சமீபத்தில் தமிழகத்தில் பரவலாக பெய்த வடகிழக்கு பருவ மழையினால் பல ஆறுகள் நிரம்பி வழிகின்றன. தஞ்சை மாவட்டத்திலும் மழை வெளுத்து வாங்கியது, இதையடுத்து நம் ஊர் குளங்களை நிரப்பும் CMP வாய்க்கால்களிலும் நீர் வரத்து வந்து கொண்டிருக்கின்றது.
இதன் மூலம் செக்கடி, ஆலடி, மன்னப்பம் ஆகிய குளங்கள் நிரம்பி வருகின்றன். இந்நீர் வரத்து இன்னும் ஒரு வாரத்திற்கு நீடித்தால் மேற்குறிப்பிட்ட அனைத்துக்குளங்களும் முழுமையாக நிரம்பிவிடும்.
இன்று பகல் தகவலின் படி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
7 பின்னூட்டங்கள்:
அப்ப கோமளம் கட்டி குளிக்க ரெடியாக வேண்டியதுதான்.
அஸ்ஸலாமு அலைக்கும்
நம்மூரிலுள்ள நீர் நிலைகள், இயற்கை காட்சிகளின் புகை படங்களை அடிக்கடி வலையேற்ற்ங்கள். கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.
பசுமையாக இருக்கும் இந்த இனிய மாலைப்பொழுதில், இந்த
ஆலடியில் ஒரு சில காலடிகள் இருக்கும்.
ஆனால் இரவு நேரம் நெருங்கினால், இந்த
காலடிகள் தல்லாடிகலாக மாறும்.
காலடிகள் தள்ளாடி, ஆலடியில்
மூழ்கடியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
நில அடி பார்ப்பவர்களே.....
கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்
உங்களை நம்பி பலக்கோடி காத்திருக்கிறது
thuklaknews@gmail.com
அஸ்ஸலாமு அலைக்கும்
அதிரையில் உள்ள தண்ணியடிகளுக்கு துக்ளக்கின் சரியான சொல்லடி.
நீர் வரத்து அதிகரிப்பது சந்தோசமளிக்கிறது... மழை தொடர்ந்தால் தான் நம் அனைவரின் மின் பற்றாக்குறையும் குறையும் நபிகள் நாயகம் (ஸல்) மழை பொழியும்போது இந்த துஆவை ஓதினார்கள் "அல்லாஹும்ம இன்னி தாயிபன் நாயிமா" இதை ஓதினால் மழைக்காலத்தில் மலையோடு சேர்த்து நன்மையையும் பெறலாமே...
அதிரையில் உள்ள தண்ணியடிகளுக்கு வசதியாக! அதிரையில் இன்னுமொரு ஒயின்ஷாப் கட்டிடபனியில் ரெடியாயிகொண்டு இருக்கிறது,இடம் ராஜாமடம் போகும் வழியில்( ECR ROAD ),அதாவது பெரிய ஏறி அருகில்.அல்லாஹுதான் நமது எல்லோரையும் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் - எனபது அந்தக்காலம்.
குடி மடியை நிரப்பும், குடிப்பழக்கம் நாட்டுக்கு வருவாய் கொடுத்து, வெட்டி வாசிகளுக்கு இலவசமாக கொடுக்கும் - என்பது இந்தக்காலம்.
இப்பொழுது சினிமா, சீரியல் மற்றும் எல்லா மீடியாக்களும் எல்லா இனத்து மக்களும் குடித்து குடித்து, அவரகளுடைய வாழ்க்கை சீரழிந்து நாசமா போனாலும் பரவாயில்லை, எது எப்படி ஆனாலும் வருவாய் கிடைத்தால் போதும்.
அதிலிருந்து கிடைக்கும் வருவாயை, நமதூர் அரசியல்வாதிகள் உட்பட எல்லா அரசியல்வாதிகளும், தன்னுடைய வாக்கு சேகரிப்புக்காக இலவச லேப்டாப், மிசி, கிரைண்டர் என்று நம் எல்லோரையும் கொச்சைபடுத்தியது தான் கேவலத்திர்க்கே கேவலம்.
*****துக்ளக் நியூஸ் குழுமம்*****
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment