அதிரையின் எச்சூழலையும் அலசி ஆராயும் அதிரைபிபிசி ஆராவாரமாக பெய்து கொண்டிருந்த தொடர் மழையின் தாக்கத்தையும், அதன் சூழலையும் அலசி ஆராய புறப்பட்டது அதன் இளம்படை. கொட்டும் மழையை அள்ளி வந்திடலாம் என்று சென்றவர்களுக்கு அல்லாஹ்வின் அருட்கொடை மழைக்கு அளவுகோல் வைத்து அளந்து சொல்லும் ஓர் ஆராய்ச்சி மையம் ஒன்று கண்ணில் பட்டது.
அங்கே ! ஓர் இனிமையான பெண் அலுவலகப் பொறுப்பாளர் திருமதி சின்னத்தாய் Msc., B.Ed. இவர், முன்னாள் பள்ளி ஆசிரியை, இந்நாள் அதிரை வானிலை கண்கானிப்பு மையத்தின் அலுவலக பொறுப்பாளராக தன்னடக்கத்துடன் எங்களை வரவேற்று, அவர்களுக்கே உரிய ஆசிரியர் பணியின் அற்புதத்தால் அங்கே பயிலும் மாணாக்களாக சென்ற எங்களுக்கு விளக்கிய விதம் அருமை.
வானத்தை அன்னாந்து பார்த்துக் கொண்டு மழை வருமா? வந்தால் பள்ளிக்கூடங்கள் விடுமுறை விடுமா? என்ற காத்திருக்கும் மாணவர்களைப் போல் நாமும் அங்கிருந்த அனைத்து ஆராய்ச்சி பயண்பாட்டுச் சாதனங்களை பார்த்ததும் கேள்விகள் கேட்டோம், ஆச்சர்யப்பட்டோம் இதுநாள் வரை அதிரையில் இப்படியான மையம் இருப்பதை எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் ?
இந்த ஆராய்ச்சி மையத்தின் தொடர் பங்களிப்புளாக, ஆகாய மார்க்கத்திர்க்கும், தரை வழி மற்றும் கடல் வழித் தடங்களுக்கும் எந்த அளவு பயன்படுகிறது என்பதனை திருமதி சின்னத்தாய் அவர்கள் தெளிவான பாடம் எடுத்தார்கள்.
அட ! அடுத்த ஆவணப்படம் எடுத்திட வின்வெளிக்கே சொன்று விட வேண்டியதுதானே என்று கேட்கிறீர்களா ? அந்த நாட்களும் வெகுதொலைவில் இல்லை...
அல்லாஹ் நாடினால் அதுவும் நிகழும் இன்ஷா அல்லாஹ் !
- அதிரைBBC குழு

17 பின்னூட்டங்கள்:
இத்தனை விசயங்கள் அங்கே இருக்கின்றதா? ஆச்சர்யமாக உள்ளது.
Really Interesting... please go on exploring in matter like this
இதத்தான் எதிர்பார்த்தேன் !
ஆவணப்படங்களில் முத்திரை பதிக்க வேண்டும் இதேபோல்... பயனுள்ளவைகள் தொடர வேண்டும்.
கலக்குறீங்களப்பா!!!
அருமை, அற்புதம், அதிரை பி பி சியின் மற்றுமொரு மைல்கல், எவரும் சீண்டாத ஒரு துறை நமதூரில் அதுவும் இத்தனை தொழில்நுட்ப வசதியுடன், இதுவரை அதிரையின் வானிலை ஆய்வு மையத்தின் வானிலை சதிவிகிதத்தை ஹிந்து நாளிதழில் தான் கண்டுல்லோமே தவிர நேரில் சென்று பார்க்க யாரும் முயற்சிக்காத இந்த தருணத்தில் அதிரை பி பி சி யின் ஆய்வு அற்புதம் - விளக்கமிலத்த திருமதி சின்னதாயிற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
பயனுள்ள சாதனம் பல காலமாக நம்மூரில் இருக்கிறது. அதை முழுமையாக பயன்படுத்தி தினமும் அவ்வப்போது தகவல்களை பெற்று மணி வாரியாக லன்டன் BBC போல, அதிரை BBC யும் பதிவு செய்தால்
( பெருநாள் தொழுகை திடலில் நடத்துவதா,
கால்பந்து நிகழ்ச்சி முடிவெடுக்க,
கையில் குடை எடுத்துச் செல்லனுமா,
கட்டுமானம் போன்ற)
பல்வேறு திட்டமிடல்களுக்கு வசதியாக இருக்கும்.
அதிரை BBC செய்யுமா? ,
அதிரையின் வானிலை ஆய்வு மையத்தின் இத்தனை விசயங்கள் அங்கே இருக்கின்றதா? அதிரை பி பி சிக்கு வாழ்த்துக்கள்
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் பார்த்த இடம். மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்த இடம். ஆவணப்படமாகத் தந்தமை அழகு. நன் முயற்சி. வாழ்த்துகள்!
மின்னஞ்சல் வழி கருத்து
அதிரை வானிலை மையம் !
ஓர் இனிய தகவல், அதிராம்பட்டினம் அகர வரிசையில் மற்ற விஷயங்களில் அதிரை முன்னிலை வகிகிறதோ இல்லையோ , THE HINDU பத்திரிகையில் தினமும் WHEATHER FORCAST பகுதியில் தினமும் Adirampattinam முதலாவதாக மழையின் அளவை குறிப்பிடுவார்கள் . அதனை பார்க்க என்றும் தவறியதில்லை. அதற்கு காரணம் ,அதிராம்பட்டினம் என்ற பெயரை பார்ப்பதற்காக , அடுத்தது அதிரையில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்பதை அறிவதற்காக. ஏறக்குறைய 35 வருடங்களாக தொடர்ந்து பார்த்து வருகிறேன், ஆனால் இன்றுதான் அந்த தகவல் எங்கிருந்து வருகிறது என்பதை அதிரை மக்களின் சிந்தனைக்கு வெளிபடுத்திய அதிரை bbc மனதார பாராட்டலாம் !
அப்துல் ரஜாக்
முதலில் இந்த பதிவை பதிந்த சகோதரருக்கும், போட்டோ எடுத்த சகோதரருக்கும் என் நன்றி. ஆறு வருடத்துக்கு முன் நான் ஊர் வந்த போது நானும் சகோதார் சாகுல் இருவரும் போய் இந்த இடத்தை படம் எடுத்தோம். அந்த படத்தை எங்கு தொலைத்தேன் என்று தெரியாமல் தேடிக்கொண்டிருந்த போது இந்த பதிவை பார்க்க நேர்ந்தது.
அந்த பழைய கட்டிடம், என் மனதை விட்டு அகழாத இடம் பிடித்திருக்கிறது
இந்த இடமே ஒரு மனதுக்கு அமைதி தரும் இடம்
படங்கள் அழகாக எடுக்கப்பட்டுள்ளது படம் எடுத்தவருக்கு வாழ்த்துக்க
அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்
அருமையான ஆவணப்படம். பயனுள்ள காணொளி. அதிரை பிபிசி குழுவிற்கு நன்றி!
ஆவணப்படம் எடுக்க அநேகமாக அதி நவீன சாதனங்களை பயன்படுத்தியுல்லீரோ ? மிகவும் தெளிவாக இருக்கிறது, மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
நல்ல பதிவு
சின்னத்தாயி....அவர்களே
எல்லோரும் உயரப்பறக்க ஆசைப்படுவார்கள்.
அனால் நீங்கள் உறங்குவதும் நடுவானில்தான்.
நாங்கள் அறுவடை செய்வதை விட
உங்களின் அறிவிப்புதான் எங்களுக்கு முக்கியம்...
காயப்போட்ட நெல்லுக்கு - நீங்கள்தான்
நெருங்கிய தோழி...
விவசாயிகளின் வியர்வையை துடைக்கும்
விவரமான வித்தகி....
சின்னத்தாயி எங்களின் ஊர்தோழி...
சிறிய + தாய் = சின்னதாய்
(மன்னிக்கணும் ஒரு சின்ன சந்தேகம்.....ஆமா நீங்க காயப்போட்ட துணிமணிகளே யார் மழை வந்தா எடுப்பா...... அப்படியும் நனைஞ்சாலும் நிறைய ஆண்டனா இருக்குங்குறீங்களா... )
நமதூர் அதிரையில் கடந்த வருடம் 2010ல் பெய்த மழை 160 செ.மீ (நமதூரின் சராசரி மழையளவு வருடத்திற்கு 125 செ.மீ). ஆனால் இந்த வருடமோ இன்று (14-11-2011)காலை 8.30 மணி வரை வெறும் 79 செ.மீ மழை தான் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
References:
1) http://www.imdchennai.gov.in/rdwr.htm
2) https://docs.google.com/open?id=0B7BLSViXCEMjMjYwNzI2M2QtMDNjNi00MTMyLWJiYmItOTljYjU1MDkyYTI2
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment