ஒரு நாட்டில் ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும் என்றால் சிறந்த எதிர்க்கட்சி அமைய வேண்டும் என்பார்கள் , அவ்வைகையில் நமதூர் பேரூராட்சியில் தமிழகத்தின் ஆளும் கட்சியே எதிர்கட்சியாக அமைந்திருப்பதின் நன்மை / தீமையை அலசுவதே இப்பதிவின் நோக்கம்
ஆளும் தரப்பினர் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் பொழுது அதை எதிர்க்க வேண்டிய எதிர்கட்சிகள் அதிகார துஸ்பிரயோகம் என்று ஒதுங்குவது வழக்கம் ஆணால் மாநில அரசின் ஆதரவு உள்ள ஆதிமுகவினர் அவ்வாறு ஒதுங்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்
மேலும் முழு திறனுடன் ஆளும் தரப்பினர் மக்கள் விரோத போக்கை எதிர்க்க முடியும் என்றே நம்புகிறேன் இது ஒருபுறம் இருக்க சகோதரர் அஸ்லம் அவர்களின் வெற்றியால் ஆதிமுக தரப்பின் தேர்தல் வாக்குறுதிகள் அம்பேலாகிவிட்டது என்று நினைக்கும் அதிரை மக்களுக்கு ஒரு நற்செய்தியாக வந்தது திரு பிச்சை அவர்கள் துணை சேர்மனாக தேர்ந்தேடுக்கபட்டது ஏறக்குறைய ஆட்சியின் சமபங்கு கிடைத்த திரு பிச்சை அவர்கள் செக்கடி மேட்டில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளார் , அதாவது பாதாள சாக்கடை, பைபர் சாலை, அல் அமீன் பள்ளிக்கு சுமுக தீர்வு மற்றும் முதல்வர் அறிவித்த இலவச திட்டங்கள் ஆக ஒருபக்கம் ஆளும் கட்சியினரை கண்காணிக்கும் பொறுப்பு மறுபக்கம் துணை சேர்மன் என்ற வகையில் மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு என்ற நிலையில் இருக்கும் திரு பிச்சை ஆளும்கட்சியை விட ஒரு படி மேல் உழைக்க வேண்டிய சூழ்நிலையில் சுலபட்டுள்ளர் நம்முடைய துணை சேர்மன் இருப்பினும் கிரிகெட் விளையாட்டில் கூட்டுகுழு முயற்சியால் வெற்றி கிடைத்தாலும் BATSMANகே பரிசும் புகழும் கொடுக்கப்படும் அதை இவ்வாறு ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் “WHAT SO EVER CREDIT GOES TO BATSMAN” அதுபோல் அதிமுகவின் நற்செயல்கள் திமுகவிற்கு சென்றுவிடுமோ என்ற அச்சமும் அதிமுகவிற்கு இருப்பதை அரசியல் வட்டாரங்களில் பேசபடுகிறது
எது எப்படியோ அதிரையில் வளர்ந்துவரும் கட்சியான அதிமுகவை தன் நற்செயல்கள் முலம் மக்களை கவருவதற்கு பின்னி பெடல் எடுப்பாரா அல்லது அரசியல் கல்புணர்ச்சி காரணங்களால் பின்தங்குவரா என்பதை காலம் நமக்கு கட்டாயம் காட்டிகொடுக்கும்.
முகம்மது ரபிக் தாஜ்
முகம்மது ரபிக் தாஜ்
29 பின்னூட்டங்கள்:
சிறப்பான ஓர் ஆய்வு. மத்தியில் மந்திரிகளை கூட்டணியால் பெற்றுள்ள தி மு க வும் சரி மாநிலத்தில் ஆளும் அ இ அ தி மு க வானாலும் சரி மக்கள் பணியாற்றவே வந்துள்ளனர் இங்கே பிச்சை அவர்கள் ஒன்றை தெளிவாக உணர வேண்டும். அ இ அ தி மு க பெரும்பான்மையில் மட்டும் பிச்சை அவர்கள் தன் துணை தலைவர் பதவியை அடையவில்லை. தி மு க எதிர்ப்பாளர்களின் ஆதரவில் கிடைத்த வெற்றி.
ஆகவே ஏனைய சக உறுப்பினர்களின் அபிலாஷைகள் என்ன என்று ஒரு சேர கலந்து ஆராய்ந்து பிச்சை அவர்கள் முடிவு எடுக்க வேண்டும். இன்னும் தன் செல்வாக்கை பலப்படுத்தி எதிர்காலத்தில் மக்கள் பணியாற்ற பதவிகளை அடைய வேண்டுமானால் மக்கள் பிரதிநிதிகளாய் செயல் பட்டு தன் செல்வாக்கால் தன் கட்சியையும் பலப்படுத்தி தன்னையும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நமது பேரூராட்சியில் துணைத்தலைவர் என்பது எதிர்க்கட்சி தலைவர் பதவி அல்ல அடுத்ததலைவர் என்பதின் அறிகுறி
இந்த நிலைமையை ஏற்படுத்தியது யார்?
பழிவாங்கும் நடவடிக்கையை எடுப்பது யார்?
மாநிலத்தை ஆளும் ஆ தி மு க வா?ஊரை ஆளும் தி மு க வா? எதிர் கட்சி எதிரி கட்சியாக மாறாமலும்?ஆளும் கட்சி அணைத்து கட்சியுடனும் சேர்ந்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய அணைத்து நல திட்டங்களும் அணைத்து கட்சிகளும் இணைந்து மக்களுக்கு கிடைக்க பாடுபட வேண்டும்.இதில் யாரும் யாரையும் கட்டுரையாளர் குறிப்பிடுவதுபோல் பழிவாங்கல் நடவடிக்கை நடக்காமல் பார்த்து கொள்வது எல்லாருடைய கடமை ஆகும்?
இந்த கட்டுர்ரை அவசியமற்ற ஒன்று என்றே தோன்றுகிறது....
தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாடு வேண்டுமானால் வேறாக இருந்திருக்கலாம்..இப்போது அசலம் அதிரம்பட்டினத்தின் தலைவராக தேர்ந்துடுக்கப்பட்டுவிட்டார்...அதுவும் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒருவர் எளிதில் நெருங்கக்கூடியவர்..அவருக்கு ஆதரவு அளித்து ஒத்துழைப்பு வழங்குவதே நல்லது...எந்த முடிவும் தலைவர்தான் எடுக்க வேண்டும்...இன்னும் அதிமுக ஆட்சியில் துணைத்தலைவர் பதவிக்கு அவ்வளவாக அதிகாரம் இல்லை..இது தெரிந்தும் பிச்சையை துணை முதல்வர் ரேஞ்சுக்கு வைத்து அவர் என்ன செய்யபோகிறார் என்ற ரீதியில் எழுதுவது ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்றே படுகிறது.
சரியான நேரத்தில் வெளியான கட்டுரை. திரு பிச்சை அஸ்லம் அவர்கலோடு சேர்ந்து செயலாற்ற உறுதியாக இருக்கிறார். ஆனால் சமீத்தில் adirai.in ல் வெளியான ஒலியோட்டத்தில் எல்லா அதிகாரமும் தன்னிடத்தில் மட்டும்தான் இருக்க வேண்டும், அனைத்து மெம்பர்களும் அவரிடம் முரையிட வேண்டும் என்று கட்டளை போல் பேசுகிறார். மற்றும் சங்க தலைவர் இவரிடம் மன்னிப்பு கேட்டதாக சொல்கிறார். ஆனால் அப்்டி எதுவும் நடக்கவில்லை என்று உமர் காக்கா அவர்கள் கூறுகிறார். யார் பொய் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இவர்களிடம் மாட்டிக்கொண்டு அதி்ரை மக்கள் முழிக்கபோகிறார்கள்.
இக்கட்டுரை தேவை தானா?
என்ன தான் சேர்மன் தி மு க வில் இருந்தாலும் அ தி மு க வின் அனுசரணையின்றி எந்த நலதிட்டதையும் செய்ய முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை, அதே நேரத்தில் பிச்சை அவர்கள் அளித்த வாக்குறுதி இங்கே அனைவராலும் நினைத்து பார்க்கவேண்டிய ஒன்று, இறைவன் நாடினால் பிச்சை அவர்களின் மூலமே அல்அமீன் பள்ளிக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் சேர்மன் மற்றும் துணை சேர்மன் இருவருக்கும் இது ஒரு குதிரை பந்தயம் போன்று நலப்பணிகளை யார் அதிகம் செய்கிறாரோ அவர்களுக்கு சாதகமாகத்தான் எதிர்காலம் இருக்கும் என்பது உறுதி.
//இந்த கட்டுர்ரை அவசியமற்ற ஒன்று என்றே தோன்றுகிறது....//
நடுநிலையாக எழுதப்பட்ட இக் கட்டுரையை அவசியமற்றது என்று சொல்லும் நீங்கள் தேர்தல் நேரத்தில் பத்திரிக்கை தர்மத்தை மறந்து ஒருதலைபட்சமாக ஒரு கட்சியை ஆதரித்து பல கட்டுரைகளை இடம் பெற செய்தது மட்டும் அவசியமானதா ?
//இப்போது அசலம் அதிரம்பட்டினத்தின் தலைவராக தேர்ந்துடுக்கப்பட்டுவிட்டார்//
மன்னிக்கவும் சகோதரர் அஸ்லம் அவர்கள் தேர்வு நிலை பேருரட்சியின் தலைவராக தேர்ந்து எடுக்கபட்டுள்ளார் , அதிரம்பட்டினதுக்கு தலைவர் தேர்தல் எதுவும் நடை பெறவில்லை என்பதை தாங்கள் நினைவில் நிறுத்தவேண்டும் அப்படி ஒரு தேர்தலை அரசால் கூட நடத்த முடியாது என்பதே நிதர்சன உண்மை
//எந்த முடிவும் தலைவர்தான் எடுக்க வேண்டும்//
நான் குறிப்பிட்ட பாதாள சாக்கடை, பைபர் சாலை மற்றும் இலவச திட்டங்களை எந்த இடத்தில எப்பொழுது எங்கே என்று மாநில அரசே முடிவு எடுக்க முடியும்
//இன்னும் அதிமுக ஆட்சியில் துணைத்தலைவர் பதவிக்கு அவ்வளவாக அதிகாரம் இல்லை//
அரசியல் சாசனத்தில் இருக்கிறதா இல்லையா என்பதே தாங்கள் பார்க்க வேண்டும்
//இது தெரிந்தும் பிச்சையை துணை முதல்வர் ரேஞ்சுக்கு வைத்து அவர் என்ன செய்யபோகிறார் என்ற ரீதியில் எழுதுவது ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்றே படுகிறது//
யார் முலமாவது எம்மக்களுக்கு நன்மை நடந்துவிட குடாத என்ற எண்ணமே உங்களுக்கு உள்நோக்கமாக தெரிகிறது
சகோ அதிராமி
// சிறப்பான ஓர் ஆய்வு//
நன்றி
மேலும் இப்பதிவை அதிரை பிபிசி தளத்தில் இடம்பெற செய்த நண்பர்களுக்கும் நன்றி
இன்ஷா அல்லாஹ் சாதிக்க வேண்டும்
வாக்காளர் பட்டியளில் பெயர் இல்லாதவர்கள் வரும் 8/11/2011 க்குள் தாங்கள் ஓட்டுப் போடும் வாக்குச்சாவடிக்கு ரேசன் அட்டை நகல் மற்றும் பிறப்புச்சான்று நகல் அல்லது பள்ளி சான்றிதல் நகல் ஒரு போட்டோவுடன் சென்று விண்ணபிக்கவும்.
உண்மை விரும்பி உண்மை வெளிப்பட உமர் காக்கவிடமே கேட்டுவிட்டதாக தெரிகிறது பெரியவர் ஹஜ் செய்தவர் சஙகதின் தலைவர் பொய் சொல்லாமாட்டர்கள் என்றே நினைக்கிறேன்
அதிரை . இன்னில் வந்த பேட்டியில் எதுவாக இருந்தாலும் வார்டு மெம்பர்களிடம் முரையிட சொல்லுஹிரார் இவர் ஊருக்கே பொதுவானவர் அனைத்து மக்களும் வாக்களித்து வெற்றி பெற்றுள்ளதாக அவரே சொல்லுகிறார் அப்ப அவரிடமே மக்கள் முறையிட தான் செய்வார்கள் அப்ப அவர் நடவடிக்கை எடுக்கதான் வேண்டும் வார்டு மெம்பரிடம் போய் சொல்லுங்கள் என்று சொல்லகூடாது வேறு ஆள் வந்தால் நான் அனுமதிக்கமாட்டேன் என்கிறார் வந்தவர் ஏர்புறகரையில் இருந்தா வந்தார் அதிரைக்காரர்தானே வந்தார் சிந்திக்கவும்
//மன்னிக்கவும் சகோதரர் அஸ்லம் அவர்கள் தேர்வு நிலை பேருரட்சியின் தலைவராக தேர்ந்து எடுக்கபட்டுள்ளார் , அதிரம்பட்டினதுக்கு தலைவர் தேர்தல் எதுவும் நடை பெறவில்லை என்பதை தாங்கள் நினைவில் நிறுத்தவேண்டும் அப்படி ஒரு தேர்தலை அரசால் கூட நடத்த முடியாது என்பதே நிதர்சன உண்மை//
பேரூராட்சி தலைவரை தலைவர் என்று சொல்லியதை ஏதோ தேச துரோக குற்றம் போல் சொல்லியிருப்பதிலிருந்தே தெரிகிறது உங்களது உள்நோக்கம்..
//எந்த முடிவும் தலைவர்தான் எடுக்க வேண்டும்//
நான் குறிப்பிட்ட பாதாள சாக்கடை, பைபர் சாலை மற்றும் இலவச திட்டங்களை எந்த இடத்தில எப்பொழுது எங்கே என்று மாநில அரசே முடிவு எடுக்க முடியும்//
அது பேரூராட்சி (போதுமா) தலைவர் மூலம்தான் நிறைவேற்றப்படும்..
//இது தெரிந்தும் பிச்சையை துணை முதல்வர் ரேஞ்சுக்கு வைத்து அவர் என்ன செய்யபோகிறார் என்ற ரீதியில் எழுதுவது ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்றே படுகிறது//
யார் முலமாவது எம்மக்களுக்கு நன்மை நடந்துவிட குடாத என்ற எண்ணமே உங்களுக்கு உள்நோக்கமாக தெரிகிறது//
அதாவது என்னை விடாக்கண்டனாக சித்தரிக்க முயர்ச்சிக்கிறீர்கள்..ஊருக்கு நன்மை ஏற்படவேண்டும் என்ற நோக்கத்தில்தால் கடந்த உள்ளாட்சி தேர்தலில் தகுதியானவர் வரவேண்டும் என்று அவரை ஆதரித்தோம்..அவர் பதவிக்கு வந்தும் - இப்போதுதான் பதவி ஏற்றிருக்கிறார்..அதற்குள் மீண்டும் மீண்டும் குடைச்சல் கொடுப்பதில் இருந்து யாருக்கு அந்த உள்நோக்கம் என்று அல்லாஹ் அறிவான்..
நானும் ஊர்க்காரன்தான்..ஊருக்கு நன்மை நடந்துவிடக்கூடாது என்று நினைப்பவன் மனிதனல்ல...முதலில் உங்கள் குறுகிய எண்ணத்தை மாற்றுங்கள்..
சகோதரர் அஸ்லம் அவர்களுக்கு சம்பந்தம் இல்லாத இந்த பதிவை அவருக்கு எதிராக அழகான முறையில் திரிப்பிவிட்டுள்ளிர் , பலே பத்திரிக்கையாளர் என்பதை மிண்டும் நிருபித்துள்ளிர்
//பேரூராட்சி தலைவரை தலைவர் என்று சொல்லியதை//
பேரூராட்சி தலைவரை தலைவர் என்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ஆனால் அதிரம்பட்டினதுக்கே தலைவர் என்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று
சமிபத்தில் வெற்றி பெற்ற ஜெயலலித்தாவை தமிழகத்தின் /தமிழினத்தின் தலைவர் என்றால் நிங்களோ அல்லது திமு கழகமோ ஒத்துகொல்விர்களா அல்லது தமிழகத்தின் முதல்வர் என்றால் ஒத்துகொல்விர்களா , அதைவிடுங்க அதிரம்பட்டினத்தின் திமுக தலைவராக சேர்மன் அவர்களை சொன்னால் அறிவலயமே ஒத்துக்காது ஆக நடைமுறைக்கு ஒவ்வாத விசயத்தைதான் சொன்னேனே தவிர வேறு எந்த உள்நோக்கமும் இல்லை
//நான் குறிப்பிட்ட பாதாள சாக்கடை, பைபர் சாலை மற்றும் இலவச திட்டங்களை எந்த இடத்தில எப்பொழுது எங்கே என்று மாநில அரசே முடிவு எடுக்க முடியும்//
//அது பேரூராட்சி (போதுமா) தலைவர் மூலம்தான் நிறைவேற்றப்படும்//
சேர்மன் சிங்கப்பூர் சென்று விட்டால் துணை சேர்மனாலும் முடியும் .அதுவல்ல என்னுடைய வாதம்,ஆளும் கட்சியாகிய நாங்கள் வெற்றி பெற்றால் இதுபோன்ற மாநில அரசின் திட்டங்களை எளிதாக கொண்டுவரமுடியும் என்றார் திரு பிச்சை , அதை இப்பொழுதும் கொண்டு வரமுடியும் என்றுதான் நான் என் பதிவில் சொல்லி இருக்கிறேன்
//இப்போதுதான் பதவி ஏற்றிருக்கிறார்..அதற்குள் மீண்டும் மீண்டும் குடைச்சல் கொடுப்பதில்//
யார் எந்தவிதத்தில் எப்படி எங்கே குடைச்சல் கொடுத்தார்கள் என்பதை தெளிவாக சொல்லுங்கள்
சகோதரர் அஸ்லம் அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத பதிவு வந்தாலும் ,அவருக்கு சம்பந்தம்படுத்தி , அதிமுக என்று வாய் திரபவர்களை எல்லாம் அவருக்கு எதிரியாக்கி , நான் மட்டும் தான் அஸ்லம் அவர்களின் இணைய கொ.ப .செ என்று சொல்லும் உங்களுடைய குறுகிய மனதைத்தான் மாத்தி கொள்ளவேண்டும்
//பேரூராட்சி தலைவரை தலைவர் என்று சொல்லியதை//
பேரூராட்சி தலைவரை தலைவர் என்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ஆனால் அதிரம்பட்டினதுக்கே தலைவர் என்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று//
அப்படி என்றால் அவர் எந்த ஊருக்கு (பேரூராட்சி) தலைவராக இருக்கிறார்?
//சேர்மன் சிங்கப்பூர் சென்று விட்டால் துணை சேர்மனாலும் முடியும்//
இதிலும் உங்களது குதர்க்கம் அப்பட்டமாக வெளிப்படுகிறது..சேர்மன் ஆகக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருண்டீர்கள்..இப்போது அதையும் மீறி அல்லாஹ்வின் உதவியால் அவர் சேர்மன் ஆகிவிட்டார்..இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு..இது குடைச்சல் இல்லையா? (யார் எந்தவிதத்தில் எப்படி எங்கே குடைச்சல் கொடுத்தார்கள் என்பதை தெளிவாக சொல்லுங்கள்)
//சகோதரர் அஸ்லம் அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத பதிவு வந்தாலும் ,அவருக்கு சம்பந்தம்படுத்தி , அதிமுக என்று வாய் திரபவர்களை எல்லாம் அவருக்கு எதிரியாக்கி , நான் மட்டும் தான் அஸ்லம் அவர்களின் இணைய கொ.ப .செ என்று சொல்லும் உங்களுடைய குறுகிய மனதைத்தான் மாத்தி கொள்ளவேண்டும்//
அப்படியென்றால் நீங்கள் அதிமுக என்று ஒத்துக்கொள்கிறீர்களா? ஒரு பதிவருக்கு விமர்சனத்தை தாங்கவேண்டிய தன்மை வேண்டும்..அதை விடுத்து உங்கள் பதிவினை விமர்சனம் செய்வதாலேயே அவருக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று அர்த்தமல்ல...அஸ்லம் ஒரு சேர்மனாக தவறு செய்தால் அதையும் தட்டிக்கேட்போம்.இதை நான் அவரிடமே சொல்லியும் விட்டேன்..இதை அப்போது என்கூட இருந்த நண்பர்கள் மற்றும் அல்லாஹ் அறிவான்..
கேள்விக்கு பதில் சொல்லுவதில் இரண்டுவகை உண்டு
ஒன்று நேரடியாக பதில் சொல்லுவது
இரண்டாவது கேட்ட கேள்வியை விழுங்கிவிட்டு குதர்க்கமாக கேட்பது
நீங்கள் இரண்டாம் வகையை சார்ந்தவர் என்று நினைக்கிறன்
தமிழகத்தின் /தமிழினத்தின் தலைவராக ஜெயலலிதாவை நீங்கள் ஏற்றுகொல்விர்களா அதை போல் திமுகழமும் ஏற்றுகொள்ளும?
இந்த கேள்விக்கான உங்களுடைய பதிலே இவ்விவகரதுக்கு முற்று புள்ளி
//அப்படி என்றால் அவர் எந்த ஊருக்கு (பேரூராட்சி) தலைவராக இருக்கிறார்?//
இதில் என்ன சந்தேகம் அவர் எந்த உருக்கு பேரூராட்சி தலைவராக தேர்ந்து எடுக்க பட்டரோ அந்த ஊருக்குதான்
////சேர்மன் சிங்கப்பூர் சென்று விட்டால் துணை சேர்மனாலும் முடியும்//
இதிலும் உங்களது குதர்க்கம் அப்பட்டமாக வெளிப்படுகிறது..//
இப்போ என்னத்த சொல்லிட்டேன்னு காலில் சுடுதன்னிரை உத்துனமதிரி குதிரிங்க. சேர்மனுக்கு மட்டும்தான் முடிவு எடுக்கிற அதிகாரம் இருக்குதுன்னு சொன்னிங்க , அவரு சிங்கபூர் சென்றுவிட்டால் துணை சேர்மனுக்கும் அதிகாரம் இருக்கிறது என்று சொன்னேன், சேர்மன் தன் சொந்த காரணத்துக்காக விடுப்பு எடுக்கும் நிலையில் , மாற்று தலைமக்குதனே துணை சேர்மன் என்கிற பதவி ?
//சேர்மன் ஆகக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருண்டீர்கள்//
நான் மக்களுக்காக பத்திரிக்கை நடத்துகிறேன் என்ற பெயரில் எந்த கட்சிக்கும் காவடி எடுக்கவில்லையே , இன்னும் சொல்லப்போனால் எங்கள் குடும்பத்தார்கள் அதிகமாக சகோதரர் அஸ்லம் அவர்களுக்குதான் ஒட்டு போட்டு இருக்கிறார்கள்
//அப்படியென்றால் நீங்கள் அதிமுக என்று ஒத்துக்கொள்கிறீர்களா//
அல்லாஹு மிது ஆணையாக இது வரை எந்த கட்சியுளும் உறுப்பினர் ஆகவில்லை , அனா பிறகு சொல்லுகிறேன்
//உங்கள் பதிவினை விமர்சனம் செய்வதாலேயே//
நீங்கள் என் பதிவை விமர்சனம் செய்யவில்லை மாறாக அஸ்லம் அவர்களுக்கு எதிராக சித்தரிக்க முற்படுகிரிர்கள்
//அஸ்லம் ஒரு சேர்மனாக தவறு செய்தால் அதையும் தட்டிக்கேட்போம்.இதை நான் அவரிடமே சொல்லியும் விட்டேன்..//
நீங்க என்ன பொய்யா சொல்லபோறிங்க !!!
//இரண்டாவது கேட்ட கேள்வியை விழுங்கிவிட்டு குதர்க்கமாக கேட்பது
நீங்கள் இரண்டாம் வகையை சார்ந்தவர் என்று நினைக்கிறன்
தமிழகத்தின் /தமிழினத்தின் தலைவராக ஜெயலலிதாவை நீங்கள் ஏற்றுகொல்விர்களா அதை போல் திமுகழமும் ஏற்றுகொள்ளும?
இந்த கேள்விக்கான உங்களுடைய பதிலே இவ்விவகரதுக்கு முற்று புள்ளி//
இதில் என்ன சந்தேகம்..பெருவாரியான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இன்று தமிழகத்தின் முதல் அமைச்சர் என்பதால் சந்தேகமில்லாமல் அவர் தமிழகத்தின் தலைவிதான்..
தமிழினத்தின் தலைவி என்று தீர்மானிப்பது நானல்ல..அதற்கென்று பல அறிவுஜீவிகள் இருக்கிறார்கள்...அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி என்னிடம் வந்ததற்கு காரணம் நீங்கள் தடுமாற்றதிலோ அல்லது ஆத்திரத்திலோ இருகிறீர்கள் என்பதுதான்..
//அப்படி என்றால் அவர் எந்த ஊருக்கு (பேரூராட்சி) தலைவராக இருக்கிறார்?//
இதில் என்ன சந்தேகம் அவர் எந்த உருக்கு பேரூராட்சி தலைவராக தேர்ந்து எடுக்க பட்டரோ அந்த ஊருக்குதான்//
இதற்க்கு பதில் உங்களுடைய பதிலிலே இருக்கிறது.. (கேள்விக்கு பதில் சொல்லுவதில் இரண்டுவகை உண்டு
ஒன்று நேரடியாக பதில் சொல்லுவது
இரண்டாவது கேட்ட கேள்வியை விழுங்கிவிட்டு குதர்க்கமாக கேட்பது
நீங்கள் இரண்டாம் வகையை சார்ந்தவர் என்று நினைக்கிறன்)
//உங்கள் பதிவினை விமர்சனம் செய்வதாலேயே//
நீங்கள் என் பதிவை விமர்சனம் செய்யவில்லை மாறாக அஸ்லம் அவர்களுக்கு எதிராக சித்தரிக்க முற்படுகிரிர்கள்//
இந்த பதிலுக்கு யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது..முதலில் நீங்கள் யாரென்றே எனக்கு தெரியாது..அல்லது உங்களை அஸ்லத்தின் எதிரி என்று சித்தரிப்பதால் எனக்கு எந்த லாபமும் இல்லை.... நீங்கள் அஸ்லத்தின் ஆதரவாளர் என்று அவரிடம் கூறிவிடுகிறேன்..நீங்கள் சொன்ன கீழ்க்கண்ட பதிலை அவரிடம் தெரிவித்து விடுகிறேன்..ஓகயா?
//இன்னும் சொல்லப்போனால் எங்கள் குடும்பத்தார்கள் அதிகமாக சகோதரர் அஸ்லம் அவர்களுக்குதான் ஒட்டு போட்டு இருக்கிறார்கள்//
////சேர்மன் சிங்கப்பூர் சென்று விட்டால் துணை சேர்மனாலும் முடியும்//
இதிலும் உங்களது குதர்க்கம் அப்பட்டமாக வெளிப்படுகிறது..//
இப்போ என்னத்த சொல்லிட்டேன்னு காலில் சுடுதன்னிரை உத்துனமதிரி குதிரிங்க. சேர்மனுக்கு மட்டும்தான் முடிவு எடுக்கிற அதிகாரம் இருக்குதுன்னு சொன்னிங்க , அவரு சிங்கபூர் சென்றுவிட்டால் துணை சேர்மனுக்கும் அதிகாரம் இருக்கிறது என்று சொன்னேன், சேர்மன் தன் சொந்த காரணத்துக்காக விடுப்பு எடுக்கும் நிலையில் , மாற்று தலைமக்குதனே துணை சேர்மன் என்கிற பதவி ?//
ஓஹோ..அப்போ சேர்மன் லீவ்ல போனாதான் துணை சேர்மனுக்கு வேலையா? இந்த பதவி கேடச்ச்சதுக்கே உங்களுக்கு இவ்வளவு சந்தோசமா?
ஏனுங்க ! பிச்சை அவர்களை இப்படி ஆளாளுக்கு பிச்சு பிச்சு வைக்கிறீங்க !
கொஞ்சம் விட்டுப் புடிச்சு என்ன நடக்குத்துன்னு காத்திருந்தால் என்ன ?
பேரூராட்சியின் வேலை நேரம் என்னங்க ? யாராவது கேட்டுச் சொல்லுங்களேன் ! :)
///நீங்கள் ஏற்றுகொல்விர்களா அதை போல் திமுகழமும் ஏற்றுகொள்ளும?///
ஒரு பாதி கேள்விக்கு பதில் சொல்லிடிங்க மறுபாதியை விளுங்கிவிட்டிரே (திமுகழமும் ஏற்றுகொள்ளும?)
//சந்தேகமில்லாமல் அவர் தமிழகத்தின் தலைவிதான்..//
இதை அப்படியே அஸ்லம் அவர்களிடம் நான் உங்களை அதிரம்பட்டினத்தின் தலைவர் என்று சொல்லிவிட்டேன் அதனால் நீங்கள் ஜெயலளித்தவை பற்றி பேச நேர்ந்தால் தமிழகத்தின் தலைவி என்று அழையுங்கள் என்று சொல்லிடபோரிங்க அப்போறோம் உங்களுடைய இனைய கொ ப செ பதவி பரிபோகிவிட போகிறது
//நீங்கள் அஸ்லத்தின் ஆதரவாளர் என்று அவரிடம் கூறிவிடுகிறேன்..//
கட்சிக்கு உறுப்பினர் சேர்ப்பதை விட்டுட்டு இப்படி கொஞ்சம் சிந்தியுங்கள்
நடுநிலையாக எழுதப்பட்ட இந்த பதிவிக்கும் அஸ்லம் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் ?
தேவை இல்லாமல் அஸ்லம் அவர்களூடைய பெயரை இப்பதிவுடன் கோர்த்துவிட்டது சரிதானா ?
அதிமுக என்று எழுதிவிட்டாலே அவர்களுக்கு அதிமுக முத்திரை குத்துவது சரிதானா ?
//அப்போ சேர்மன் லீவ்ல போனாதான் துணை சேர்மனுக்கு வேலையா?//
சேர்மனுக்கு மட்டும்தான் முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கிறது என்று சொன்னிரிகள் ...
அரசியல் சாசனம் அப்படி குறைவில்லை என்றும் சொன்னேன்
அதற்கு உதாரணமாக சேர்மன் அவர்கள் சிங்கப்பூர் சென்றுவிட்டால் துணை சேர்மன் முடிவு எடுக்க முடியும் என்று சொன்னேன்...
அவரால் மட்டும்தான் முடிவு எடுக்க முடியும் என்று சொன்ன நீங்க மிண்டும் ஏன் அதை வலியுறுத்தி சொல்லவில்லை ???
மேலே அஸ்லம் அவர்களின் ஆதரவலான் என்று நீங்கள் சொன்னிர்கள் (//நீங்கள் அஸ்லத்தின் ஆதரவாளர் என்று அவரிடம் கூறிவிடுகிறேன்)
கிலே
(///இந்த பதவி கேடச்ச்சதுக்கே உங்களுக்கு இவ்வளவு சந்தோசமா?//)
மிண்டும் அதிமுக அனுதாபி என்று முத்திரை குத்த முற்படுகிரிர்கள்
தடுமாற்றம் எனக்க உங்களுக்க ...... ?
சகோ அபு இபுராஹிம்
//கொஞ்சம் விட்டுப் புடிச்சு என்ன நடக்குத்துன்னு காத்திருந்தால் என்ன//
சரியாய் சொன்னிங்க , இதைதான் நானும் இவ்வாறு சொல்லி இருக்கிறேன்
***எது எப்படியோ அதிரையில் வளர்ந்துவரும் கட்சியான அதிமுகவை தன் நற்செயல்கள் முலம் மக்களை கவருவதற்கு பின்னி பெடல் எடுப்பாரா அல்லது அரசியல் கல்புணர்ச்சி காரணங்களால் பின்தங்குவரா என்பதை காலம் நமக்கு கட்டாயம் காட்டிகொடுக்கும்***.
nizar ahamed and rafeek,
யாருக்காகவோ ஏன் உங்களுக்குள் சண்டையிட்டுகொல்கிரீர்கள், இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் அவர்களின் பொறுப்பு பற்றி தெளிவாக வகுதளிதுள்ளது இதை பற்றி பதிவியேற்ற தலைவரோ துணை தலைவரோ கவலைபடாத நிலையில் உங்களுக்குள் ஏன் இவ்வளவு சச்சரவு
///நீங்கள் ஏற்றுகொல்விர்களா அதை போல் திமுகழமும் ஏற்றுகொள்ளும?///
ஒரு பாதி கேள்விக்கு பதில் சொல்லிடிங்க மறுபாதியை விளுங்கிவிட்டிரே (திமுகழமும் ஏற்றுகொள்ளும?)//
இதற்க்கு என்ன சொல்வது? நான் என்ன கருணாநிதியா?
நீங்கள் சொல்வதை விடாப்பிடியாக வைத்துக்கொண்டு அர்த்தமற்ற கேள்விகளை எழுப்பி உங்களது தரப்பை நியாயப்படுத்த முனைகிறீர்கள்..
இதற்குமேல் இந்த விவாதத்தை தொடர்வதால் எந்த அர்த்தமும் இல்லை...
கீழ்க்கண்ட பின்னூட்டங்களே உங்களுக்கு நல்ல பதிலாக இருக்கும்
//ஏன்யா இந்த அக்கப்போர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு உன் நேரத்தை வீணடிக்கிறாய்?
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த அக்கப்போர்களை எழுதியவனை யாரென உனக்குத் தெரியாது; உன்னைத் தெரியும் அவனுக்கு!
தவிர, அ.பே.த.வுக்கு படை, பட்டாளமெல்லாம் இருக்கிறது; அவனுக்கும் வாயிருக்கிறது பதிலளிக்க!
உன் பொன்னான நேரங்களை ஆக்கப்பூர்வமான வழிகளில் செலவிடவும்.//
//nizar ahamed and rafeek,
யாருக்காகவோ ஏன் உங்களுக்குள் சண்டையிட்டுகொல்கிரீர்கள், இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் அவர்களின் பொறுப்பு பற்றி தெளிவாக வகுதளிதுள்ளது இதை பற்றி பதிவியேற்ற தலைவரோ துணை தலைவரோ கவலைபடாத நிலையில் உங்களுக்குள் ஏன் இவ்வளவு சச்சரவு//
//இதற்க்கு என்ன சொல்வது? நான் என்ன கருணாநிதியா?//
உலகம் ஏற்று கொண்ட மரபு போல் சொல்லிவிட்டு ...மற்றவர்கள் இதை ஏற்று கொள்வார்களா என்று கேட்டவுடன் நான் சொல்லியது என் சொந்த கருத்து என்பது போல் ஜாக வாங்கிவிடுவதையே வழக்கமாக வைத்துள்ளிர்கள்
////ஏன்யா இந்த அக்கப்போர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு உன் நேரத்தை வீணடிக்கிறாய்?
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த அக்கப்போர்களை எழுதியவனை யாரென உனக்குத் தெரியாது; உன்னைத் தெரியும் அவனுக்கு!
தவிர, அ.பே.த.வுக்கு படை, பட்டாளமெல்லாம் இருக்கிறது; அவனுக்கும் வாயிருக்கிறது பதிலளிக்க!
உன் பொன்னான நேரங்களை ஆக்கப்பூர்வமான வழிகளில் செலவிடவும்.////
இறைவன் மீது ஆணையாக நீங்கள் யார் என்று எனக்கும் தெரியாது இருப்பினும் உங்களிடம் தன்மையாகவே (மரியாதையுடன் )என்னுடைய கருத்துக்களை பகிரிந்து கொண்டேன்
யாரோ எழுதிய பின்னுட்டத்தை மேற்கோள் காட்டி எம்மை ஒருமையில் பேசியதுதான் நீங்கள் கற்று கொண்ட நாகரிகமா ?
எதிர்கருத்துகளை வைக்கும் பொழுது நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து சில ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் வருவது இயல்பு
ஆனால் நாகரிகமற்ற முறையில் உங்களை ஒருமையில் என்றுமே நான் எழுதியது இல்லை என்பதை நினைவில் நிறுத்துங்கள்
நான் பிடித்த முயலுக்கு முன்று கால் என்று சொல்பவர்கள் சிலர் உண்டு , அதற்கு சரியான உதாரணமாக ஜெயலளித்தவை சொல்லலாம்
சமிபத்தில் அண்ணா நுற்றாண்டு நுலகத்தை குழந்தை நல காப்பக மையமாக மாற்ற போவதாக அறிவித்தார் . அதை எதிர்த்து அறிக்கைவிடுவதர்க்கு பதிலாக திமுக தலைவர் கலைஞர் "தன்மானம் உள்ள தமிழர்களின் முடிவிக்கே விட்டுவிடுவதாக சொன்னார் "
ஏனெனில் அவருக்கு நன்றாகவே தெரியும் அறிக்கையோ விளக்கமோ கொடுத்தல் ஜெயலலித்தாவின் முடிவை மாற்ற முடியாது
அதை போல் அதிரையில் நிசார் அகமது அவர்களை சொல்லலாம்
ஆக நானும் நடுநிலையான அதிரை பிபிசி வாசகர்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்
****நடுநிலையாக எழுதப்பட்ட இந்த பதிவிக்கும் அஸ்லம் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் ?
தேவை இல்லாமல் அஸ்லம் அவர்களூடைய பெயரை இப்பதிவுடன் கோர்த்துவிட்டது சரிதானா ?
அதிமுக என்று எழுதிவிட்டாலே அவர்களுக்கு அதிமுக முத்திரை குத்துவது சரிதானா ?****
There is no limit to your arguments. Thsi is how we keep wasting our valuable time. Just read from the top of the. Log until all the posts. There is nothing valuable in them.
//எதிர்கருத்துகளை வைக்கும் பொழுது நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து சில ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் வருவது இயல்பு
ஆனால் நாகரிகமற்ற முறையில் உங்களை ஒருமையில் என்றுமே நான் எழுதியது இல்லை என்பதை நினைவில் நிறுத்துங்கள்//
இந்த தவறு அறியாமல் ஏற்ப்பட்டதுதான்..அது என்னையும் சேர்த்து எழுதி இருந்ததால் கவனிக்காமல் விட்டுவிட்டேன்..தவறுக்கு வருந்துகிறேன்..
//இந்த தவறு அறியாமல் ஏற்ப்பட்டதுதான்..அது என்னையும் சேர்த்து எழுதி இருந்ததால் கவனிக்காமல் விட்டுவிட்டேன்..தவறுக்கு வருந்துகிறேன்..//
ஒரு கருத்தை மாற்று கருத்தால்தான் வெல்ல முடியும் என்பது சான்றோர் சொல்
அச்சான்றோர் சொல் தோல்வியுற்றாலும் வெற்றிபெற்றாலும் நம்மிடையே சகோதரத்துவம் என்றுமே தோல்வியுற கூடாது
அவ்வகையில் தவறை சுட்டிக்காட்டும்போது அத்தவருக்காக வருந்துவதும் சகோதரத்துவத்தின் வெற்றியே
வஸ்ஸலாம்
I strongly support the comment of shahul hameed. It's critical war among Rafeek & nizar, I don't know what they find in it.... It's my humble request to adiraibbc pls conclude the topic, and instruct the guys to stop the feedbacks sorry criticism.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment