Version - 3
இணையத்தில் காண்பது (சமூக) பிணைப்பா அல்லது தனிமனித சுதந்திரமா ? இவைகளையும் இங்கே பார்த்து வருகிறோம். இணையத்திலிருக்கும் சாதக பாதக நிகழ்வுகளை முடிந்த வரை என் தேடலுக்குள் எட்டியதையும் சிக்கியதையும் கோர்வையாக்கி உங்களின் சிந்தனைக்காக வைத்திருக்கிறேன்.
இன்றையச் சூழலில் மிகப் பிரபலமாக இருந்துவரும் எத்தனையோ சமூக பிணைப்பு வலைத் தளங்களில் முதன்மையாகவும் அதோடு நாம் யாவருக்குமே நன்கு அறிந்த "சமூக பிணைப்பு" வலைத் தளமான "facebook.com" தோற்றமும் அதன் அசுர வளர்ச்சியும் வியக்க மட்டும் வைக்கவில்லை அதன் விபரீதம் எந்த அளவுக்கு பரந்து விரிந்து கடை போட்டிருக்கிறது என்பதும் அதிர்ச்சியை கொடுக்கிறது.
"ஃபேஸ்புக்" 2004ம் வருடம் ஜனவரி இரண்டாவது வாரத்தின் இறுதியில் "ஹார்வர்ட் பல்கலைகழக" மாணர்வகள் விடுதி அறையில் தனியாக இருந்த "மார்க் ஜுக்பெர்க்" தனது தொலைந்த நட்புகளை எப்படி மீட்டெடுப்பது என்று மல்லாக்க படுத்து யோசித்ததன் வினையே பின்னர் தனது மற்ற மூன்று நண்பர்களுடன் சேர்ந்து 2004 ஃபிப்ரவரி மாதம்உருவாக்கிய வலைத் தளம்தான் அந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமே என்று உலவவிட்டனர், பின்னர் பாஸ்டன் இன்னும் பிற கல்லூரி மாணவர்களையும் வலைக்குள் சிக்க விட்டனர் அதோடில்லாமல் பள்ளிகளிலும் இதன் ஊடுருவல் எத்தியது.
பள்ளிக்கூட எல்லையைத் தொட்டவுடன்தான் ஒரு கட்டுப்பாடு வைக்கப்பட்டது அதில் 13வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் இதில் இணையலாம் என்று ஆனால் அங்கிருக்கும் வரை அவர்கள் வயதைச் சரியாகத்தான் சொல்லி வந்தனர் பின்னர் இதனை வெளியுலகிற்கு திறந்து விட்டதும் எத்தனை பேர் உண்மையான வயதைச் சொல்லியிருப்பார்கள் ? இன்று 500மில்லியனுக்கு மேல் பயன்பாட்டார்களைக் கொண்டிருக்கிறது இந்த வலைத் தளம் இதுவே தடம் மாறுபவர்களின் மனதையும் கொன்று குவித்து வருவதையும் மறுக்க முடியாது.
ஆரம்பித்தவர்கள் நோக்கம் என்னவோ தொலைத்த நண்பர்களை வலைக்குள் சிக்கவைக்கத்தான், ஆனால் இதனை நாளடைவில் நட்பு என்பதன் அற்புதமான மகிமையைகொச்சைப் படுத்தவும், காமம் கலக்கவும், களவு கற்பிக்கவும், நம்பிக்கை துரோகம் செய்யவும், குழப்பம் உண்டாக்கவும், கணவன் மனைவி உறவுக்குள் ஊடுருவவும், பழிவாங்கிடவும் ஒரு சாரார் பயண்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதில் மிகச் சிலரே நல்ல முறையில் இந்த தளத்தை ஆக்கப் பணிகளுக்கும் அவர்களின் நலன் தேடும் நேசங்களை ஒன்றினைக்கவும் பயன்படுத்துகிறார்கள்.
இதன் பயன்பாடுகள் பற்றி சொல்வதனால் நீண்டு கொண்டே செல்லும், ஆகவே கேள்விகளாக உங்களிடையே ஏதும் உதித்தால் பின்னுட்டங்களாக அனுப்பித் தாருங்கள் அதற்கான பதிலோடு இன்னும் விரிவாக பார்க்கலாம். சரி, இவர்கள் எப்படி இந்த சேவையை இலவசமாகத் தருகிறார்கள? இவர்களின் வெற்றி எங்கே ஆரம்பித்தது?
முதலில் இவர்கள் வைத்த குறி தடுமாறும் இளமையை இலகுவாக வலைத்துப் போட்டு மிகப் பெரிய வலை வட்டம் உருவாக்கினார்கள் அங்கே அவர்கள் கண்டது இளைஞர்களின் அதீத உலக ஆசைகளும், ஆண் பெண் மோகம் இவைகள்தான். இதனையே முலதனமாக வைத்தார்கள் தங்களின் பொழப்புக்கும் இந்த வலைத் தளத்தை இலவசமாக நடத்துவதற்கும், பெரிய பெரிய நிறுவனங்களிடமிருந்து விளம்பரங்களைப் பெறுவதற்கு சேமித்து வைத்திருக்கும் அங்கே பெற்ற அரிய தகவல்களை பரிமாறிக் கொள்ளச் செய்தார்கள்.
இதன் பயன்பாட்டாளர்கள் ஏற்கனவே பதிந்து வைத்திருந்த தகவல்களை அவர்களுக்குத் தெரியாமலே இவ்வகை வலைத் தளங்களை நடத்துபவர்களின் தகவல் பெட்டகத்திலிருந்து அதாவது சுயவிபரங்களின் குறிப்புகளிலிருந்து அவர்களின் ஆண்/பெண் பால், விருப்பு,வெறுப்பு, இடம், மோகம், செலவீனங்கள், குடியிருப்பு, உறவுகள், எவ்வகையில் தேவைகள் நிறைவு செய்வார்கள் இன்னும் நிறைய விபரங்களை எடுத்து அவரவர் நாட்டிற்கு தகுந்த மாதிரி, மாநிலத்திற்கு தகுந்த மாதிரி நேர்படுத்தி ஆங்காங்கே இருக்கும் நிறுவனங்களுக்குக்கு சந்தைபடுத்தும் ஆய்வு (market study) என்ற பெயரில் கொடுத்து அவர்களின் விளம்பரங்களை பெருவதற்கு பயன்படுத்துகிறர்கள்.
அவ்வாறு பெறப்படும் விளம்பரங்களை பயன்பாட்டாளர்களின் விருப்பு வெறுப்புக்குத் தகுந்தார்போல் அவர்கள் ஃபேஸ்புக் வலைத் தளத்திற்கு வருகை தரும் நேரங்களில் தானாக இவ்வகை விளம்பரங்கள் கண்ணுக்குள் சிக்க வைக்கின்றனர் இதில் சிலர் “அட இதென்ன புதுசா இருக்கேன்னு” அந்தச் சுட்டியை தட்டி விட்டால் வலைத் தளம் நடத்துபவர்களின் கல்லா கட்டும் சொட்டு நீர் பாசனம் போல் அங்கே ஒரு சொட்டு இங்கே ஒரு சொட்டு என்று சிறு துளிகள் அப்படியே பெரும் வெள்ளப் பெருக்கெடுத்து நிறையும் அவர்களது கஜானா. இதுமட்டுல்ல ஆன்லைன் கேம்ஸ் இதில் இவர்கள் அடிக்குக்கும் கொள்ளைக்கும் எல்லையில்லை.
உதாரணத்திற்கு வளைகுடாவில் இருக்கும் ஏதாவது ஒரு நாட்டில் உங்களின் நுழைவு மின் அஞ்சல் முகவரியையும் கடவுச் சொல்லையும் இட்டு இந்த வலைத்தளத்திற்குள் சென்றால் இங்கே இருக்கும் நிறுவனங்களின் விளம்பரங்கள் உங்கள் கண்ணில் படும் அவைகள் உங்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றார் போலிருக்கும், அப்படியே ஊருக்குச் சென்றதும் நடுவிக் காட்டுக்கு போயி அங்கே தோப்பில உட்கார்ந்துகிட்டு ஃபேஸ்புக்கை திறந்து மேய்ச்சலில் ஈடுபட்டால் கண்ணுக்குள் சிக்கும் இந்திய நிறுவனங்களின் விளம்பரங்கள், என்ன ஒரு வித்தியாசம் இங்கே எந்த வகை பொருளின் விளம்பரமோ அதுவே அங்கே இந்திய கம்பெனியாக வரும் ஏன் ஒருவேலை உங்களின் ரசனைக்கு தகுந்தார் போல் "தரமான உரம்" என்ற விளம்பரமும் கூட வரலாம்.
மிகப் பெரிய இரண்டு நிறுவனங்களில் இங்கே இவர்களின் செயல்பாடுகளில் நாம் கண்ட அனுபவம். இவர்கள் எப்படி அனுகுகிறார்கள் என்றால், அவர்களின் முன்னுரையே இப்படித்தான் இருக்கும் "உங்கள் பொருட்களை சந்தைப் படுத்த சரியான வழி என்றும்,உங்களின் பொருட்களின் மோகம் அதிகம் எந்த எந்த இடங்களில் இருக்கிறது என்று பட்டியலிடுவதும் அதனை அப்படியே அச்சு எடுத்துவந்து பூச்சாண்டி காட்டுவதும் அதில் முதல் ஒரு இலட்சம் அடி(க்கு) hit இலவசம் அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு அடிக்கும் (hit) இவ்வளவு வரும் என்றுதான் வருவார்கள், முதல் மாதம் நன்றாக இருப்பதாக உணர்வோம்,அடுத்தடுத்த மாதம் அவர்கள் கேட்டுவரும் தொகைகயைக் கண்டால் தலையைச் சுற்ற ஆரம்பிக்கும், மூன்றே மாதத்தில் அந்த இரண்டு நிறுவனங்களும் இந்த விளையாட்டுக்கு நாங்க வரலைன்னு பின் வாங்கிக் கொண்டன.
ஒவ்வொரு அடிக்கும் காசு கொட்டுவது "வீட்டு மணைகளில் மட்டுமல்ல" இந்த இணையக் கடலில் வலைகட்டி உல்லாசம் தேடும் இவ்வலைத் தொட்டிலிலும் ஒவ்வொரு அடிக்கும் (click) காசு இதுதான் இவர்களின் வயத்துப் பொழப்பு ???
இந்தப் பாவப்பட்ட "முகப்புத்தகம்" (facebook.com) தனது கிளை தலைமை அலுவலங்களை அமெரிக்கா, ஐயர்லாந்து, சவுத்கொரியா, நியூஸ்லாந்து மற்றும் இந்தியா (ஹைதராபாத்) வைத்திருக்கிறது. சென்ற வருடம் வரை இதன் வருமானம் 800 மில்லியன் டாலர்கள். மொத்தம் 1789 க்கு மேல் வேலையாட்கள் இருக்கிறார்கள்.
எந்தவிதமான ஆக்கபூர்வமான பனிகளுமில்லாமல் வெறுமனே பொழுது போக்குக்காக பயன்படுத்திவருகிறோம்னு நாம் சொல்லிக் கொண்டாலும் இதன் பாதகங்களை உணர்ந்திருக்கிறோமா ? அதனால் பாதிக்கப் பட்டிருக்கிறோமா ? நமது நேசங்களில் எத்தனை பேர்கள் இதனை சிக்கலாக பார்க்கிறார்கள் ? எத்தனை பேர் சிறப்பாக வலைய வருகிறார்கள் ? இதனால் கண்ட பலன்கள்தான் என்ன ? ? !
3 பின்னூட்டங்கள்:
ஆபாசங்களையும் அசிங்கங்களையும் அரங்கேற்றும் களமாக வளம் வரும் இந்த பேஸ்புக் இணையதளத்தை முற்றிலும் துண்டிக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் அவசியம்.... காரணம் இந்த இணையத்தின் மூலம் அதிக விபச்சாரங்கள் அரேங்கேருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள், லண்டன் போன்ற ஊரில் இந்த வளைத்தலத்தினால் பால்வினை நோய் பெருகி வருவதாக ஒரு விவாதமே நடந்தேறியுள்ளது.... இனியாவது இந்த தளத்தை புறந்தள்ளுமா இந்த சமுதாயம்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
face book - தெரிந்தது இவ்வளவு - தெரியாதது எவ்வளவோ நிச்சயமாக இந்த உலகம் வீணும் விளையாட்டுமே அன்றி வேறு இல்லை. இது இறை மறை-. மறுமை மன்றத்தில் ஏழு கேள்விகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
face book - தெரிந்தது இவ்வளவு - தெரியாதது எவ்வளவோ நிச்சயமாக இந்த உலகம் வீணும் விளையாட்டுமே அன்றி வேறு இல்லை. இது இறை மறை-. மறுமை மன்றத்தில் ஏழு கேள்விகளுக்கு பதில் சொல்லாதவரை இருந்த இடத்தை விட்டும் நகரவே முடியாது. அதில் ஒன்று உன்னுடைய நேரத்தை எவ்வழியில் செலவு செய்தாய். சிந்திக்க வேண்டும், அழியாத மறுமைக்கு நாம் முன் நோக்கி செல்லவேண்டும்
அ.அஹ்மத் தாஹா, அல்-கோபார் - சவுதி அரேபியா.பதில் சொல்லாதவரை இருந்த இடத்தை விட்டும் நகரவே முடியாது. அதில் ஒன்று உன்னுடைய நேரத்தை எவ்வழியில் செலவு செய்தாய். சிந்திக்க வேண்டும், அழியாத மறுமைக்கு நாம் முன் நோக்கி செல்லவேண்டும்
அ.அஹ்மத் தாஹா, அல்-கோபார் - சவுதி அரேபியா.அஸ்ஸலாமு அலைக்கும்,
face book - தெரிந்தது இவ்வளவு - தெரியாதது எவ்வளவோ நிச்சயமாக இந்த உலகம் வீணும் விளையாட்டுமே அன்றி வேறு இல்லை. இது இறை மறை-. மறுமை மன்றத்தில் ஏழு கேள்விகளுக்கு பதில் சொல்லாதவரை இருந்த இடத்தை விட்டும் நகரவே முடியாது. அதில் ஒன்று உன்னுடைய நேரத்தை எவ்வழியில் செலவு செய்தாய். சிந்திக்க வேண்டும், அழியாத மறுமைக்கு நாம் முன் நோக்கி செல்லவேண்டும்
அ.அஹ்மத் தாஹா, அல்-கோபார் - சவுதி அரேபியா.
சகோ மதி,சகோ தாஹா கருத்தே என்னுடையது.இது பற்றி இன்னும் அலசவேண்டும்,மக்களிடம் குறிப்பாக இளைய சமுதாயத்திடம் கொண்டு போக வேண்டும்.இன்ஷா அல்லாஹ்
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment