அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Sunday, November 13, 2011

தீ விபத்தில் சேதம் அடைந்த குடும்பங்களுக்கு TNTJ நிதி உதவி


அதிராம்பட்டினத்தில் கடந்த 10.11.2011 வியாழக்கிழமை மதியம் 1:00 மணி அளவில் கீழத்தெரு (புதுக்குடி நெசவுத்தெரு)வில் நடந்த தீ விபத்தால் மூன்று வீடுகள் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. தீ விபத்தில் சேதம் அடைந்த  குடும்பங்களுக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இந்த வருட  ஹஜ்ஜிப் பெருநாளில் பெறப்பட்ட குர்பானி தோல்கள் மூலம் கிடைத்த பணத்தில் இருந்து மூன்று குடும்பங்களுக்கும் தலா 5000  ரூபாய் விதம் 15000 ரூபாய்  அதிரை   கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்





8 பின்னூட்டங்கள்:

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வலது கையில் உதவி செய்வது
இடது கைக்கு தெரியக்கூடாது - என்பது தெரியாதா.....

YASEEN said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பெருநாள் அன்றும் அதனை தொடர்ந்து மூன்று நாட்களும் குர்பானி கொடுப்பவர் களிடம் tntj தோல் வசூல் செய்தது அதிரை யில் உள்ள மற்ற அமைப்புகளும் போட்டி போட்டுக்கொண்டு தோல் வசூல் செய்தார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் பணத்தை என்ன செலவு செய்தார்கள் என்று தெரியவில்லை
அதிரை TNTJ செய்ததை போல் மற்ற அமைப்புகளும் முன்வரும்மா பொறுத்திருந்து பார்ப்போம்

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்’ (அல்-குர்ஆன் 5:32)

M.I.அப்துல் ஜப்பார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தர்மங்களை மறைமுகமாகவும், வெளி்ப்படையாகவும் செய்யலாம். த த ஜ வழங்கிய பணம் த த ஜ நிர்வாகிகளின் பணம் அல்ல. பெருநாளைக்கு முன்பு மக்களிடம் எதை சொல்லி தோல்களை வசூல் செய்தார்களோ அதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக வெளிப்படையாக செய்வதில் தவறு ஏதும் இல்லை.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அப்பப்பா....போதும் போதும்...
இந்த பைப்படி சண்டைய 20 வருஷமா பார்த்து பார்த்து போரடிச்சு போச்சு.

கண்ணுங்களா..... இப்படியெல்லாம் நீங்க சண்டப்போட்டிங்கன்னா அடுத்த தடவ இந்த ஏரியா பக்கமே வரமுடியாது....

தடங்கலுக்கு வருந்துகிறோம்

இல்யாஸ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

TNTJக்கு பாராட்டுக்கள்

M.I.அப்துல் ஜப்பார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நான் சொன்ன பதில் துக்ளக் நியூஸ் உங்களுக்குதான். யாசீன்க்கு அல்ல

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகரம் நீட்டும் அனைவரையும் பாராட்டியே ஆகவேண்டும் அதே நேரத்தில் சந்தடி சாக்கில் அடுத்த இயக்கத்தை சீண்டுவது முறையல்ல, சம்பத்தப்பட்ட நபர் மற்ற இயக்கத்தவரின் கணக்கு வழக்குகளை பார்க்க விரும்பினால் அந்த இயக்க நிர்வாகிகளை முறையிட்டால் சர்ச்சையின்றி சகோதரத்துவம் பேணலாம்..... நாங்கள் நோட்டீஸ் அடித்து ஒட்டி விட்டோம் அனைவரும் எங்களை போன்று நோட்டீஸ் அடித்துதான் ஆகா வேண்டும் என்றுரைப்பது தவறு என்பது என்னுடைய பொதுப்படையான கருத்து.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.