இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளியில் கடந்த 20-11-2011 அன்று நடந்த சிறப்பு செயல் விளக்க கண்காட்சியில் அதிரையைச் சேர்ந்த சகோதரர் மீரான் அவர்கள் உருவாக்கிய மாதிரி கப்பல் பற்றியும் அதன் செயல்முறைகள் பற்றியும் பேராசிரியர் பரக்கத் சார் அவர்கள் அங்கே திரளாக இருந்த மாணவமணிகளுக்கு மிகச் சிறப்பாக ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்கினார்கள்.
இது மற்றுமொரு அங்கீகாரம் சகோதரர் மீரான் அவர்களுக்கு, மாணவர்கள் மத்தியில் அவர்களை கவுரபடுத்தியதோடு அல்லாமல், அந்தக் கப்பலின் செயல்பாடுகளையும் அதனை அவர் உருவாக்கிய சூழலையும் மாணவமணிகளுக்கு விளக்கினார்கள்.
மாணவமணிகள் அனைவரும் ஆர்வத்துடன் கண்டுகழித்தனர், இது அவர்களின் அறிவுத்திறனை தூண்டும் முன்னோட்டமாக அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது.
5 பின்னூட்டங்கள்:
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் மீரான் அவர்களுக்கு, வாழ்த்துக்கள், அவர்களைப்போல் இளைய சமுதாயம் சிறந்து விளங்க வேண்டும்.
இது போன்ற நிகழ்ச்சிகள் தான் பிள்ளைகளின் சிந்தனைதிரனை தூண்டும்.... மற்றும் ஒவ்வொரு வருடத்திலும் குறைந்தது நான்கு முறையாவது இது போன்ற தயாரிப்புகளை செய்வதற்கு ஊக்குவிக்கும் விதமாக பள்ளிகள் ஏற்பாடு செய்தால் பல விஞ்ஞானிகளை பெற வழிவகுக்கும்.
இது போன்ற சகோதரர்களுக்கு ஊக்கமளிக்கும் பரகத் சாருக்கு நன்றிகள்.மேலும் நம் ஊரில் பரவலாக அதிகரித்துவிடும் கேன்சர் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
மரியாதைக்குரிய பேராசிரியர் பரக்கத் சார் சொல்லிடிருப்பதை இங்கு மீண்டும் பதிய விரும்புகின்றேன்.
1) இவர் தனது தொழிலில் படு பிசியாக இருந்தபோதும், இதற்கென நேரம் ஒதுக்கி, இந்த அழகிய கப்பலை உருவாக்கியிருக்கின்றார்.
(என் கருத்து:
இதில் மாணவர்களுக்கான பாடம் - நாம் எவ்வளவு பிசியாக இருந்த போதும், நமக்கு விருப்பமான ஒன்றிற்காக நேரம் ஒதுக்க பழகிக் கொள்ள வேண்டும். இது மூளை அயர்வைப் போக்கவும், தொடர்ந்து நமது வேலைகளில் முழு ஈடுபாட்டுடன் செயல் படவும் உதவும்)
2) இந்த கப்பல் செய்வதற்கென சிறப்புப் பொருட்கள் ஒன்றும் பயன்படுத்தப் படவில்லை. அவரது கடையில் இருக்கின்ற(அதாவது, எளிதில் கிடைக்கும்) பொருட்களை வைத்தே இதனை செய்து இருக்கின்றார்.
(என் கருத்து:
இதில் மாணவர்களுக்கான பாடம் - நம்மை சுற்றி இருக்கும் பொருட்களை மறு உபயோகம் செய்வது குறித்தும், சாதாரண பொருட்களைக் கொண்டு அசாதாரண பொருட்களை உருவாக்க முடியும் என்னும் உத்வேகமும் இதில் கிடைக்கின்றது).
3) இவர் மெத்தப் படித்தவர் இல்லை, இருப்பினும் இத்தகைய அரிய ஒரு செயலை செய்து இருக்கின்றார்
(என் கருத்து:
இதில் மாணவர்களுக்கான பாடம் - எல்லோராலும் சாதிக்க முடியும் என்னும் மன உறுதி வேண்டும். )
4) இந்த கப்பலின் நோக்கம் இரண்டு - சுதந்திர எண்ணமும் தேசப்பற்றும்.
(என் கருத்து:
இதில் மாணவர்களுக்கான பாடம் - நாம் ஒவ்வொரு வரும் பெற்ற சுதந்திரத்தை உரிய முறையில் பேணிக் காத்திடவும், நம் வாழும் தேசத்தின் மீது தேசப்பற்று கொண்டவர்களாக இருக்கவும் உறுதிகொள்ள வேண்டும்)
சகோதரர் மீரான் அவர்களை ஓய்வாக இருந்து நான் பார்த்தது இல்லை, நான் அவர் பக்கத்து வீடு என்ற அடிப்படையில் கூறுகிறேன், அல்ஹம்துலில்லாஹ், மேலும் மேலும் அவர் முழு திறமையை பயன்படுத்தி இன்னும் பிற நல்ல விஷயங்கள் செய்ய வேண்டும்.... வாழ்த்துகள்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment