அதிரையில் அடைமழை அடித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தெருக்களில் மழைநீர் ஒட்டத்தோடு நாமும் இரு சக்கரவாகனம் ஒன்றின் மேல் ஏறி அதன் ஓட்டத்தோடு தொடர்ந்தோம். எங்கு சென்றாலும் நிரம்பியே இருக்கும் நீரின் அழகு, அது தேங்கிய தட்டை வடிவில் கடப்பாசி ஊற்றிய தட்டைப் போல் இருந்தது அதிரைத் தெருக்கள்.
செல்லும் வழியில் நண்பர்கள் கேட்டார்கள், "எப்போது எலெக்ஷனில் நின்று ஜெயித்தாய் இப்படி மழை நீர் ஒடும் திசையெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறாயே" என்று,
வேறு என்ன வழமையான புன்னைகையே பதிலாக காட்டிவிட்டு சென்றோம்.
பேருந்து நிலையம் அருகில் சென்றதும்தான் அட! படகில் வரமால் இருந்து விட்டோமே என்று மனம் தவிக்க ஆரம்பித்து விட்டது.
அதனாலென்ன “என்ன காகிதப் படகு செய்து விட்டாப்போச்சு” என்று ஒன்றாக வந்த நண்பர் சொன்னதும்.
மற்றவர் “இதனை தலைவருக்கு சொல்லனும்” என்றார்
வேறு ஒருவரோ “இல்லை துணைத் தலைவருக்கு சொல்லனும்” என்றார்....
நாமோ “நல்லதையே சொல்லுங்கப்பா” என்றும் நகர்ந்து விட்டோம்.
அதிரைபிபிசி நீச்சல்-team
5 பின்னூட்டங்கள்:
ஏற்கனவே உள்ள நோய்கள் பத்தாது என இந்த மழையிலும் புதிய நோய்கள் பரவக்கூடும். அதிராம்பட்டினத்துக்கு எப்போதுதான் விடிவு காலம் என தெரியவில்லை
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது மெயின் ரோடு மற்றும் பஸ் ஸ்டாண்ட் உடைய தற்போதைய நிலை கடந்த கால பெரூராச்சி மற்றும் அரசுகளின் நிர்வாக தன்மையை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. நமது தற்போதைய சேர்மன் இந்நிலையை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்போமாக - இன்ஷா அல்லாஹ.
மறுபடியும் சொல்கிறோம்....சேர்மன் அய்யா எதை முந்தி செய்வார், எதை பிந்தி செய்வார் என்பதை புரிந்துகொள்ள முயற்ச்சியுங்கள்.
சைக்களில் செல்பவர் ஏதோ ஒன்றைப் பார்த்து நின்று, "விசைப்படகு" செய்யலாமா என்று யோசிக்கிறார்.
முதல் படத்தை பார்த்தால் சூரியனும் தாவர இலையும் சேர்ந்து நல்லது செய்யவிடாமல் தடுமாற வைப்பதுப் போல் தெரிகிறதே....
ஒரு வேலை..... மேகமூட்டம் சென்னையிலிருந்து விசா எடுத்து நம்மூருக்கு வந்துவிட்டதா........
நீங்கள் படகு ஒட்டுங்கள் - ஆனால் அதை
சேர்மன் அய்யாவிடம் தேர்தல் (கொடுக்காத) வாக்குறுதி என கேட்டு விடாதீர்கள்.
போட்டோ சொல்லுது நம்ம ஊரின் சகதி,சாரி சேதி
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment