ளது மிகவும் வேதனையாக உள்ளது..... நெஞ்சம் பதறுகிறது... எனது நண்பர்கள் வட்டாரத்தில் செய்யும் ஒரு அழகிய முன் மாதிரியை நான் இங்கே பதிய விரும்புகிறேன்.... நாம் விரும்பாமலே வங்கிகளினால் நமக்கு வரும் வட்டிபனத்தை எடுக்காமல் விடுவதால் அவைகள் கோயில்கள் மற்றும் இன்னபிற அன்னதான சேவைகளுக்காக வங்கிகளால் வழங்கப்படுகிறது.... நிர்பந்தத்தின் அடிப்படையில் நமக்கு தரப்படும் வட்டிகளை ஏழைகளுக்கு வட்டியில்லா கடனாக பகரமாக எதையேனும் பெற்று கொண்டு குறிப்பிட்ட கால கடனாக கொடுக்காலாமே.... இப்படி கொடுப்பதினால் நமக்கு வருவாயும் ஏற்படாது.... ஏழைகளுக்கு உதவியாக இருக்கும். இதனை தனிப்பட்ட மனிதனாக செய்யாமல் பைத்துல் மால் மூலியமாக கொடுத்து வாங்கினால் நன்மை பயக்கும்..... இது மார்க்க சட்டமல்ல.....சில மார்க்க அறிஞர்களின் அறிவுரையின் அடிப்படையில் நாங்கள் இதை செய்து வருகிறோம்..... தவறேனும் சுட்டிகாட்டபட்டால் திருத்திகொல்வோம் இன்ஷா அல்லாஹ்.
அதிரை பைத்துல்மால் வழங்குகின்ற வட்டியில்லா கடன்களில் அதில் உள்ள நிர்வாகிகளைச் சார்ந்த நபர்களுக்கு அதிகமாக வழங்குவதாக மக்கள்களிடேயே ஒரு கருத்து நிலவுகிறது. அதிரையில் உள்ள ஒவ்வொரு தெருவுக்கும் எந்த நபர்களுக்கு பைத்துல்மால் வழங்கியுள்ளது மற்றும் அதனுடைய தற்போதைய நிலை என்ன என்றும் பகிரங்கமாக அறிவிப்பு செய்வார்களா ?
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment