அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Friday, October 7, 2011

பட்டுக்கோட்டை அருகே பஸ் கவிழ்ந்தது 4பேர் மரணம் -மீட்புப்பணியில் தமுமுக

பட்டுக்கோட்டையில் நேற்று காலை பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 53  பயணிகள் படுகாயம் அடைந்தனர்.    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று காலை 10 மணி அளவில் வேகமாக வந்து கொண்டு இருந்தது. பஸ்சில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் பட்டுக்கோட்டை மகாராஜா சமுத்திரம் காட்டாற்று பாலம் வளைவில் திரும்பியது. அப்போது பஸ் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ் பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.

இதனால் பயணிகள் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இந்த விபத்தில் 53 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமன்னையில் சேர்க்கப்பட்டவர்களில் உயிருக்கு போராடியவர்களை தஞ்சை கொண்டுசெல்ல அதிரை காவல்துறை ஆய்வாளர் செங்கமலைக் கண்ணன் அவர்கள் அதிரை தமுமுக தலைவர் உமர்தம்பி அவர்களை தொடர்புகொண்டு உதவுமாறு கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் மற்றும் மதுக்கூர் தமுமுக ஆம்புலன்ஸ் விரைந்துசென்று உயிருக்கு போராடியவர்களை தஞ்சை அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அதிரை தமுமுக ஆம்புலன்ஸ்ஸில் மட்டும் காயம் அடைந்த 8 பேரை ஏற்றி சென்றனர் .

தஞ்சை கொண்டு சென்றவர்களில் நான்கு பேர் மருத்துவமனையில் மரணம் அடைந்தனர் . பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த காவல்துறை மற்றும் உளவுத்துறை சார்ந்தவர்களில் ஒருவர் "எங்கள் சமுதாயத்தில் பணம் இருக்கும் அதிகமான  மக்கள் வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிக்கின்றனர் நிங்கள் தான் இதுபோன்று ஆம்புலன்ஸ் வாங்கி விட்டு சேவை செய்கின்றீர்கள்" என்று கூறினர் . 

தமுமுகவின் இந்த பணியை அனனவரும் பாராட்டினர் . தமுமுகவின் ஆம்புலன்ஸ்க்கு உதவிசெய்தவர்கள் அதற்காக பாடுபட்ட அனனவருக்கும் இன்ஷாஅல்லாஹ் மறுமையில் கூலி நிச்சயம் .

அதிரை பிபிசி செய்திகளுக்காக :முக்தார்

2 பின்னூட்டங்கள்:

abdul said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Thanks to Adirai BBC for instant update.

riyas said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஆம்புலன்ஸ் வாங்க உதவிய அனைவர்க்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக ஆமீன்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.