அதிரை சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
அதிரை பிபிசியில் சமீபத்தில் வந்த ஷிபா hospital revamping விஷயமாக ஜனாப் MST அவர்கள் பேசிய காணொளி வெளிவந்
அப்படி வசூல் செய்யும் பொழுது ஒரு மாத சமபளம் கொடுப்பவர்களுக்கு ஒரு அடையாள அட்டை கொடுக்கப்படும் என்றும், மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு சகாயமாகவும், முன்னுரிமையும் கொடுக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் சில நடை முறை சிக்கல்களால் அவற்றை நடைமுறை படுத்த முடியாமல் போய்விட்டது. முதல் மூன்று வருடம் சிறப்பாக இயங்கி வந்த மருத்துவமனை பின்பு வந்த நிர்வாக சீர்கேடுகளால் மருத்துவமனை நஷ்டத்தில் இயங்க ஆரம்பித்தது. ஜனாப் இக்பால் ஹாஜி அவர்களும், AMS அவர்களும் மற்றும் அஜ தாஜுதீன் அவர்களும் MST அவர்களும் மற்றும் சிலரும் தம் சொந்த பணத்தை போட்டு அதற்கு உயிர் ஊட்டிக்கொண்டு இருந்தார்கள்.
எப்படியாவது நம் சமுதாயத்துக்கு மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கடந்த நான்கு வருடமாக MST மற்றும் JAT அவர்கள் செய்த முயற்ச்சிகளும், தியாகங்களும் அல்லாஹ் ஒருவனே அறிவான். சென்ற வருடம் சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் நம் ஊர் பெரிய மனிதர்கள் கூடிய கூட்டத்தில் இது வரை இலவசமாக செய்து வந்த மருத்துவத்தை வியாபார ரீதியாக செய்தால்தான் தொடர்ந்து செய்ய முடியும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான முதல் முயற்சியாக ஜெட்டாவில் நம் ஊர் மக்களிடம் நம் கருத்தை நானும் ஜனாப் MST அவர்களும் கூறிய பொழுது நம் ஊர் மக்கள் இந்த முடிவுக்கு ஆதரவு தந்ததோடு அவர்களும் முதலீடு செய்ய முன்வந்தார்கள்.
அது முதல் அதற்கான சட்ட ரீதியான் ஆலோசனைகளும் மற்றும் சாத்திய கூறுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டு இப்பொழுது நம் மக்களிடம் நம் திட்டங்களை கூறலாம் என்று முடிவு எடுத்ததன் முதல் முயற்ச்சிதான் ஜனாப் MST அவர்களின் காணொளி. 30 வருடங்களுக்கு முன்பு வசூலித்த பணம் தற்பொழுது மருத்துவமனை கட்டிடமாக உள்ளது. இன்ஷா அல்லாஹ் தற்பொழுது இருக்கும் கட்டிடத்தையும், மருத்துவ சாதனங்களையும் நவீன படுத்தவும், புதிப்பக்கவும் profit/loss என்ற அடிப்படையில் ஷேர் வசூலிக்க முடிவு செய்து உள்ளார்கள். அது பற்றிய விரிவான அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரம் வெளி வரும்.
வஸ்ஸலாம்.
ஷாகுல் ஹமீது.
10 பின்னூட்டங்கள்:
அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல முயற்சி, சென்னை மற்றும் தஞ்சையில் கிடைக்கக்கூடிய மருத்துவ வசதிகள் அதற்கு இணையான அளவில் அதைவிட குறைந்த செலவில் நமது ஊரில் கிடைத்தால் நமது மற்றும் சுற்றியுள்ள ஊர மக்களுக்கு பலனுள்ளதாக இருக்கும். அவரசர சிகிச்சைக்காக திடீரென்று தஞ்சை வரை செல்வதற்குள் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்க சாத்தியங்கள் அதிகம் உண்டு. இது சம்பதந்தமாக கூடுதல் விபரங்கள் பொதுவான முறையில் வெளியிட்டால் பொது மக்களின் பங்களிப்பு எல்லாவகையிலும் அதிகமாக வாய்ப்பு உண்டு.
ஒரு டாக்டர் தலைமை ஏற்றி நடத்தவேண்டும். அந்த தொழிலில் அனுபமுள்ளவர்கள் செய்தால் தான் இன்ஷா அல்லா முன்னேற முடியும். மக்கள் பணம் நம் பணம் அல்ல முயற்சி செய்து பார்போம் என்பதற்கு.
i most welcome Shifa hospital revamp porposal Every Adiraite should behind this progarme
இது ஒரு நல்ல முயற்சி முதலில் நமதூர் பெண்களிடம் விழிப்புணர்வை கொண்டு வர வேண்டும் அதற்கேற்றார் போல் நல்ல மருத்துவர்கள் மற்றும் 24 மணி நேர சேவை போன்றவற்றை முடுக்கி விட வேண்டும் இப்படி செய்தால் இன்ஷா அல்லாஹ் நமதூர் மட்டுமல்ல நம்மை சுற்றியுள்ள அனைத்து ஊர்களும் பலன் பெரும்....
ஆரம்பிப்போதோடு விட்டு விடாமல் அதை ஒழுங்கான முரயில் பராமரிப்பது மிகவும் அவசியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்
let this one be useful for everyonr
most welcome
போன வருடம் ஜெத்தாவில் அய்டா கூட்டத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டதில் நானும் ஒருத்தன்.. அப்படியொரு கூட்டத்தை நாங்கள் இன்று வரை காணமுடியவில்லை என்பதுதான் உண்மை. அத்தோடு உங்கள் புதிய முயற்சிகள் அன்றே என்னை மெய் சிலிர்க்க வைத்தது.. ஷேரில் சேர பலரும் எதிர்பார்த்து இருந்தனர்.. இன்றும் எதிர்பார்த்தே இருக்கின்றோம்..
தஞ்சையில் 8 ஆண்டுகள் என் சொந்தக்கார வீட்டில் தங்கி படித்திருக்கின்றேன். மாதம் மாதம் நமதூர் காரர்களை பலவித மருத்துவமனையில் பார்த்திராத மாதமும், பார்த்திராத மருத்துவமனையே கிடையாது எனலாம்.. இறுதியாக ஒரு மாதத்திற்கு முன்கூட்ட விடுமுறையில் வந்தபோழுதுகூட விபத்தில் அடிப்பட்ட மறைக்கா மற்றும் இஸ்மாயிலை தஞ்சையில் பார்க்க நேர்ந்தது. ஆனால் நான் பார்த்த மருத்துவமனைகளில் ஷிஃபா வைப்போல் அதிக நிலப்பரப்பு உள்ள, மருத்துவர்த்திற்கு உகந்த ஒரு இடம் அங்கில்லை என்றே கூறலாம்.. நாம் இதை சரியாக பயன்படித்துக்கொள்ளமுடியவில்லை என்பதே வருந்தத்தக்க செய்தி..
இது ஒரு நல்ல முயற்சி முதலில் நமதூர் பெண்களிடம் விழிப்புணர்வை கொண்டு வர வேண்டும்
அனைத்து முஹல்லாஹ் ஜமாத்தையும் கலந்து பேசி ஷிபா வளர்ச்சிக்கு உதவேண்டும்.நடுத்தெரு பகுதி மக்கள் தவற,வேறு ஏரியா மக்களே ஷிபா கமிட்டியில் இல்லை.இந்தக் குறையை நீக்குங்கள்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment