அதிரையில் நேற்று இரவிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது, இந்த தொடர் மழையின் காரணமாக ஊரில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்புகிறது. தெருவோரங்களில் மழைநீர் வழிந்து ஓடுகிறது.
ஊரில் கிணறு என்று இருந்ததே எங்கே என்று கேட்குமளவிற்கு அவைகள் மறைந்து வந்தாலும் நிலத்தடி நீருக்கு இந்த மழை ஒரு வரப்பிரசாதம்.
மக்களின் இயல்வு வாழ்க்கை வழமைபோல் இருந்தாலும், மழையின் பாதிப்பால் இறுக்கமான நிலையே நிலவுகிறது. பொதுமக்கள் சாலையோரங்களில் கடந்து செல்லும்போது கவணமாகச் செல்வது நல்லது. மின்சார கம்பங்கள் அருகில் நிற்பதோ அல்லது கம்பிகள் கீழே விழ்ந்து கடந்தால் அதன் அருகில் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும் அதோடு உடணடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுக்கவும் வேண்டும்.
6 பின்னூட்டங்கள்:
இந்த மழையிலாவது செக்கடி குளம் நிரம்புமா? வாய்க்கால் நீர் சரியாக வந்து சேராமல் செக்கடியில் தண்ணீர் தரையோடு தரையாக இருப்பதாக கேள்வி! மழை நீர் வீணாகாமல் குளத்துக்குள் பாய்ச்ச சேர்மன் அஸ்லம் முயற்சி எடுப்பாரா?
கிணறா ? அப்படி ஒன்று நமதூரில் இருக்கிறதா ? நவீனமயமாக்கத்தால் மாயமான மற்றுமொரு இயற்கை வளம் ... அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும் நம் பண்டை நாகரீகத்தை.
செக்கடிக் குளத்தை தூர் வாரி ,நீர் சேர முயற்சிக்க வேண்டும்,இதனால் சுற்றுப் புற வீடுகளுக்கு பயனளிக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
முன்பு அ தி மு க ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட மழை நீர் சேமிப்பு தொட்டியில் பிளாஸ்டிக் பை போன்றவைகள் சேர்ந்து நிறைந்து காணப்படும். அவைகள் இருப்பதால் பெய்யக்கூடிய மழை நீர் அதில் இறங்காமல் ஓடி விடும். எனவே அந்தந்த வீட்டுகாரர்கள் அவர்களின் வீட்டு மழை நீர் சேமிப்பு தொட்டியை சுத்தப்படுத்தி வைத்தால் தற்போது பெய்ய்கூடிய மழை நீர் முறையாக சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர் குறையாமல் இருக்க வாய்ப்பாக அமையும் . இது கோடையில் பயனாக இருக்கும் இதை அனைவரும் உணர வேண்டும்.
அடே மதியழகா! கிணறு இருக்கிறதுடா நமதூரில் அதுவும் புதுதெரு ஒருவீட்டில் இதுவரை வற்றியதே இல்லை அதுதான் அல்லாஹ்வின் ரஹ்மத் அல்ஹம்துலில்லாஹ்.
சகோதரர் நூற் அவர்களுக்கு கருத்து பதியும்போது சில ஆக்கங்களை சற்றுமிகைபடுத்தளின்மூலம் மக்களுக்கு அழியா ஆழமுள்ள கருத்தை பதிய வைக்க முடியும்..... இதுதான் மிகுதமான எழுத்தாளர்கள் கையாளும் பனி......அதை தான் நான் கையாண்டுள்ளேன், எனக்கும் தெரியும் மிகச்சில கிணறுகள் நமதூரில் இருக்க தான் செய்கிறது எத்தனை நாளைக்கு அதனை பாதுகாப்பார்கள் அல்லாஹ் தான் அறிவான்..
தங்களுக்கு ஒரு வேண்டுகோள் ஒரு சிறந்த கருத்தாக்கம் ஒருமையில் இருக்க கூடாது அப்படி இருப்பின் அதன் நன்மதிப்பை இழந்து விடும் தாங்கள் "டா " போன்ற வாசகங்களை தவிர்த்தால் நன்றாக இருக்கும்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment